

இந்தியாவில் இரவில் ஒளி வீசும் கடற்கரைகள் இருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், சில கடல்கரைகளில் இரவு நேரங்களில் இந்த அரிய காட்சி தோன்றி மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றது. இவ்வாறு கடல் நீல நிறத்தில் ஜொலிப்பதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை பார்ப்போம். கடலில் நம் கண்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஏகப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடலில் வாழும் ஒரு செல் உயிரியான ‘டைனோ ப்ளாச்சுலேட்’ (dinoflagellates), கடல் மின்மினி பூச்சி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் இரவில் சில நேரங்களில் கடல் ஜெலிக்கும் அரிய நிகழ்வுக் காரணமாகின்றது.
இந்த பாசி வகையானது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் ஒளிர்கின்றதோ அதுபோல் இரவில் இருளில் ஒளி வீசும் தன்மையை இயற்கையிலேயே பெறுகிறது.
இந்த ஒரு செல் உயிரியின் உடலில் காணப்படும் வேதிப்பொருளான 'லூசிபெரின், லூசிபரேஸ்’ ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி உருவாகின்றது. இதற்கு பெயர்தான் பயோலுமினெசென்ஸ் (Bioluminescence). இதனால் இரவில் ஒளி வீசும் கடற்கரையை ‘பயோலுமினெசென்ட் பீச்’ என்று கூறுகிறார்கள். தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் இந்த உயிரினம் ஒளிர்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில கடற்கரைகளிலும், உலகில் பல பாகங்களிலும் உள்ள கடற்கரைகளிலும் இப்படி நிகழ்வது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புருஷ்வாடி (purushawadi) எனும் பழங்குடியினர் வாழும் கடற்கரை கிராமத்தில் வருடந்தோறும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த பகுதி கடற்கரை நீல நிறத்திற்கு மாறி வர்ண ஜாலம் காட்டுகிறது. புருஷ்வாடியில் மின்மினிப் பூச்சி திருவிழா (Purushwadi Fireflies Festival) கொண்டாடுகின்றனர்.
மகாராஷ்டிராவில், குறிப்பாக அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள புருஷ்வாடி கிராமத்தில் பருவ மழை தொடங்கும் மாதங்களில் (பொதுவாக மே - ஜூன்) நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இதில், ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஒத்திசைவாக ஒளிர்ந்து, இரவை வண்ணமயமாக மாற்றுகின்றன. இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இந்தத் திருவிழா, மின்மினிப் பூச்சிகளின் இனப்பெருக்க காலத்துடன் தொடர்புடையது.
தமிழ்நாட்டில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இந்த மாதிரி நிகழ்வு கடற்கரை இரவில் ஒளிர்வது உண்மைதான். ஆனால், அது ஒரு அரிய இயற்கை நிகழ்வு (பயோலுமினசென்ஸ்) காரணமாக அவ்வப்போது மட்டுமே நிகழ்கிறது. கடைசியாக 2024 அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பு 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
காண்போரை பிரம்மிப்பூட்டும் கடற்கரை இரவில் நீல நிறத்தில் ஒளிரும் மாற்றம் மிகவும் வரவேற்பைப் பெறுவது லட்சத்தீவு பகுதியில் உள்ள பங்காரம் தீவு பகுதிகளில்தான் என்கிறார்கள். பயோலுமினசென்ட் பிளாங்க்டனால் இரவில் கடற்கரைகள் ஒளிரும் பூமியில் உள்ள சில இடங்களில் பங்காரமும் ஒன்றாகும். இந்த அரிய இயற்கை நிகழ்வை நிலவில்லாத இரவுகளில், குறிப்பாக பருவமழைக்கு முந்தைய கோடையில் காணலாம், இது இரவு நேர கடற்கரைப் பயணிகளுக்கு ஒரு மாயாஜால, அமானுஷ்ய அனுபவத்தை உருவாக்குகிறது.
அந்தமான் தீவுகளில், குறிப்பாக ஹேவ்லாக் தீவு மற்றும் நீல் தீவு போன்ற இடங்களில், இரவில் கடலில் 'பயோலுமினென்சென்ஸ்' (Bioluminescence) எனப்படும் இயற்கை ஒளிர்வு நிகழ்வு ஏற்படுகிறது. இது நீல நிற ஒளியுடன் மின்னும் கடல் அலைகளை உருவாக்குகிறது, மேலும், இந்த அரிய காட்சியை அனுபவிக்க நவம்பர் முதல் மே வரையிலான காலம் சிறந்தது. நிலவு இல்லாத இரவுகளில் இதை தெளிவாகக் காணலாம். பொதுவாக, இந்த நிகழ்வு கோடைக் காலங்களில் மற்றும் இலையுதிர் காலங்களில் (செப்டம்பர் அல்லது மார்ச்) நிகழ்கிறது. பொதுவாக, அமாவாசை தினத்தில் இந்த நிகழ்வு நடக்கும் என்கிறார்கள்.