மாங்கொட்டையில் இருந்து மதிப்புமிக்க பொருட்கள் தயாரிப்பு - பீகார் விஞ்ஞானிகள் சாதனை!

மாம்பழக் கொட்டைகள் மற்றும் தோல்களில் இருந்து பட்டர், பவுடர் மற்றும் கார்பன் குவாண்டம் டாட்ஸ் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் - பீகார் விஞ்ஞானிகள் சாதனை!
மாங்கொட்டை | Mango waste processing and innovation in the lab
மாங்கொட்டை | Mango waste processing and innovation in the labAI Image
Updated on

பீகார் விவசாயக் கழக விஞ்ஞானிகள் மாம்பழக் கொட்டைகளைக் கொண்டு உணவு மற்றும் அழகு சாதனத் துறைகளுக்குத் தேவையான பட்டர் ஆயில், பவுடர் தயாரிக்கும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

பீகார் விவசாயக் கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், ஒரு புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி, மாங்கொட்டையிலிருந்து மாங்கோ பௌடர் மற்றும் பட்டர் ஆயிலை தயாரிக்கிறார்கள். மாம்பழத்தை உண்ட பிறகு பெரும்பாலும் கொட்டைகள் தூக்கி எறியப்படுகின்றன. பீகார் விவசாயக் கழக விஞ்ஞானிகள் Refractance Window Drying என்ற முறையில் மாங்கொட்டையின் ஈரத்தை நீக்கி பௌடர் தயாரிக்கிறார்கள். மேலும் cold press முறையில் மாங்கொட்டையிலிருந்து பட்டர் ஆயிலும் தயாரிக்கப்படுகிறது.

பீகார் விவசாயக் கழகம் 'குப்பையில் இருந்து செல்வம்' என்ற ப்ராஜெக்ட்டில் இத்தகைய மாறுபாடுகளை விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி குறிப்பாக ஜர்டாலு மாம்பழ வகைகளிலிருந்து பௌடர் மற்றும் பட்டர் ஆயில் தயாரிப்புகள் செய்யப்படுகின்றன.

இந்த ப்ராஜெக்ட் மூலம் உணவு பதப்படுத்துதல், அழகு சாதனங்கள், பயோடெக்னாலஜி போன்ற துறைகளுக்கு பலவிதமான வாய்ப்புகள் மாங்கோ பௌடர் மற்றும் பட்டர் ஆயில் தயாரிப்பு மூலம் சாத்தியமாவதாகத் தெரிகிறது.

இந்த புதிய முயற்சியின் மூலம் குப்பைகளாகக் கருதப்படும் பொருட்கள் நன்கு பயன்படுத்தப்பட்டு நம் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் சாத்தியமாக்கும் என நம்பிக்கை உள்ளது. மாங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பட்டர் கோகோ பட்டர் போன்று கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்ததாக இருக்கிறது.

மாங்கொட்டை | Mango processing and innovation in the lab
மாங்கொட்டை | Mango processing and innovation in the labAI Image

மேலும் இதில் அதிக அளவு ஓலிக் அமிலம், ஸ்டியரிங் மற்றும் பால்மிடிக் அமிலங்களும் நிறைந்துள்ளதால் இவை சாக்லேட் தயாரிப்புக்கு, பேக்கரி பொருட்கள் தயாரிப்பிலும், அழகு சாதனங்களிலும் பயன் படுவதாக அறியப்படுகிறது. இந்த தயாரிப்பு அதிகரிப்பதால் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன் மாம்பழ வேஸ்டைத் தவிர்த்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் முடியும்.

மேலும் பீகார் விவசாயக் கழகம் சார்ந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கார்பன் க்வான்டம் டாட்ஸ் (carbon quantum dots) என்ற டெக்னாலஜி மூலம் மாம்பழத் தோலிருந்து ஒருவகை சின்தெடிக் பொருளை தயாரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
புவி வெப்பமடைதலை தடுக்கும் கங்காருவின் ஜீரண மண்டலம்! எப்படி?
மாங்கொட்டை | Mango waste processing and innovation in the lab

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மாங்கொட்டையில் 65 சதவீதம் ஸ்ட்ர்ச்சும், 15சதவீதம் கொழுப்பும் இருப்பதாகத் தெரிகிறது‌. இந்த கொழுப்பை பேக்கரியில் பயன்படுத்தலாம்‌; மேலும் பட்டர் ஆயில் தொழிற்சாலைகளில் பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது‌. மேலும் மாங்கொட்டையிலிருந்து ஹைட்ரோ ஜெல் என்ற தயாரிப்பின் மூலம் உணவு பார்க்கிங்கில் பயன்பாட்டல் முக்கியத்துவம் பெறுகிறது.

மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோல்கள் மேற்கூறிய டெக்னாலஜிகள் மூலம் மதிப்புமிக்க பொருட்களாக மாற்றப் படுவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புதிய டெக்னாலஜியில் பயன்பாட்டின் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளும் நல்ல மேம்பாட்டை அடையமுடியும் என்று நம்பப்படுகிறது.

மாங்கொட்டை பௌடரின் நன்மைகள்:

  • இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகம் உள்ளதால் கெட்டகொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதனால் இதயமேம்பாடு வலுப்படும்.

  • இதில் அதிக நார்சத்து உள்ளதால் எடைக் குறைப்புக்கு சிறந்தது‌ இதை உண்பதால் வயிறுநிரம்பிய உணர்வு ஏற்படும்.

  • இதில் பி12 சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இது இரத்தச் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும். கண் பார்வை தெளிவடையும்.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு நிற உதட்டோடு ஆப்பிரிக்க காட்டில் சிக்கிய அசத்தல் குரங்கு!
மாங்கொட்டை | Mango waste processing and innovation in the lab
  • இதை சிறிது தேனுடன் கலந்து சாப்பிட வயிறு அழற்சி மற்றும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்‌.

  • இது செரிமான சக்தியை மேம்படுத்தும்.

  • இதைக் கொண்டு பல் துலக்க, கெட்ட வாடை நீங்கி ஈறுகள் வலுவடையும்.

  • மாம்பழக் கழிவுகளை மதிப்புமிக்கப் பொருட்களாக மாற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதிசெய்ய முடியும்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com