மேகங்களுக்கு பின்னாடி இவ்வளவு ரகசியங்களா? அதிர வைக்கும் உண்மைகள்!

வானத்தில் உள்ள மேகங்கள் பற்றிய ஆச்சரியமூட்டும் 9 ரகசியங்கள் மற்றும் பூமியைக் காக்கும் அவற்றின் விண்கல அறிவியல் உண்மைகளை அறியுங்கள்.
மேகங்கள் | clouds
மேகங்கள் | cloudsImage credit: Chatgpt
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

மேகங்களுக்குப் பின்னால் இவ்வளவு பிரம்மாண்டமான அறிவியலும் ஆச்சரியமான மர்மங்களும் ஒளிந்திருக்குமா? உலகப் புகழ்பெற்ற நாசா மற்றும் நோவா ஆராய்ச்சித் தகவல்களின் அடிப்படையில், நம் பூமியைக் காப்பாற்றும் இந்த 9 மிரள வைக்கும் மேக ரகசியங்களை இந்தப் பதிவில் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

சும்மா வானத்தை வேடிக்கை பார்க்கிறீங்களா? இந்த 9 மேக ரகசியங்கள் தெரிஞ்சா அப்படியே வாயடைச்சுப் போயிடுவீங்க! நம்ம எல்லாருக்குமே சும்மா வானத்தை வேடிக்கை பார்க்கிறதும், மேகங்கள் என்னென்ன உருவத்துல இருக்குன்னு கற்பனை பண்ணி ரசிக்கிறதும் ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனா, அந்த மேகங்களுக்குப் பின்னாடி இவ்வளவு சுவாரஸ்யமான அறிவியலும், நம்ம உலகைக் காக்கும் ரகசியங்களும் ஒளிஞ்சிருக்குன்னு பார்க்கலாமா!

அதைப்பத்தி சும்மா ஏனோ தானோன்னு சொல்லாம, ஸ்பேஸ் பத்தி ஆராய்ச்சி பண்ற உலகத்துலயே டாப் இடமான நாசா (NASA) மற்றும் நோவா (NOAA) வோட ஒரிஜினல் வெப்சைட் தகவல்களோட ரொம்ப கேஷுவலா நாம பார்ப்போம். பொதுவா வானம் நீல கலர்ல இருக்குறப்போ காத்துல ஈரப்பதம் கம்மியா இருக்குன்னு அர்த்தம், அதுவே மேகங்கள் கூடி இருந்தா ஆகாயத்துல ஏகப்பட்ட வேலைகள் நடக்குதுன்னு அர்த்தம்.

1. பூமியோட ஏசி (AC): பகல் நேரத்துல மேகங்கள் ஒரு பெரிய குடை மாதிரி சூரிய வெளிச்சத்தை மறைச்சு பூமிய குளிர்விக்குது. ராத்திரி நேரத்துல ஒரு போர்வை மாதிரி பூமியோட வெப்பம் வெளிய போகாம தடுத்து இதமான சூட்டைத் தருது. சோ, மேகங்கள் இல்லைனா பகல்ல பயங்கர வெயிலும், ராத்திரியில உறை பனியும் வந்து நம்மள காலி பண்ணிடும்.

இதையும் படியுங்கள்:
மாடித்தோட்டம் அமைக்கணுமா? ஆரம்பத்தில் எளிதாக வளரும் 6 செடிகள்!
மேகங்கள் | clouds

2. பிளைட்டை விட வெயிட்: பஞ்சு மிட்டாய் மாதிரி லேசா மிதக்குற ஒரு சாதாரண 'கியூமுலஸ்' (cumulus) மேகத்தோட எடை, பல பெரிய பயணிகள் விமானங்களை விட அதிகமா இருக்கும்!. காரணம், மேகத்துல இருக்குற தண்ணி எல்லாமே ஒன்னா இல்லாம, கோடிக்கணக்கான குட்டி குட்டி துளிகளா காத்துல அப்படியே சிதறிப் பரவி கிடக்குது. அதுபோக, வெயில்னால தரை சூடாகி, அங்கிருந்து காத்து அப்படியே மேல்நோக்கி எழும்பும்.. அந்த மேல்நோக்கிப் போற சூடான காத்துதான், அவ்வளவு வெயிட் இருக்குற மேகத்தையும் கீழே விழவிடாம அப்படியே பாராசூட் மாதிரி வானத்துல தாங்கிப் பிடிச்சு மிதக்க வைக்குது!

3. எவரெஸ்ட்டை விட உயரம்: இடி, மின்னலோட மழை தரக்கூடிய 'கியூமுலோநிம்பஸ்' (cumulonimbus) மேகங்கள், தரையில இருந்து ‘நமக்கு மேல தெரியுற பகுதிலிருந்து’ வானத்துக்கு மேல சும்மா ஒரு பெரிய பில்டிங் மாதிரி கிட்டத்தட்ட 12-ல இருந்து 18 கிலோமீட்டர் உசரத்துக்கு பெருசா வளர்ந்து நிக்கும். இது நீளம் இல்லப்பா, மேகத்தோட உசரத்தை (Height) மட்டும்தான் சொல்ற. உலகத்துலயே உசரமான எவரெஸ்ட் மலையே வெறும் 8.8 கிலோமீட்டர் தான். அப்போ பாத்துக்கோங்க, சில புயல் மேகங்கள் எவரெஸ்ட்டை விட ரெண்டு மடங்கு பெருசு!

