பாம்புகள் பழுப்பு, பிரவுன், பச்சை, கருப்பு கலந்த பழுப்பு போன்ற நிறங்களில் தான் இருக்கும். ஆனால் உலகில் வியக்க வைக்கும் வகையில் பிரகாசமான வண்ணங்களை கொண்ட பாம்புகளும் உள்ளன.
இந்தப் பாம்பு சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறக் கோடுகளைக் கொண்டது. நீண்ட மெல்லிய உடலில் ஓவியம் தீட்டியிருப்பது போல அழகாக இருக்கும். வட அமெரிக்காவில் உள்ள அரிதான பாம்புகளில் ஒன்றாகும். கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. இப்போது இது அழியும் நிலையில் உள்ளது.
மத்திய அமெரிக்காவில் வாழும் இந்தப் பாம்பு பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கும். சிவப்பு, கருப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பவளப் பாம்பைப் போலத் தோற்றமளிக்கும். உண்மையில் பவளப் பாம்புகள் மிகவும் விஷம் உள்ளவை. ஆனால் பால் பாம்பு விஷமற்றது. இதைப் பார்ப்பவர்கள் பவளப் பாம்பு என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
அடர்ந்த நீல நிறத்தில் இருக்கும் இந்த பாம்பு பாம்பின் தலை சிவப்பாக இருக்கும். தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் காணப்படும். அளவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் விஷமானது.
தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வாழும் ரெயின்போபோவா செம்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். இதன் உடலில் சூரிய வெளிச்சம் படும் போது வானவில்லை போல பலவித வண்ணங்களில் பிரகாசிக்கிறது. இது விஷமற்ற பாம்பு. எனவே மனிதர்களுக்கு தீங்கு செய்யாது. பாம்புப் பிரியர்களால் இது செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது என்பது ஆச்சரியமான தகவல். தண்ணீரில் இந்த பாம்பு எண்ணெய் போல மினுமினுக்கும்.
நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காணப்படும் இந்தப் பாம்பு பெரும்பாலும் மரக்கிளைகளை சுற்றி சுருண்டு படுத்திருக்கும். பார்ப்பதற்கு பிரகாசமான கண்ணைக் கவரும் இலை போல தோற்றமளிக்கும். இதனுடைய குட்டிகள் பச்சை நிறத்தில் இருப்பதில்லை. மஞ்சள், சிவப்பு, அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். வளரும் போது தான் பிரகாசமான பச்சை நிறத்திற்கு மாறுகின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் இந்தப் பாம்பு பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற வண்ணங்களில் பார்ப்பதற்கு ஒரு காட்டு ஓவியம் போன்று இருக்கும். பறக்கும் பாம்பு என்று ஏன் இதற்கு பெயர் வந்தது என்றால் உடலை தட்டையாக வைத்து ஒரு மரத்திலிருந்து இன்னொரு மாதத்திற்கு காற்றில் வேகமாக சறுக்கித் தாவும். பார்ப்பதற்கு ஒரு ரிப்பன் காற்றில் அசைந்து பறந்து செல்வது போல தோற்றமளிக்கும்.
இலங்கையில் காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் இந்தப் பாம்பு காணப்படுகிறது. பிரகாசமான பச்சை நிற வண்ணத்தில் மெல்லிய உடலுடன் இருக்கும் இந்தப் பாம்பு வைர வடிவத் தலை கொண்டது. இதனுடைய பச்சை நிற ஒளிரும் நிழல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மிகவும் விஷமுள்ள பாம்பு. இது தன்னை யாராவது தாக்கினால் மட்டுமே ஆக்ரோஷமாக சீறும். மரங்களின் இலைகளைக் கிடையில் தன்னை ஒளித்துக் கொள்ளும்.