உங்கள் வண்டி ஏன் 'ஸ்மோக்' பண்ணுதுன்னு தெரியுமா? மெக்கானிக் சொல்லாத ரகசியங்கள்!

Motorcycle and Car
Motorcycle and Car
Published on

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் முதலான வாகனங்கள் தற்காலத்தில் நம் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்ட ஒரு அத்தியவசியமான விஷயமாகும். நமது வாகனங்கள் நம்மைச் சுமந்து சென்று நமது அன்றாட வாழ்வில் பெரிதும் உதவுகின்றன. நாம் நம் உடலை கவனிப்பதைப் போல நமக்கு அன்றாடம் உதவும் வாகனங்களையும் முறையாக பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நாம் வாகன நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் பயணிக்கும் போது நமக்கு முன்னால் செல்லும் சில வாகனங்கள் அளவிற்கு அதிகமாக கறுப்பு நிறத்தில் புகையை வெளியேற்றியவாறே செல்லுவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். இது வாகனத்திற்கும் நமக்கும் கேடு விளைவிக்கும். இதுமட்டுமின்றி இதனால் சுற்றுச்சூழலும் மாசடையும் அபாயமும் உள்ளது. ஒரு வாகனம் ஏன் அளவிற்கு அதிகமாக புகையை வெளியேற்றுகிறது என்பதை நாம் இந்த பதிவில் சற்று பார்ப்போம்.

வாகனங்களில் உள்ள ஏர் ஃபில்டர் (Air Filter) என்ஜினுக்குள் செல்லும் காற்றை சுத்தப்படுத்தி தூசு மற்றும் அழுக்குகள் என்ஜினுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இது எரிபொருள் செயல்திறனை (Mileage) மேம்படுத்தி என்ஜின் ஆயுளை நீட்டித்து வாகனத்தின் சீரான செயல்பாட்டையும் எஞ்சினின் நீண்ட ஆயுளையும் உறுதி செய்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபில்டரை சுத்தம் செய்யவேண்டும். ஃபில்டர் பழுதடைந்திருந்தால் அதை உடனே மாற்ற வேண்டும். ஏர் ஃ“பில்டரில் அடைப்புகள் இருந்தாலும் பழுதடைந்திருந்தாலும் வாகனத்திலிருந்து அதிக அளவில் புகை வரக்கூடும்.

இதையும் படியுங்கள்:
செத்துப்போச்சுனு நினைச்சா திரும்ப வந்து கெத்து காட்டுதே... இந்த பேய் பூனையின் பின்னணி என்ன?
Motorcycle and Car

இரண்டு ஸ்ட்ரோக் (Two Stroke) வாகனங்களில் வழக்கமாக சற்று அதிக அளவில் புகை வெளியேறும். இத்தகைய வாகனங்களில் பெட்ரோலையும் ஆயிலையும் கலந்து உபயோகிப்பது வழக்கம். பெட்ரோலுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ஆயிலைக் கலந்தாலும் அதிக அளவில் புகை வெளியேறக் கூடும். எனவே தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே பெட்ரோலுடன் ஆயிலைக் கலந்து உபயோகிக்க வேண்டும். இது அதிக புகை வெளியேறுவதைக் குறைக்கும்.

இஞ்சின் ஆயிலை வாகன தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் நிரப்பவேண்டும். இதனால் இஞ்சின் சிறந்த முறையில் இயங்கும். ஆயுளும் அதிகரிக்கும். மேலும் புகையும் சரியான அளவில் வெளியேறும்.

வானகத்தில் உள்ள பிஸ்ட்ன் ரிங்குகள் தேய்ந்து போயிருக்கலாம். அல்லது உடைந்து போயிருக்கலாம். இதை நாம் வழக்கமான பராமரிப்பின் வாயிலாகக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். மேலும் ப்யூயல் இஞ்ஜெக்க்ஷன் பம்ப்பில் (Fuel Injection Pump) கோளாறு இருந்தாலும் அதிக புகை வெளியேறக் கூடும். மேலும் நாசில்களில் (Nozzles) அடைப்பு இருக்கலாம்.

நாம் நமது வாகனங்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து முறையாக முழுமையாக பராமரிப்புப் (Routine Preventive Maintenance) பணிகளைச் செய்ய வேண்டும். இப்போது வண்டி நன்றாக ஓடுகிறதே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. வாகனத்தில் உள்ள பிரச்சினைகளை தொடக்கத்தில் கவனித்தால் செலவும் குறையும். வாகனமும் நீண்ட நாட்கள் உழைக்கும்.

இதையும் படியுங்கள்:
மழை வருமா? பயிர் வாடுமா? பூச்சிகள் தாக்குமா? வழிகாட்டும் வான்வழி வாகனங்கள்!
Motorcycle and Car

புகை அதிக அளவில் வெளியேறினால் உங்கள் வாகனத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்று அர்த்தம். இதை உடனே நீங்கள் சரி செய்ய வேண்டும். இது நமக்கும் நல்லது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. சுற்றுச்சூழலும் பாதிப்படையாமல் சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com