இயற்கை பாதுகாப்பு தினம்: செயற்கை சுவாசம் இல்லாமல் வாழ ஒரு சபதம்!

ஜூலை 28ம் நாள் உலக இயற்கை பாதுகாப்பு தினம்!
artificial respiration
world Nature Conservation Day
Published on

யற்கை மனிதனுக்கு இறைவன் கொடுத்த பொிய கொடை. நாமெல்லாம் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் உயிா்வாழ்வது கடினமான காாியம்.

மனிதன் எந்த உதவி செய்தாலும் அதற்கு கைமாறுகளை, ஏதாவது ஒரு விதத்தில் நம்மிடம் எதிா்பாா்க்கிறான்.  ஆனால் இயற்கை அப்படி அல்ல!  எந்தவித பிரதிபலனையும் அது எதிா்பாறாமல் மனிதனுக்கு பல வகைகளில் உதவி புாிகிறது.

ஆனால் மனிதன் தன் சுயநலம்கருதி  கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும் விரைவில் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற செயற்கை புத்தியோடு அலைகிறான்.

அப்போது அவன் ஒருவனது தவறான செயல்பாடுகளால் பலருக்கு பல வகைகளில் சங்கடம் ஏற்படுகிறது. ஏமாற்றி ஈட்டிய பொருள் வளம், இயற்கை காற்றை அனுபவிக்க முடியாமல், புதிது புதிதாய் நோயால் தாக்கப்பட்டு செயற்கை சுவாசத்துடன் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் வாழவேண்டிய சூழல்.

இயற்கை வளம் இந்த பூமிக்கானது. மனிதன் வாழ்வதற்கு தேவையான அத்தனை வளங்களும் அதில் இருக்கிறது.

அத்தகைய இயற்கை வளத்தை பாதுகாக்கவே ஜூலை 28ம் நாள் உலக இயற்கை பாதுகாப்பு தினமாக (world Nature Conservation Day) அனுஷ்டிக்கப்படுகிறது.

இயற்கை வளங்களை நல்லவிதமாக நமது தேவை மற்றும் பயன்பாட்டிற்காக காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவே உலக இயற்கை பாதுகாப்பு தினம் மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கமும், பல தொண்டு நிறுவனங்களும் நமக்கு இது தொடா்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வருகின்றன. அதையெல்லாம் மனிதன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
பறவைகளை வேட்டையாடும் மீன்கள்: இதுவரை நீங்கள் அறியாத திகில் வேட்டை உலகம்!
artificial respiration

பல வகைகளில் இயற்கை நமக்களித்த வளங்கள் சுரண்டப் படுகின்றன. பூமியின் நிலையான இயற்கையின் வளங்களை பாதுகாத்து அதன் வழியில் வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடித்து நாம் இயற்கையோடு வாழவேண்டும்.

அந்த இயற்கையின் மகோன்னதமான நோக்கத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும்.

இயற்கையோடு வாழ வேண்டும், என்பதை வலியுறுத்துவதின் நோக்கமே உலக இயற்கை பாதுகாப்பு  தினத்தின் நோக்கமாகும் . 

நமது மனித குலத்தின் நீடித்த வாழ்க்கையை வாழவே நாம் இயற்கையின் தன்மையை உணரவேண்டும். சூாிய ஒளி, காற்று, பூமி, மரங்கள், நிலங்கள் இவைகள் நமக்கு பலவிதங்களில் பல உதவிகளை செய்கிறது.அதை நாம் பயன் படுத்த தவறக்கூடாது. அதோடு கனிம வளங்கள் நமக்கான சொத்து. அதையும் நாம் பாதுகாக்காமல் விற்பனை செய்கிறோம்.

மரங்கள் நமக்கு பலவிதங்களில் பொிய உதவிகளை செய்கிறது. அதேபோல விளைநிலங்கள் வர்த்தகமாகிவிட்டன. ஏாி குளங்கள் காணாமல் போய்விட்டதால் வடிகால் வசதி பெருமளவு பாதிக்கப்பட்டு மழை நீா் முமுவதும் பயன்படாமல் வீணாகிப்போகிறது.

அதையெல்லாம் பாதுகாப்பது தனி மனிமதனின் கடமையாகும். யாரும் இங்கே முன் வரவில்லை. மணல் திருடப்படுகிறது.

மரங்கள் காடுகள்அழிக்கப்படுகினறன. இதனால் இயற்கை சீற்றம் ஏற்பட்டு பருவநிலை மாறி மழை பொழிகிறது. இவையெல்லாம் இயற்கையை மதிக்காத மனிதனுக்கு கோபம் அடைந்த இயற்கை தரும் பரிசுதானே!  

மரங்கள் நடுவோம் என பேரணி, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மரக்கன்றை நட்டால் பல மரங்கள் வெட்டப்படுகிறது. கனிமவளங்களும் தாறுமாறாக பயன்படுத்தப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
வாயில் வைத்து இசைக்கப்படும் மர்மக் கருவி! இதுதான் மோர்சிங்!
artificial respiration

அப்துல் கலாம் அய்யா அவர்கள் மரக்கன்றுகளை நடச்சொல்லிவிட்டு போனாா். நாம் அதை விடுத்து மரங்களை வெட்டுகிறோம்.

எனவே நமது நலன் மட்டுமல்லாது உலக நலன் கருதி இயற்கை நமக்குத்தந்த பொிய வரப்பிரசாதத்தை நாம் நாட்டின் நலன் கருதி பாதுகாப்போம் என இந்நாளில் சபதம் ஏற்போம்.

இயற்கையை பாதுகாப்போம், வளமாய் செயற்கை சுவாசம் பொருத்தாத வாழ்க்கையை வாழ்வோம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com