இயற்கையின் அதிசயமாக விளங்கும் தாவரங்கள்!

Amazing plants that eat insects
Amazing plants that eat insects
Published on

றைவன் படைப்பில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுக்காக பிற உயிரினங்களைக் கொன்றும் தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சில வகை தாவரங்கள், தேனைத் தேடி தங்களிடம் வரும் தேனீக்கள் மற்றும் பூச்சிகளை வளைத்துப் பிடித்து உணவாக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் இங்கே நடந்து கொண்டிருப்பது அதிசயிக்கத்தக்கதாக உள்ளது. அப்படிப்பட்ட 5 தாவரங்கள் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

1. பிட்ச்சர் பிளான்ட் (Pitcher Plant): இந்த செடி குடம் போன்ற அமைப்பிலான தனது இலைகளை நோக்கி பூச்சிகளை கவர்ந்திழுக்கும் குணம் கொண்டது. பூச்சிகள் அருகில் வந்து இலை மீது கால் வைக்கையில் வழுக்கி உள்ளே விழுந்துவிடும். அப்படியே அதை நசுக்கிக் கொன்று தனக்கு இரையாக்கிக் கொள்ளும் அந்தச் செடி.

2. வீனஸ் ஃப்ளை ட்ராப் (Venus Fly trap): இத்தாவர இலைகளின் நுனியில் காது மடல் போன்ற இரண்டு அமைப்புகள் உள்ளன. அவற்றின் ஓரங்களில், நமது கண் இமையோரம் உள்ளது போல் முடி இழைகள் உள்ளன. இவை பூச்சி, வண்டு போன்றவை அருகில் வருவதை உணர்ந்ததும் நொடியில் அதை உள்ளிழுத்து தப்பிக்க முடியாதபடி நுனி மடல்களை அழுத்தி மூடிக்கொள்ளும். பின் அதை தப்பிக்க விடாமல் செய்து, உணவாக உட்கொண்டு விடும்.

இதையும் படியுங்கள்:
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது உண்மையா?
Amazing plants that eat insects

3. சன் ட்யூ (Sundew): சன் ட்யூ பிளான்ட்டின் இலைகளில் உள்ள ஒட்டும் தன்மை கொண்ட முடி போன்ற அமைப்புகள், பூச்சிகளைத் தன் வசம் இழுத்து தப்பிக்க விடாமல் அழுத்திக்கொள்ளும். பிறகு மெதுவாக அதை  உணவாக உட்கொண்டு ஜீரணித்து விடும்.

4. பிண மலர் (Corpse Fower): இந்த மலரின் மணம் அழுகிய விலங்கின் மணத்தை ஒத்திருக்கும். 'பெரிய' என்ற பொருள் தரும் 'டைடன் ஆரம்' என்றும் இந்த மலரை அழைப்பதுண்டு. இது இந்தோனேஷியாவின் மழைக் காடுகளில் காணப்படுவதாகும். இதன் சுகந்தம் பூச்சிகளையும் 'கேரியன்' (Carrion) போன்ற வண்டுகளையும் கவர்ந்திழுக்கக் கூடியது. அந்த வாசனையால் கவரப்பட்டு மெகா சைஸ்ஸுடைய அந்த பூவின் உள்ளே விழுந்து அந்த தாவரத்திற்கு உணவாகி விடுகின்றன பூச்சிகளும் வண்டுகளும்.

இதையும் படியுங்கள்:
கண்களுக்குத் தீட்டும் மை அழகுப்பொருள் மட்டுமல்ல; ஆபத்தும் கொண்டது!
Amazing plants that eat insects

5. வன புகையிலைத் தாவரம்: தாவர உண்ணிகளான விலங்குகள் இதை உண்ணுவதிலிருந்து தப்பிக்க, இந்தச் செடிகள் நச்சுத்தன்மை கொண்ட ஒரு வகை இரசாயனப் பொருளை வெளியிட்டு காற்றில் கலக்கச் செய்து தன்னைத்தானே விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ளும் குணமுடையவை இந்த வைல்ட் டோபக்கோ பிளான்ட் (Wild Tobacco Plant).

இவை அனைத்துமே இயற்கையின் அதிசயம் என்றே கூறலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com