உலகின் மிகப்பெரிய ‘பேரரசி’ வண்ணத்துப் பூச்சி மொனார்க்: இயற்கையின் இரு அதிசயங்கள்!

தங்கம், நீலம், பச்சை நிறங்களில் மின்னும் ஆண் குயின் அலெக்ஸாண்ட்ரா மற்றும் கம்பீரமான பழுப்பு நிற பெண் பூச்சி, பறவையைப் போல் பறக்கும் வலிமை கொண்டவை; ஆரஞ்சு இறக்கைகளில் கருப்பு நரம்புகள், வெள்ளை புள்ளிகளுடன் மானார்க் வண்ணத்துப் பூச்சி நீண்ட தூரப் பயணத்தின் சாம்பியனாக திகழ்கிறது
monarch-butterfly
monarch-butterfly
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

யற்கையின் படைப்பில் வண்ணத்துப் பூச்சிகள் மிகவும் மென்மையானவை, அழகானவை. அவற்றில் அளவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் இரண்டு முக்கிய இனங்களைப் பற்றி இங்கு காண்போம்.

உலகின் மிகப்பெரிய விஸ்வரூபம்: உலகின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி என்ற பெருமை குயின் அலெக்ஸாண்ட்ரா பேர்ட்விங் (Queen Alexandra’s Bird wing) இனத்தையே சாரும். இது பப்புவா நியூ கினியாவின் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இறக்கைகள் சுமார் 25 முதல் 28 சென்டிமீட்டர் வரை விரியக்கூடியவை. ஒரு சிறிய பறவையின் அளவில் இது இருப்பதால், இதைப் பார்ப்பதே ஒரு வியப்பான அனுபவம். இவை மிகவும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ்வதால், உலகிலேயே அரிதான மற்றும் அழிந்து வரும் இனமாக இவை கருதப்படுகின்றன.

நீண்ட தூரப் பயணத்தின் சாதனையாளர்: மானார்க்

இது அளவில் சிறியதாக இருந்தாலும் புகழில் குயின் அலெக்ஸாண்ட்ராவிற்கு சளைத்தது அல்ல மானார்க் (Monarch) வண்ணத்துப் பூச்சிகள். இவை வட அமெரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

வலசை போதல் (Migration): மானார்க் வண்ணத்துப் பூச்சிகள் அவற்றின் அபாரமான பயணத் திறனுக்காக அறியப்படுபவை. குளிர்காலத்தைத் தவிர்க்க இவை கனடாவிலிருந்து மெக்சிகோ வரை சுமார் 4,000 கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்கின்றன.  ஆரஞ்சு நிற இறக்கைகளில் கருப்பு நிற நரம்பு போன்ற கோடுகளும், வெள்ளை நிறப் புள்ளிகளும் கொண்ட மானார்க் வண்ணத்துப் பூச்சிகள், காண்பதற்குக் கண்கவர் தோற்றம் கொண்டவை.

இதையும் படியுங்கள்:
அறிவியலாளர்களையே குழப்பிய விசித்திர மீன்... இதன் ரகசிய வாழ்க்கை பற்றி தெரிந்தால் மிரண்டு போவீர்கள்!
monarch-butterfly

வண்ணத்துப் பூச்சிகளின் உலகில் “பேரரசி” என்று அழைக்கப்படும் குயின் அலெக்ஸாண்ட்ரா பேர்ட்விங் (Queen Alexandra’s Birdwing), அதன் உடல் அமைப்பிலும் நிறங்களிலும் ஒரு கலைப்படைப்பு போலவே இருக்கும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளுக்கு இடையே தோற்றத்தில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் அழகை இவ்வாறு விவரிக்கலாம்:

ஆண் வண்ணத்துப் பூச்சியின்  இறக்கைகள் தங்கம் போன்ற மஞ்சள், எலக்ட்ரிக் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் கலந்து மின்னும். சூரிய வெளிச்சம் படும்போது இந்த நிறங்கள் ஒருவித உலோக ஜொலிப்பைக் (Metallic luster) கொடுக்கும். இதன்  இறக்கைகள் நீண்டதாகவும், ஒரு பறவையின் இறக்கையைப் போன்ற கூர்மையான அமைப்பைக் கொண்டிருக்கும்.

பெண் வண்ணத்துப் பூச்சிகள் அளவில் மிகப்பெரியவை. இவற்றின் அழகு அதன் கம்பீரமான தோற்றத்தில் உள்ளது.  பெண் பூச்சிகள் பெரும்பாலும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகளின் ஓரங்களில் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலான முக்கோண வடிவப் புள்ளிகள் வரிசையாக அமைந்திருக்கும்.  மார்புப் பகுதியில் சிவப்பு நிற ரோமங்கள் போன்ற அமைப்பு காணப்படுவது இதன் தனிச்சிறப்பு. இது ஒரு ஆபரணம் அணிந்தது போன்ற தோற்றத்தைத் தரும்.

பறக்கும் விதம்:  இதன் இறக்கைகள் மிகவும் வலிமையானவை. சாதாரண வண்ணத்துப் பூச்சிகளைப் போல வேகமாகச் சிறகடிக்காமல், ஒரு சிறிய பறவையைப்போல நிதானமாகவும் கம்பீரமாகவும் காற்றில் மிதந்து செல்லும் அழகு காண்போரைக் கவரும்.

அரிதான தோற்றம்: இவை பப்புவா நியூ கினியாவின் மிக உயரமான மரங்களின் உச்சியில் (Canopy) மட்டுமே பறக்கக் கூடியவை. காடுகளின் பசுமைக்கு நடுவே, மின்னும் நீல நிறத்திலும் பிரம்மாண்டமான பழுப்பு நிறத்திலும் இவை பறந்து செல்வது ஒரு தேவதைக் கதையில் வரும் காட்சியைப்போல இருக்கும்.

இதன் அழகு ஆண் பூச்சி ஒரு விலைமதிப்பற்ற வைரத்தைப் போல ஜொலிக்கும், பெண் பூச்சி ஒரு கம்பீரமான அரசியைப்போல காட்சியளிக்கும். இதுதான் குயின் அலெக்ஸாண்ட்ராவின் உண்மையான அழகு.

logo
Kalki Online
kalkionline.com