டிராகுலா கிளி முதல் மழைக் கணிக்கும் பறவை வரை: இயற்கையின் மர்மங்கள்!

டிராகுலா கிளி ஏன் அரிதானது? ரெட் வாட்டில்ட் லாப்விங் பறவை எப்படி மழையை முன்னரே கணிக்கிறது? இயற்கையின் விசித்திரமான உண்மைகளை அறியுங்கள்.
பறவை | Dracula parrot and Red wattled lapwing bird
பறவை | Dracula parrot and Red wattled lapwing birdImage credit: AI Image
Updated on

இயற்கையின் மர்மங்களுக்குப் பஞ்சமே இல்லை. வானிலை மையங்களின் நவீன கருவிகள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மழையைத் துல்லியமாகக் கணிக்கும் பறவைகள் முதல் பார்ப்பதற்கு ஏதோ ஒரு திரில்லர் திரைப்படத்தின் கதாபாத்திரம் போல தோற்றமளிக்கும் ஒரு அரிய வகை கிளி வரை உலகில் விசித்தரமான உரிமங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் இந்த இரண்டு பறவைகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்வோமா..?

டிராகுலா கிளி‌ (Dracula parrot):

பறவை | Dracula parrot (Pesquet's parrot)
பறவை | Dracula parrot (Pesquet's parrot)

உலகிலேயே மிகப் பெரிய கிளி வகையாகவும் அரிய வகையாகவும் கருதப்படுவது டிராகுலா கிளி‌. ந்யூகினியா மழைக்காடுகளில் டிராகுலா கிளி வகை காணப்படுகின்றன. கருப்பும் க்ரேவும் கலந்த இறக்கைகள், கருஞ்சிவப்பு வயிறு, கூர்மையான பார்வை என்று பெரிய அளவில் இந்த கிளி வித்தியாசமாகக் காணப்படுகிறது‌. உலகிலேயே இந்த கிளி அபூர்வமானதாக கருதப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் 'Pesquet's parrot' எனவும் அழைக்கிறார்கள்.

இதன் பெயரே வித்தியாசமாக உள்ளது. இதன் தலை கழுகுகளைப் போன்று வழுக்கையாக காணப்படும்‌. இதன் இறக்கைகள் அழுத்தமான நிறத்தில் இருக்கும்‌. இதன் உடலில் கருஞ்சிவப்பு திட்டுக்கள் காணப்படும். 

வழுவழுப்பான பழங்களை உண்ணும்போது இதன் தலை வழுக்கையாக இருப்பதால், இது சுத்தமாக இருக்க முடிகிறது‌. மற்ற கிளி வகைகள் கொட்டைகளையும் பருப்புகளையும் உண்ணும் போது இந்த டிராகுலா கிளி வகைகள் அத்திப்பழத்தையே உண்ணுகின்றன. இது இதன் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது‌. அதன் காரணமாகவே அத்தி அதிகம் விளையும் பப்புவா நியூ கினியாவில் இது அதிகம் காணப்படுகிறது‌.

இது 50 செ. மீ வரை நீளமாக காணப்படும்‌ உலகிலேயே மிக பெரிய கிளி வகையாக அறியப்படுகிறது‌. இதன் நிறமும் கண்ணைப் பறிக்கும் வகையில் இருக்கும். இக்கிளி வகைகள் மலைப் பகுதிகளிலேயே அதிகம் காணலாம்‌. காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் டிராகுலா கிளி இனம் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது‌.

இதையும் படியுங்கள்:
அழிந்துவரும் சூழலில் ஆர்க்டிக் விலங்குகள்: நீங்கள் அறியாத சுவாரஸ்யங்கள்!
பறவை | Dracula parrot and Red wattled lapwing bird

இதன் அழகனா தலைமுடிகளுக்காக இவை வேட்டையாடப்படுகிறது. 'International union for conservation of Nature' இந்த இனம் குறைவது பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறது‌. இந்த டிராகுலா கிளி சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்கிறது. கொட்டைகளையும் பழங்களையும் சாப்பிட்டு காடுகளில் அதிக மரங்கள் வளர துணை புரிகிறது. காடுகள் பாதுகாப்பில் முக்கிய பங்கை அளிக்கிறது.

மழைருவதை உணர்த்தும் 'Red wattled lapwing' பறவை‌: 

ரெட்-வாட்டில்ட் லேப்விங் (Red-wattled Lapwing) மழையின் அறிகுறிகளை உணர்த்துகிறது‌.

பறவை | Red wattled lapwing bird
பறவை | Red wattled lapwing bird

இந்தப் பறவை‌ கூடு கட்டும் காலம், முட்டையிடும் விதம் போன்றவற்றை வைத்து விவசாயிகள் மழையின் வரவை உணர்கிறார்கள். உயரமான பகுதிகளில் கூடுகட்டினால் அதிக மழை வரும் என்றும், வறண்ட இடங்களான தரையில் கூடு கட்டினால் குறைவான மழை என்றும் ஊகிக்கிறார்கள்‌.

இதன் முட்டைகள் நிமிர்ந்த நிலையில் இருந்தால் அதிக மழை என்றும், தட்டையாக வைத்திருந்தால் குறைவான மழை என்றும் இது தெரியப்படுத்துகிறது‌. குவியலாக முட்டை இட்டால் அதிகமழை என்றும் கணிக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் இந்த பறவைகளின் கணிப்பு படி மழை வருவதாக அறியப்பட்டிருக்கிறது‌. ராஜஸ்தானில் வயதான விவசாயிகள் இந்த பறவையின் மழை அறிகுறிகளை மிகச் சரியாக ஊகித்து தங்கள் விவசாயத்தை செய்கிறார்கள்‌.

இதையும் படியுங்கள்:
பால்கனியில் வண்ணத்துப் பூச்சிகள் பறக்க வேண்டுமா? இந்த செடிகளை வளருங்கள்!
பறவை | Dracula parrot and Red wattled lapwing bird

நவீன யக்திகளோடு இந்த பாரம்பரிய பறவையின் அறிகுறிகளையும் பின்பற்றும் விவசாயிகள் நல்ல முடிவை எடுக்க முடிகிறது‌. அந்த வகையில் விவசாயிகளின் நண்பனாக இது செயல்படுகிறது.

மழையின் அளவை கணக்கிடும் வானிலை மையம் வெளியிடும்  மழைச் செய்திகள் இந்த பறவையின் அறிகுறிகளோடு ஒத்து இருப்பதால் மழை வரவை முன் கூட்டியே அறிவிக்கும் இப்பறவை மிக ஆச்சர்யமான பறவையாக பார்க்கப்படுகிறது.

இது சிவப்புத் தலையுடனும், பெருத்த ஒலி எழுப்பும் பறவையாகும். சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்பறவை வித்தியாசமாகவே காணப்படுகிறது‌.

logo
Kalki Online
kalkionline.com