இயற்கைச் சீற்றம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்!

விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்
விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்
Published on

ந்தியாவின் முன்னோடி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சுற்றுச் சூழல் விருது பெங்களூரைச் சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கருக்கு வழங்கப்பட்டது.

சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் பல்வகையான சமூக நலன், பெண்கள் முன்னேற்றம்  மற்றும் விளிம்பு நிலை மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முன்னணி ரோட்டரி சங்கமாகும்.

உலகின் எந்தப் பகுதியிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர், நிறுவனம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  விருது பெற்ற  பத்மஸ்ரீ டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்  இந்திய மருத்துவ பாரம்பரியத்தை புதுப்பிக்கும் பாதையில் ஒரு முன்னோடி. அவர் இந்திய ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் தலைவர். டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர்.

இவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றில் வன மூலிகைகளைப் பாதுகாப்பதில்  பங்களித்ததற்காக இவருக்கு நார்மல் போர்லாக் விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கொலம்பியா பல்கலைக் கழகத்தின் விருது  போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் செந்தில் குமார் ராமமூர்த்தி  இந்த விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, “என் பெற்றோர்கள் இருவருமே அரசுப் பணியாற்றிய மருத்துவர்கள். எனவே, இந்த சமூகத்தில் உடல் நலம் மற்றும் மருத்துவம் எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை நான் அறிவேன். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றை, நவீன அறிவியலோடு இணைத்து மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்று கூறி விருதினை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
சோலார் எனர்ஜியால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
விருது பெறும் டாக்டர் ஆனந்த் தர்ஷன் சங்கர்

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கிப் பேசுகையில், “இன்று இயற்கையை மதிக்காமல், செயல்படுவதால், இயற்கை தனது சீற்றத்தை நம் மீது காட்டுகிறது. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்று  குறிப்பிட்டார். நம் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தை, தாவரவியலுடன் இணைத்து பல்வேறு மூலிகைகள் குறித்தும் நவீனமான ஆய்வுக் கூடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள வழிவகுத்தவர் டாக்டர் ஆனந்த தர்ஷன் சங்கர்” என்று பாராட்டினார்.

விருது பெற்ற பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த தர்ஷன் சங்கர் தனது ஏற்புரையில், “கொரோனா தொற்றுக் காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது” என்று சுட்டிக் காட்டினார். பெங்களூரில் உள்ள டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்த நூறு படுக்கைகள் கொண்ட பாரம்பரிய மருத்துவமனையில் கர்நாடகாவிலிருந்து மட்டுமில்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், 30க்கும் மேற்பட்ட அயல் நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று, குணமடைந்து செல்கிறார்கள்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com