சிங்கம் காட்டிற்கு ராஜாதான்... மலைப்பகுதியின் ராஜா எந்த விலங்கு தெரியுமா?
காட்டு விலங்குகளின் ராஜா சிங்கம். அதுபோல மலைப்பகுதியில் வாழும் விலங்குகளின் ராஜாவாகக் கருதப்படுவது ரெட் டீர் எனப்படும் சிவப்பு மான். சிவப்பு மான் பற்றிய சிறப்புகளை அறிவோம்.
சிவப்பு மான்கள் ஐரோப்பா, ஆசியா, வடமேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஸ்காட்லாந்தில் உள்ள மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இவை கம்பீரமான விலங்கு ஆகும்.
சிவப்பு மான்கள் ஸ்காட்லாந்தின் மலைப்பகுதியின் பெருமை மிகுந்த அடையாளமாகவே கருதப்படுகிறது. ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸின் திறந்தவெளி சதுப்பு நிலங்கள் மற்றும் மலைகளில் சிவப்பு மான்கள் வாழ்ந்தாலும், வனப்பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகளிலும் கூட செழித்து வளர்கின்றன.
பிரிட்டனில் உள்ள நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் சிவப்பு மான் மிகப்பெரிய விலங்கு ஆகும். 500 பவுண்டுகள் வரை எடை இருக்கும். இவற்றின் தோள்பட்டையில் இருந்து 4 அடிக்கு மேல் உயரமும் இருக்கும். இந்த மான் இனங்களில் பெண் மான்கள்தான் இவற்றின் மந்தைகளை வழி நடத்துகின்றன. சராசரியாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
காட்டிலுள்ள பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் இலைகளை உண்ணுகின்றன. இவை வேப்பமரத்தில் உள்ள இலைகளை மிக விரும்பி உண்ணும். ஸ்காட்லாந்து மலைப்பகுதிகளில் ஏராளமான வேப்ப மரங்கள் உள்ளன. மேலும் புல் மற்றும் வைக்கோலும் இவற்றுக்கு மிக பிடித்த உணவாகும். குளிர்காலத்தில் இவற்றிற்கு போனிக் கொட்டைகள் வழங்கப்படுகின்றன. அவை அதிக நார்சத்துள்ள தீவனங்கள் ஆகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
மேலும் சிவப்பு மான்கள் இளம் புற்கள், மூலிகைகள், இலைகள், மொட்டுகள், நீர்வாழ் தாவரங்கள், பழங்கள், இயற்கையான உறைபனியைக் கூட உண்ணும். அவை குறைந்த நார்ச்சத்து கொண்டவையாக இருந்தாலும் அதிகப் புரதம் கொண்டவை
சிவப்பு மான்களுக்கு மிக அழகான நீளமான கொம்புகள் உண்டு. அவை ஒரு மீட்டர் நீளம் வரை வளரும். ஆண் மான்கள் தங்கள் பெண் மான் கூட்டத்தை மற்ற மான்களிடமிருந்து பாதுகாக்க தங்கள் கொம்புகளைதான் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் இந்த மான்களுக்கு கொம்புகள் உதிர்ந்து போகின்றன. பின்னர் மீண்டும் அவை வளரும்.
உண்மையில் இந்தக் கொம்புகள் மான்களின் எலும்புகள் ஆகும். இவற்றின் கொம்புகளில் 10 அல்லது 12 கிளைகள் இருக்கும். இவற்றின் கொம்புகள் வெல்வெட்டால் மூடப்பட்டிருக்கும். இவற்றை தொட்டுப் பார்த்தால் சூடாக இருக்கும். கிளைகள் மற்றும் மரங்களில் தங்கள் கொம்புகளை தேய்ப்பதன் மூலம் அவை உதிர்ந்துபோகும்.
இந்த மான்களின் கன்றுகள் பிறக்கும்போது புள்ளிகளுடன் பிறக்கின்றன. பின்னர் அவை வளரும்போது அதனுடைய உடல் பகுதியில் உள்ள கோட் போன்ற தோல் பகுதி கருமையாக மாறுகிறது சில மாதங்களில் இந்த புள்ளிகள் மறைந்துவிடும். இவற்றின் ரோமங்கள் செம்பழுப்பு நிறமாகவும் குளிர்காலத்தில் அடர் சாம்பல் நிற பழுப்பு நிறமாகவும் மாறுகின்றன.
இந்த அழகான மான்கள் வேட்டையாடப்பட்டு இவற்றின் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கஜகஸ்தான், மங்கோலியா, சீனா மற்றும் ரஸ்தியாவில் இவற்றைவேட்டையாடி மக்கள் உண்ணுகிறார்கள். மலைகளின் ராஜாவான சிவப்பு மான்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.