சில்வண்டுகள் எழுப்பும் ரீங்கார சத்தத்தின் பின்னணி என்ன?

சில் வண்டுகள் எங்கு வாழ்கின்றன? அவற்றின் ரீங்கார சத்தம் எதைக் குறிக்கிறது? சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சில் வண்டுகள் | Cicadidae
சில் வண்டுகள் | Cicadidae AI Image
Updated on

சில்வண்டுகள் எழுப்பும் ரீங்கார சத்தத்தின் பின்னணி என்ன? கோடை மழைக்கும் சில்வண்டுக்கும் என்ன தொடர்பு? முழுமையான தகவல்கள்.

சில் வண்டுகள் (Crickets/Cicadas) மற்றும் வண்டுகள் (Beetles) ஆகியவை இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான பூச்சி வகைகளாகும். சில்வண்டுகள் என்பவை வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்த, மரப்பட்டைகளின் நிறத்தோடு ஒட்டி வாழும் பூச்சிகளாகும். இவை சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை மழையை அறிவிப்பனவாகவும், காட்டின் ஆரோக்கியத்தை குறிக்கும் குறிகாட்டியாகவும் திகழ்கின்றன.

தமிழில் சில்வண்டு என்றும், சிதடிப் பூச்சி என்றும் அழைக்கப்படும் இவை, ஆங்கிலத்தில் சிகாடா (அ) கிரிக்கெட் (Crickets/Cicadas) என்று அழைக்கப்படுகின்றன. இவை மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலங்களில் அதிகம் காணப்படும். மரங்கள் அதிகம் நிறைந்த இடங்களிலும் கூட இவற்றைக் காண முடியும்.

சில்வண்டுகள் ஒலியெழுப்ப தங்களுடைய சிறகுகளை அல்லது வயிற்றுப் பகுதியை தேய்த்து ஒலி எழுப்புகின்றன. இது பொதுவாக, ஆண் சில் வண்டுகள் பெண் சில் வண்டுகளை ஈர்ப்பதற்காக செய்யும் ஒரு செயலாகும்.

சில வண்டுகள் எழுப்பும் சத்தத்தின் வேகத்தை வைத்து அந்த இடத்தின் வெப்பநிலையை நம்மால் கணக்கிட முடியும். வெப்பநிலை அதிகமாக இருந்தால் சத்தத்தின் வேகமும் அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு நிற உதட்டோடு ஆப்பிரிக்க காட்டில் சிக்கிய அசத்தல் குரங்கு!
சில் வண்டுகள் | Cicadidae

சில்வண்டுகளுக்கு காதுகள் தலையில் இல்லை. மாறாக அவற்றின் முன் கால்களில் (முழங்கால் பகுதியில்) உள்ளன. சில்வண்டுகள் அனைத்தையும் உண்ணும் (Omnivores) தன்மை கொண்டவை. தாவரங்கள் முதல் மற்ற சிறு பூச்சிகள் வரை அனைத்தையும் உண்ணும்.

கோடை காலம் குறிப்பாக சித்திரை முதல் வைகாசி மாதம் வரை மரங்களில் அமர்ந்து எழுப்பும் ரீங்கார சத்தம் காதைப் பிளக்கும். அது இணையை அழைப்பதற்காகவும், பெரும்பாலும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி அஸ்தமனம் வரை ஒலிக்க கூடியது. சூரியன் மறைந்ததும் சத்தம் நின்று விடும். சில்வண்டுகளில் ஆண் பூச்சிகள் மட்டுமே சத்தமிடுகின்றன. அவற்றின் வயிற்றுப் பகுதியில் உள்ள 'டிம்பல்' (Tymbal) என்ற உறுப்பை அதிர்வடையச் செய்வதன் மூலம் இந்த சத்தத்தை உருவாக்குகின்றன.

பெரும்பாலும் மரங்களில் காணப்படும் இவை, சில நேரங்களில் மண்ணுக்குள் நீண்ட காலம் வாழ்ந்து வெளியே வரும் தன்மை கொண்டவை. சுவர்க்கோழி, சீரிகை, சிதடிப்பூச்சி, மலைக்குருவி என்று பல பெயர்களால் சில்வண்டு அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு பெரிய சைஸ் ஈ போல காணப்படும் இந்த சில் வண்டுகள் மரத்தில் மரப்பட்டைகளின் மேல் (கிட்டத்தட்ட அதே நிறத்தில்) அமர்ந்திருக்கும். அதனால் இவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இவற்றுக்கு தடித்த உடலும், நீண்ட உணர்கொம்புகளும் உண்டு.

சில் வண்டுகள் | Cicadidae
சில் வண்டுகள் | Cicadidae AI Image

சில் வண்டுகள் ரீங்காரமிட்டால் இன்னும் சில நாட்களில் மழை வரப்போகிறது என்று அர்த்தம் என்று விவசாயிகள் கூறுவார்கள். சித்திரை, வைகாசியில் ரீங்காரமிட்டால் கோடை மழை நிச்சயம் என்பார்கள்.

பெண் சில் வண்டுகள் மரப்பட்டைகளில் தங்களுடைய முட்டைகளை இட்டுச் செல்லும். இந்த முட்டைகள் மழை பெய்யும் பொழுது மண்ணுக்குள் சென்று விடும். பிறகு மண்ணுக்குள்ளேயே பொரிந்து, புழுவாகி, மரங்களுடைய வேர்களின் சாற்றைப் பருகி வாழ்கின்றன. நீண்ட காலம் (சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை) மண்ணுக்குள் வாழ்ந்து பிறகு வெளியே வரும். இவை மரங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மண்ணைத் தோண்டி வெளியே வருவதால், மண்ணின் காற்றோட்டத்திற்கும் பங்களிக்கின்றன.

இவை மரப்பட்டைகளின் நிறத்திலேயே ஒட்டிக்கொண்டிருப்பதால், இவற்றை எளிதில் கண்டறிய முடியாது.

மண்ணுக்குள் இருக்கும் போது இவை ரீங்கார சத்தத்தை எழுப்பாது. ஆனால் வெளிவந்து ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இறந்துவிடும். அந்த நாட்களில் இவை ஓயாமல் ரீங்காரம் இட்டு இணையை அழைத்து இனப்பெருக்கம் செய்யும்.

இதையும் படியுங்கள்:
சாரை பாம்பு வாலை ஆட்டுவது ஏன்? உங்களை ஆச்சரியப்படுத்தும் 10 தகவல்கள்!
சில் வண்டுகள் | Cicadidae

சில்வண்டுகளின் ரீங்கார சத்தம் அதிகமாக இருந்தால் அந்தக் காடு மனித ஊடுருவல் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சில்வண்டுகள் நாள் முழுவதும் கத்தி உடல் வெடித்து ஒரே நாளில் இறந்துவிடும் என்று கூறுவது கட்டுக்கதை.

இந்தக் கட்டுரையின் மூலம் இயற்கையின் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறனைப் பெற்று, உங்களைச் சுற்றியுள்ள வனச்சூழல் மற்றும் பருவமழை குறித்தான துல்லியமான புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com