அல்டிமேட் சுவையில் மஷ்ரூம் பெப்பர் மசாலா - கேரட் சட்னி 'க்விக்கா' செய்யலாம் வாங்க!

Mushroom Pepper Masala-Carrot Chutney
Mushroom Pepper Masala-Carrot Chutney
Published on

ன்றைக்கு சுவையான மஷ்ரூம் பெப்பர் மசாலா மற்றும் கேரட் சட்னி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மஷ்ரூம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

வெங்காயம்-4

தக்காளி-1

மஷ்ரூம்-1கப்.

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

மஷ்ரூம் மசாலா செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய 4 வெங்கியத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கிவிட்டு ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி மல்லித்தூள், உப்பு தேவையான அளவு  சேர்த்து பிறகு சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ரெசிபி - கேரளா ஸ்டைல் நெய் சோறு + அப்பளப்பூ குழம்பு
Mushroom Pepper Masala-Carrot Chutney

இப்போது மஷ்ரூம் 1 கப் இதில் சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும். மிக்ஸியில் மிளகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து அதை மஷ்ரூமில் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவு தான். சுவையான மஷ்ரூம் பெப்பர் மசாலா தயார்.

நீங்களும் இந்த சூப்பர் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கேரட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

வெங்காயம்-1

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-4.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

தாளிக்க,

எண்ணெய்-சிறிதளவு.

கடுகு-1தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

இதையும் படியுங்கள்:
இனிப்போ இனிப்பு ரெசிபிஸ் - ரோஸ் பாயாசம்; சர்க்கரை போண்டா
Mushroom Pepper Masala-Carrot Chutney

கேரட் சட்னி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு அதில் கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து வதக்கவும். இப்போது இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4 சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய கேரட் 2, கொத்தமல்லி சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் டேஸ்டியான கேரட் சட்னி தயார்.

இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com