அபூர்வ கடல் சிங்கங்களைப் பற்றிய அரிய தகவல்கள்!

அபூர்வ கடல் சிங்கங்களைப் பற்றிய அரிய தகவல்கள்!
https://www.nbcnews.com

டல் சிங்கங்கள் கடலில் வாழும் அபூர்வமான உயிரினங்கள். கடல் பாலூட்டிகளான இவற்றைப் பற்றிய சுவாரசியமான செய்திகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சக்தி வாய்ந்த ஃபிளிப்பர்கள்: கடல் சிங்கங்கள் பின்னிப்பெட் எனும் கடல் பாலூட்டிகள் வகையை சேர்ந்தவை. கடல் சிங்கங்களுக்கு முன்புறமும் பின்புறமும் ஃபிளிப்பர்கள் உண்டு. அவற்றின் உதவியால் இவை தண்ணீரில் நீந்துகின்றன. முன்புற ஃபிளிப்பர்களைக் கொண்டு அவை ஒரு மணி நேரத்திற்கு 25 மைல் நீந்துகின்றன. பின்புற ஃபிளிப்பர்கள் முன்னோக்கிச் சூழலும் அமைப்பில் உள்ளன. அவற்றின் உதவியுடன் அவை நிலத்திலும் நடக்கின்றன.

தனித்துவமான காதுகள்: கடல் சிங்கங்களுக்கு வெளிப்புற காது மடல்கள் உள்ளன. இவை மற்ற பின்னிப்பெட்டுகளில் இருந்து வேறுபடுத்த உதவுகின்றன.

எடை மற்றும் அளவு: கடல் சிங்கங்கள் சுமார் ஐந்து அடி முதல் 11 அடி நீளம் வரை இருக்கும். எடை 200 முதல் 1000 பவுண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் எடை, பெண் சிங்கங்களின் எடையை விட பெரியதாக இருக்கும்.

வாழ்விடம்: இவை தங்கள் கூட்டத்துடன் காலனிகள் அல்லது ரூக்கர்கள் என்று அழைக்கப்படும் பெரிய குழுக்களில் வாழ்கின்றன. பெரும்பாலும் கடற்கரைகள் அல்லது பாறைகளில் வசிக்கின்றன. தங்களுடைய உரத்த குரைப்புகள் மூலம் பிற கடல் சிங்கங்களுடன் தொடர்பு கொள்கின்றன. இவை மணல் நிறைந்த கடற்கரைகளில் ஓய்வெடுக்கின்றன. வெப்பமான காலநிலையில் கடலில் வேட்டையாடி குளிர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன. இவை துருவப் பகுதிகளில் வாழ்வதில்லை. இவை நீரிலும் நிலத்திலும் வாழ்வதால் கடலில் இருந்து நிலத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று அவை தங்கி இருக்கும் மண்ணை உரமாக்குகின்றன.

அறிவாற்றல் திறன்கள்: இவை மிகவும் புத்திசாலிகள். சிக்கலான பணிகளைச் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இவை விளையாட்டுத்தனமான விலங்குகள். பெரும்பாலும் அலைகளில் உலாவுவது, பொருள்களுடன் விளையாடுவது மற்றும் சமூக விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

டைவிங் திறன்கள்: கடல் சிங்கங்கள் உணவைத் தேடி ஆயிரம் அடி ஆழத்திற்கு டைவிங் செய்கின்றன. அப்படி டைவிங் செய்யும்போது 20 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்துக்கொள்ள அவற்றால் முடியும்.

இதையும் படியுங்கள்:
நீங்க பிஸ்கட் அதிகம் சாப்பிடுவீங்களா? அச்சச்சோ! ஜாக்கிரதை! 
அபூர்வ கடல் சிங்கங்களைப் பற்றிய அரிய தகவல்கள்!

உணவு: இவை கணவாய் மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களை உண்கின்றன. இவற்றின் வாழ்விடம் மற்றும் உணவு கிடைப்பதன் அடிப்படையில் இவற்றின் உணவுகள் வேறுபடுகின்றன. இவை திறமையாக வேட்டையாடுகின்றன. தங்கள் இரையைப் பிடிப்பதற்காக கூர்மையான பார்வை மற்றும் சுறுசுறுப்பை பயன்படுத்துகின்றன. பெரும்பாலும், குழுக்களாக வேட்டையாடுகின்றன. பெரிய வெள்ளை சுறாக்கள், சுத்தியல் சுறாக்கள், நீல சுறாக்கள் மற்றும் கொலையாளி திமிங்கலங்கள் போன்ற பெரிய விலங்குகளுக்கு இவை உணவாக மாறுகின்றன.

குட்டிகள்: பெண் சிங்கங்கள் 11ல் இருந்து 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கின்றன. அவற்றை முறையாக பாலூட்டி, நன்றாக பயிற்றுவிக்கின்றன. கடல் சிங்கங்கள் காடுகளில் 15ல் இருந்து 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

அரிதான வகைகள்: கடல் சிங்கங்கள் அபூர்வமான வகைகளாகும். ஜப்பானிய கடல் சிங்கம் ஏறக்குறைய அழிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அவற்றின் தோல், விஸ்கர்ஸ், உள்ளுறுப்புகள் மற்றும் உடலில் இருக்கும் எண்ணெய்க்காக வேட்டையாடப்படுகின்றன. மேலும் சர்க்கஸ் வர்த்தகத்திற்காகவும் பிடிக்கப்படுகின்றன. நியூசிலாந்து கடல் சிங்கம், ஆஸ்திரேலியா கடல் சிங்கம், கலபகோஸ் கடல் சிங்கம், கலிபோர்னிய கடல் சிங்கம், தென் அமெரிக்கா கடல் சிங்கம், ஸ்டெல்லர்ஸ் கடல் சிங்கம் போன்ற வகைகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com