டால்பின்கள் கடலில் மட்டுமல்ல நதியிலும் சில வகை வாழ்கின்றன, நதிநீர் டால்பின்களால் கடலில் வாழமுடியாது. இந்தியா, கங்கை நதி டால்பின் (பிளாட்டனிஸ்டா கஞ்செடிகா) மற்றும் சிந்து நதி டால்பின் ( பிளாட்டனிஸ்டா மைனர் ) ஆகிய இரண்டு வகையான நன்னீர் டால்பின்களின் பிறப்பிடமாக உள்ளது.
இந்த டால்பின்கள் நதியின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும் காரணிகளாக உள்ளன. இந்தியாவின் தேசிய நீர் விலங்காக கங்கை நதி டால்பின்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,50000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதி டால்பின்களிலிருந்து கங்கை நதி டால்பின்கள் பிரிந்தன. தற்போது இரண்டு வகை டால்பின்களும் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் விதிகளின் கீழ் அட்டவணை I இல் பாதுகாக்கப்படும் இனங்களாக நதிநீர் டால்பின்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.1980 ஆம் ஆண்டு முதல், 500 டால்பின்களின் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் நீர்வரத்து குறைதல், நதி வறண்டு போதல், தூண்டில் அல்லது வலைகளில் சிக்கிக் கொள்ளுதல், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் ரசாயன உரங்கள் கலந்த தண்ணீர் நதியில் கலப்பது , தொழிற்சாலைகளின் கழிவுகள் நதியில் கலப்பது , அணைகளால் போக்குவரத்து தடைபடுவது, எந்திர படகுகளில் அடிபடுவது போன்ற காரணங்கள் மறைமுகமாக டால்பின்களை அழிகின்றன.அதே நேரம் நேரடியாக டால்பின்களை சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு புராஜெக்ட் டால்பின் திட்டம் தொடங்கப்பட்டு முதல் முறையாக விரிவான நதிநீர் டால்பின்கள் கணக்கெடுப்பு துவங்கியது.இந்தியாவின் எட்டு மாநிலங்களில் 8507 கி.மீ நீளமுள்ள 28 ஆறுகளில் இந்த ஆய்வு விரிவாக மேற்கொள்ளப்பட்டது. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்து நதிப் படுகைகளில் 6,327 டால்பின்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான ஆறுகளில் உள்ள டால்பின்கள் எண்ணிக்கை 2,397 என மதிப்பிடப் பட்டுள்ளது. பீகாரில் 2,220 டால்பின்கள் உள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் 815 உள்ளதையும் கணக்கிட்டுள்ளனர். மேலும் அசாம் மாநிலத்தில் 635 டால்பின்களும், ஜார்க்கண்டில் 162 டால்பின்களும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 95 டால்பின்களும் கணக்கிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மிகக் குறைவான அளவில் 3 டால்பின்கள் மட்டும் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கை நதியில் 3700 என்ற அளவில் டால்பின்கள் உள்ளது கண்டறியப்பட்டது. அப்போது டால்பின்கள் எண்ணிக்கை 5000 ஆக இருக்கும் என்று நினைத்திருந்தனர். ஆயினும் பெருமளவில் குறைவாக இருந்தது அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
தற்போது பியாஸ் நதியில் காணப்படும் சிந்து நதி டால்பின்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அழிந்து வரும் தனித்துவ உயிரினமான நதிநீர் டால்பின்களை பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் விக்ரஷ்ஷீலா கங்கை நதி டால்பின் பாதுகாப்பு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இது நதிநீர் டால்பின்களை பாதுகாக்கும் நாட்டின் முதல் சரணாலயமாகும். உபி மாநிலத்தில் டால்பின்களை துன்புறுத்துவோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டால்பினை துன்புறுத்தியது தொடர்பாகவும் , உணவுக்காக பிடித்ததற்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். நதிநீர் டால்பின்கள் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.