Renewable Energy
Renewable Energy

Renewable Energy: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் பற்றி தெரியுமா?

Published on

சமீபகாலமாகவே காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கும், பெட்ரோல், டீசல், போன்ற புதைப்படிவ எரிபொருட்களை நாம் அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், நிலையான தீர்வுகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தீர்ப்பதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒரு சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி எதிர்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும். அத்தகைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

சூரிய சக்தி (Solar Power): சூரிய சக்தி என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மிக முக்கிய ஆற்றல் மூலமாகும். சோலார் பேனல்கள் மூலமாக சூரியனிலிருந்து ஆற்றலை திறமையாகவும், செலவு குறைந்த முறையிலும் உருவாக்கலாம். சோலார் பேனல்கள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, வீடுகள் வணிகங்கள் போன்ற பலவற்றிற்கும், ஆற்றல் மூலமாக உள்ளது.

காற்றாலை (Wind Energy): கடந்த சில ஆண்டுகளாகவே காற்றாலை மின்சார உற்பத்தி என்பது வேகமெடுத்துள்ளது. இதன் மூலமாக காற்றின் வேகத்தை இயக்க ஆற்றலாக மாற்றி, மின்சாரம் தயாரிக்கலாம். காற்று அதிகமாக வீசும் கடலோரம் மற்றும் மலைப்பகுதிகளில் இந்த முறை மின்சார உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரிதளவில் எந்த பாதிப்பும் இல்லை என்பதால், எதிர்காலத்தில் இதன் மூலமாக ஒரு நிலையான ஆற்றலை நாம் பெற முடியும்.  

நீர் மின்சாரம் (Hydro Power): நெகிழி ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நடைமுறையானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது. ஆறுகள், அணைகள் மற்றும் அலையின் நகர்வு மூலமாக நீரின் ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மின்சாரமானது, சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. குறிப்பாக இதிலிருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதில்லை என்பதால், ஒரு நிலையான நம்பத் தகுந்த ஆற்றல் மூலமாக நீர் மின்சார முறை உள்ளது. 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் ஜவ்வரிசி வடம் (வத்தல்)... அட ரொம்ப ஈசிங்க! 
Renewable Energy

புவிவெப்ப சக்தி (Geothermal Energy): பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் வெப்பம் மற்றும் வெப்ப நீராவியைப் பயன்படுத்தி, டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும். இதில் பல ஆபத்துகள் இருந்தாலும், இதுவும் ஒரு வகையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். 

பயோமாஸ் ஆற்றல் (Biomass Energy): பயோமாஸ் ஆற்றல் என்பது விவசாயக் கழிவுகள், மரத் துகள்கள் மற்றும் குப்பைகளைப் பயன்படுத்தி எரிவாயு அல்லது மின்சாரம் தயாரிப்பதை உள்ளடக்கியதாகும். இதை நேரடியாக வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம் அல்லது அதை எரிபொருளாகப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கலாம். இதன் மூலமாக கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படுகிறது. 

logo
Kalki Online
kalkionline.com