
பிரேசிலிய டாபிர் - இயற்கையின் "வனத்தோட்டக்காரர்" என்று அழைக்கப்படும் இந்த டாபிர் மிகப்பெரிய நில பாலூட்டியாகும். இவை காடு வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கு இன்றிமையத ஒரு இனமாக உள்ளது. தாவரங்களை உட்கொள்வதன் மூலமும், கழிவுகளின் மூலமும் விதைகளை பரப்பி காடுகளை மீண்டும் உருவாக்க உதவுகிறது.
சட்டவிரோதமாக உணவுக்காக வேட்டையாடப்படுவதும், காடுகள் அழிப்பு,, சாலைகள் விரிவாக்கம் போன்றவற்றின் காரணமாக டாபிர் இனங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் இந்த இனங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க நாடுகளில் அழிந்து விட்டதாக கருதப்பட்ட இவை சமீபத்தில் பிரேசிலில் உள்ள Cunhambebe Parkல் உள்ள கேமராவில் மூன்று டாபிர் உயிரினங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவை டாபிர் இனங்கள் மீண்டும் வந்ததற்கு சான்றாக உள்ளது. இயற்கையை பாதுகாத்து அழிவை தடுத்தால் இழந்த உயிரினங்களை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
150 முதல் 250 கிலோ வரை எடையுள்ள காண்டாமிருக இனத்தின் வகையைச் சேர்ந்த டாபிர்கள் நான்கு வகையாக உள்ளன. பிரேசிலிய டாபர் (BrazilianTapir), மலாயன் டாபிர் (Mallayan Tapir) , பெயர்டின் டாபிர் (Baird's Tapir) மற்றும் மலை டாபர் (Mountain Tapir). பிரேசிலிய டாபிர்கள் தென் அமெரிக்காவின் மலைக்காடுகளில் வாழ்கிறது.
டாபிர்கள் பற்றி சில சுவாரசியமான உண்மைகள்:
இந்த பிரேசிலிய நாய்கள் பழுப்பு நிற முடிகளை கொண்டுள்ளன. பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் இவை திடீரென மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்படுகிறது.
தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களில் வாழும் இவை நீச்சலில் மிகவும் திறமைசாலிகள். தும்பிக்கை போன்று இருக்கும் மூக்கை நீருக்கு அடியில் நீச்சல் அடிக்க பயன்படுத்துகின்றன.
நீர்யானைகளைப் போல் நீரின் அடிப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும் . மேற்பரப்பில் இருக்கும் பொழுது பழங்கள், செடிகள், இலைகள் மற்றும் தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.
டாபிர்களுக்கு சிறிய கண்கள் உள்ளதால் இவற்றிற்கு கண் பார்வை குறைவு. ஆனால் வாசனையை நுகர்வதும், கேட்கும் திறனும் மிக அதிகம்.
இவை சுமார் ஆறடி (2 மீ) நீளமும், 150 முதல் 250 கிலோ வரை எடையும் கொண்டவை. பகலை விட இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக காணப்படும்.
25 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் டாயிர்களின் கர்ப்ப காலம் 13 மாதங்களாகும். குட்டிகள் ஒரு வருடம் வளர்ந்து வரும் வரை தாயினுடைய கண்காணிப்பில் இருக்கும்.
டாபிர் இனத்தின் குட்டிகள் பார்ப்பதற்கு மான்களைப் போல் காணப்படும். உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் கோடுகளும், புள்ளிகளும் இருக்கும். வளர வளர அவை மறைந்துவிடும்.
டாபிர்களின் முன் கால்களில் நான்கு விரல்களும், பின் கால்களில் மூன்று விரல்களும் உள்ளது. இவை மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் தன்மை கொண்டவை.
இவற்றை வேட்டையாட வந்தாலோ அல்லது அவற்றிற்கு பயத்தை உண்டாக்கினாலோ முணுமுணுக்கும் விதமாகவும், விசில் அடிப்பது போன்றும் அதிக ஒலிகளை எழுப்பும்.
ஒரு காலத்தில் அழிந்துவிட்டதாக தோன்றிய டாபிர் இனம் இப்பொழுது மீண்டும் காணப்படுவதால் சுற்றுச்சூழலில் சமநிலையை மீட்டெடுக்கும் என்று நம்பப்படுகிறது.