
கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை விட கீழ்க்கண்ட தாவரச்செடிகளை வளர்க்க கொசுக்கள் விரட்டப்படும். அத்தகைய கொசு விரட்டி செடிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
இது புதினா குடும்பத்தைச் சேர்ந்தது; வாசனை மிகுந்தது. இதன் இதழ்களில் லினலூல் என்ற பொருள் உள்ளது. இந்தப் பொருள் கொசுவை விரட்டக்கூடிய பண்பைப் பெற்றது.
நறுமணம் மிகுந்த செடியான இதற்கு இலைகள் ஊசிகள் போல் காணப்படும். இதன் நறுமணத்திற்கு கொசுக்கள் ஓடிவிடும்.
இது உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள சிட்ரோநெல்லா கொசுக்களை விரட்டுகிறது. கொசுக்களை விரட்ட இதன் எண்ணையையும் பயன்படுத்தலாம்.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணப் பூக்களைக் கொண்டது. இதன் வாசனை கொசுக்குப் பிடிக்காது. எனவே இந்தச் செடியை வைத்தால் கொசுக்களிடமிருந்து தப்பலாம்.
இது உணவுகளிலும் பானமாகவும் பயன்பாட்டில் உள்ளது. இதன் வாசனை நமக்குப் பிடிக்கும். ஆனால் கொசுக்களுக்குப் பிடிக்காது. இதை வீட்டு சமயலறையில் வைத்து வளர்க்கலாம்.
இதில் அலிசின் என்ற பொருள் உள்ளது. இதற்கு பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. பூண்டை நசுக்கி வைத்தாலே கொசு ஓடிவிடும். இதையும் சமயலறையில் வளர்க்கலாம்.
பழங்காலத்தில் மூலிகை செடியான இதில் நல்ல மருந்துவ குணமுள்ள எண்ணெய்கள் நிறைந்துள்ளன. ஊசி போன்ற இலைகள் கொண்டது; கொசுவை விரட்டிக் கூடியது.
இதுவும் புதினா குடும்பத்தைச் சேர்ந்தது முட்டை வடிவ இலைகளைக் கொண்டது. நல்ல நறுமணம் கொண்டது. இதன் இலைகளை எரிக்க கொசுக்கள் பறந்துவிடும். சூரிய வெளிச்சம் நிறைந்த இடங்களில் வளரக்கூடியது.
பெரும்பாலான வீடுகளில் துளசியை வளர்த்து வருவது பாரம்பரியமானது. இது மருத்துவ குணமும் உடையது. கொசுக்களுக்கு இதன் வாசனை பிடிக்காது. எனவே துளசிச் செடியை வளர்த்து கொசுவை விரட்டலாம்.
இதன் எண்ணெய் மிகச் சிறந்தது. இதன் இலைகளை நசுக்கினாலே ஒருவித மணம் ஏற்படும். இது கொசுக்களுக்கு அலர்ஜியானது. இந்தச் செடியில் நெபடாலாக்டோன் என்ற பொருள் கொசுக்களை விரட்டுவதாக அறியப்படுகிறது.
யூகலிப்டஸ எண்ணெய் கொசுவை விரட்டக்கூடியது. இதை உங்கள் வீட்டைச்சுற்றி வளர்க்க கொசுக்கள் தவிர்க்கப்படும்.
இந்தச் செடியை ஜன்னல் மற்றும் கதவுகளில் அருகில் வைத்து வளர்க்க இதன் வாசனை மூலம் கொசு விரட்டப்படும்.
இதுவும் புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் இருக்கும் நறுமணம் கொசுவை விரட்டும். இச்செடிகளின் இலைகள் இதய வடிவில் இருக்கும். இது எலுமிச்சையின் மணத்தைக் கொண்டிருக்கும்.
அழகான பூக்கள் கொண்டது. இந்த தாவரத்தில் பைரெத்ரின் என்ற பொருள் ஒருவித நச்சுத் தன்மை பெற்றதால் கொசுமட்டுமல் கரப்பான் பூச்சிகளையும் இது விரட்டிக் கூடியது.
இதன் இலைகள் கொசுக்களை விரட்டக்கூடியது. மருத்துவகுணம் நிறைந்தது. இதை உங்கள் வீட்டில் வளர்ப்பது மிகச் சிறந்தது. வேப்பங்காற்று பட்டாலே உடல் ஆரோக்கியமாகும்.
இதன் வாசனை கொசுவை விரட்டும் மெழுகுவர்த்திகளில் இது சேர்க்கப்படுகிறது.
இதை ஹார்ஸ்மிண்ட் என்றும் அழைக்கிறார்கள். இதன் இலைகளை கசக்கும் போது ஒருவித எண்ணெய் உருவாகிறது. இது கொசுவை விரட்டிக் கூடியது. சிவப்பு, ரோஸ், வெள்ளை மற்றும் ஊதா நிறப் பூக்களைக் கொண்டிருக்கும்.
மேற்கூறிய கொசு விரட்டி செடி வகைகளை வளர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.