ஒரு மரம், பல அதிசயங்கள்: கலிபோர்னியாவின் ரெட்வுட் மரத்தின் சிறப்பு!

One tree, many wonders
Coast Redwood Trees
Published on

லிபோர்னியாவின் Coast Redwood (அறிவியல் பெயர் Sequoia sempervirens) உலகின் மிகப்பெரிய மரங்களுள் ஒன்றாகும். இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது Cupressaceae குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இனப்பெயர் Sequoia. இம்மரங்கள் எப்போதும் பச்சை நிறத்தில் இருக்கும். Coast Redwood மரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்குக் கடற்கரை பகுதிகளிலும் தெற்கு ஓரிகன் மாநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. கடற்கரை அருகே, பனி மூட்டம் (fog) அதிகம் இருக்கும் இடங்களில் இவை அதிகமாக வளர்கின்றன. மலைப்பாங்கான, ஈரமான, குளிர்ச்சியான காலநிலையே இதற்கு ஏற்றது.

உலகிலேயே உயரமான மரம் Coast Redwood ஆகும். சாதாரணமாக, 300 அடி (91 மீட்டர்) வரை வளரும். பதிவு செய்யப்பட்ட மிக உயரமான Coast Redwood மரம் Hyperion எனப்படும் ஒன்று. இதன் உயரம் 379.7 அடி (115.7 மீட்டர்). இது உலகின் மிக உயரமான உயிர் வாழும் மரம். இதன் தண்டு விட்டம் (Diameter) சுமார் 20 அடி (6 மீட்டர்) வரை இருக்கும். இம்மரம் சராசரியாக 500 முதல் 700 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. சில பழைமையான மரங்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் வயது கொண்டதாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
உலகை வியக்க வைக்கும் 5 வலசைப் பறவைகள்!
One tree, many wonders

தனிச்சிறப்புகள்: கடற்கரை பனி மூட்டத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, தண்ணீர் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. அதிக ஆழமாக அல்ல, அகலமாகப் பரவி (சுமார் 100 அடி வரை) மற்ற மரங்களின் வேர் சிக்கல்களுடன் இணைந்து தாங்குதன்மை அதிகரிக்கின்றன. பிற மரங்களைப்போல் முழுமையாக வெட்டப்பட்ட பிறகும், வேர் பகுதிகளில் இருந்து புதிய தளிர்கள் மீண்டும் வளரக்கூடிய தன்மை உண்டு. தடிமனான இம்மரத்தின் பட்டை (அதிகபட்சம் 30 செ.மீ. வரை) இருப்பதால் காட்டுத் தீக்கும் பூச்சிகளுக்கும் எதிர்ப்பு அளிக்கிறது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: இம்மரங்கள் உலகிலேயே மிக அதிகமாக கார்பன் டைஆக்சைடு சேமித்து வைப்பவை ஆகும். பறவைகள், புழுக்கள், சிறிய உயிரினங்கள் மற்றும் பாசிகள் (moss), பிளவுகளில் வளரும் தாவரங்களுக்கு சிறந்த வாழிடமாக இம்மரங்கள் உள்ளன. பனி மூட்டத்திலிருந்து ஈரத்தை உறிஞ்சி, தரை நீரைப் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
காடுகளில் உலவும் 'பேபி ட்ராகன்': பறவையா? மர்ம மிருகமா?
One tree, many wonders

மரம் வெட்டுதலால் 19ம் நூற்றாண்டில் இவை மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டன. தற்போது சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இயற்கை நிலைமையில் உள்ளன. கலிபோர்னியாவில் Redwood National and State Parks போன்ற தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு இம்மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

Coast Redwood மரங்களின் பட்டை சின்னச் சின்ன நார் போல இருக்கும். அதனால் தீ விரைவாக பரவாமல் காப்பாற்றுகிறது. மரத்தின் கிளைகள் 100 அடி உயரத்திற்கு மேல் இருந்தாலும், பனி மூட்டத் துளிகள் அங்கேயும் நீர் தேவையை நிறைவேற்றும். Hyperion மரத்தின் சரியான இடம் பொதுமக்களிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்புக்காக. Coast Redwood மரம் என்பது இயற்கையின் ஒரு அதிசயம். உலகின் மிக உயரமானதும், நீண்ட ஆயுளும் கொண்டதும், சுற்றுச்சூழலுக்கு பேருதவி செய்யக்கூடிய மரமாக கலிபோர்னியாவின் பெருமையாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com