4. தூசி இல்லனா மழையே இல்ல: வானத்துல இருக்குற நீராவி வெறும் காத்தால மட்டும் மேகமா மாறிட முடியாது. காத்துல மிதக்குற குட்டி குட்டி தூசி, கடல் உப்பு அல்லது பூக்கள்ல இருக்குற குட்டி குட்டி துகள்கள், மேல இருக்குற இந்த நீராவில போயி அப்படியே ஒட்டிப் படியும்போதுதான் மேகமே உருவாகுது.

5. நாடு கடக்கும் மேகங்கள்: இன்னைக்கு நம்ம ஊர்ல பார்க்குற மேகம், எங்கேயோ அரபிக்கடல்லயோ இல்ல வங்காள விரிகுடாவில ஆவியான தண்ணியா இருக்கலாம். அது நமக்கே தெரியாம பல நாடுகளைக் கடந்து டிராவல் பண்ணுது.

6. விமானங்கள் உருவாக்கும் மேகம்: வானத்துல ஜெட் விமானங்கள் போகும்போது பின்னாடி வெள்ளை கலர்ல கோடு மாதிரி வர்றதைப் பார்த்திருப்போம். அதை 'கான்ட்ரெயில்ஸ்' (contrails) அப்படின்னு சொல்வாங்க. இதுவும் ஒரு வகை செயற்கை மேகம் தான்.

மேகங்கள் | clouds
மேகங்கள் | clouds

7. விண்வெளியில இருந்தும் பாதுகாப்பு: மேகங்கள் இல்லைனா சூரியனோட கதிர்வீச்சு நம்ம மேல அதிகமா விழும். அந்த டைம்ல பாக்குறதுக்கு வெள்ளை வெள்ளைனு மேல இருக்குற மேகங்கள் சூரிய ஒளியை அப்படியே விண்வெளிக்கே திருப்பி அனுப்பி, பூமி ஓவரா சூடாகாம நம்மைக் காப்பாத்துது.

8. எல்லாமே தண்ணி இல்ல: ரொம்ப உசரத்துல இருக்குற சில மேகங்கள்ல தண்ணித் துளிகளே இருக்காது. அதுக்குப்பதிலா குட்டி குட்டி பனிக்கட்டிகள் தான் இருக்கும். அதுல சூரிய வெளிச்சம் படும்போது வானத்துல சூப்பரான கலர் கலர் வளையங்கள் சில டைம் உருவாகும்.

9. பூமியைத் தாண்டி விண்வெளியிலும் மேகங்கள்: விண்வெளியில இருக்குற நட்சத்திரங்களுக்கு நடுவுல பல ஒளி ஆண்டுகள்(Light years).

தூரத்துக்குப் பிரம்மாண்டமான விண்வெளி மேகங்கள் (Interstellar Clouds) இருக்கு. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, ஆஸ்ட்ரோபிசிக்ஸ் (Astrophysics) ஆராய்ச்சி தரவுகளின்படி அந்த மேகங்கள்ல தண்ணிக்கு பதிலா சுத்தமான ஆல்கஹால் (மதுபானம்) நிரம்பிக் கிடக்குது!. முக்கியமா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச 'W3(OH)' என்கிற ஒரு மேகத்துல மட்டுமே, பூமியில இருக்குற எல்லாரும் தினமும் குடிச்சாலும் பல கோடி வருஷங்களுக்குத் தீராத அளவுக்கு பில்லியன் கணக்கான லிட்டர் ஆல்கஹால் மிதந்துட்டே இருக்காம்!

இதையும் படியுங்கள்:
இந்த 6 மலைப்பிரதேசங்கள் போதும்! நவம்பர், டிசம்பர் விடுமுறையை கலகலப்பாக மாற்ற சூப்பர் ஐடியா!
மேகங்கள் | clouds

ஒருவேளை பூமியில இருக்குற எல்லா மேகங்களும் திடீர்னு மறைஞ்சு போச்சுனா, உலகமே தலைகீழா மாறிடும். மழை பெய்யாது, விவசாயம் அழியறதோட ஆறுகள் வற்றி மனித வாழ்வே மொத்தமா முடிவுக்கு வந்திடும். அதனால இனிமே வானத்தை ரசிக்கும்போது, இந்த மேகங்கள் நமக்கு எவ்வளவு முக்கியம்னும் சேர்த்து யோசிச்சுப் பாருங்க!

வானியல் மற்றும் மேகங்களின் மறைக்கப்பட்ட அறிவியல் பரிமாணங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம், நமது பூமியின் தட்பவெப்பநிலை மற்றும் இயற்கையின் நுட்பமான பாதுகாப்புப் பொறிமுறையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.