மாடியில் கட்டாயம் வைக்க கூடாத 5 செடிகள் - வைத்தால் நீங்கள் காலி..!

அழகுக்காக மாடியில் வளர்க்கும் சில செடிகள் உங்கள் வீட்டையே சீர்குலைக்கும் தெரியுமா?
மாடித்தோட்டம் | Plan
மாடித்தோட்டம் | PlanImage credit: Gemini AI
Updated on

மாடித்தோட்டத்தில் எந்தெந்த மரங்களை வளர்க்கக் கூடாது? தோட்டக்காரர்களின் அதிர்ச்சி அனுபவங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மாடித் தோட்டங்களுக்குப் பொருந்தாத தாவரங்கள்:

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மாடித்தோட்டம் அமைப்பது ஒரு பிரபலமான நகர்ப்புறப் பழக்கமாகிவிட்டது. இங்குள்ள குறைந்த இடவசதி காரணமாக, குடும்பங்கள் மொட்டை மாடிகளில் பசுமையை வளர்க்க ஆசைப்படுகின்றன. இருப்பினும், எல்லாத் தாவரங்களும் இந்த மொட்டை மாடி வசதிக்கு ஏற்றவை அல்ல. சில செடி இனங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும், மொட்டை மாடிகளில் வளர்க்கப்படும்போது கட்டிடத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் அல்லது சில பராமரிப்புச் சிக்கல்களை கூட உருவாக்கக்கூடும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அதிக நீர் தேவைப்படும் அலங்கார செடிகள் (பாக்கு மரம், அல்லி செடி (Peace lilly):

இந்த அலங்காரச் செடிகள் செழிப்பாக இருக்க தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதனால் மொட்டை மாடிகளில், அதிகப்படியான நீர் கூரை அல்லது தரை தளத்திற்குள் கசிந்து, கான்கிரீட்டை பலவீனப்படுத்தி, பாசி பிடிக்க (fungus) ஊக்குவிக்கிறது. சில தோட்டக்காரர்கள், பாக்கு மரங்கள் அல்லது இந்த வகையான அல்லி செடிகளைப் பராமரிக்கும்போது, மேற்கூரையில் ஈரப்பதம் மற்றும் கசிவு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பின் இந்தச் செடிகள் மொட்டை மாடியை முழுவதும் ஆக்கிரமித்து, பராமரிப்புச் சிக்கல்களை உருவாக்குவதாக அதனை பராமரித்த தோட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அல்ர்ஜியை உண்டாக்கும் செடிகள் (கருப்பு பருத்தி):

கருப்பு பருத்தி (Parthenium), பெரும்பாலும் தற்செயலாக முளைக்க கூடியது. ஆஸ்துமா மற்றும் சருமப் பிரச்னைகளை ஏற்படுத்துவதில் பெயர் பெற்றது.

சிறிய தொட்டிகளில் கூட, இதன் மலர்கள் மகரந்த சேர்க்கைகாக (pollination) பரவலாகப் பரவுகிறது. அறிவியல் ஆய்வுகளும் இதன் அல்ர்ஜி தாக்கத்தை உறுதி செய்வதால், இது சிறிய மொட்டை மாடி இடங்களுக்குப் பாதுகாப்பற்றது. இதன் இருப்பு, ஒரு ஆரோக்கியமான தோட்டத்தையே ‘சுவாசக் கோளாறுகளின்’ இடமாக மாற்றக்கூடும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக தண்டின் மூலம் புதினா வளர்ப்பது எப்படி?
மாடித்தோட்டம் | Plan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் செடிகள் (கோலியஸ்):

கோலியஸ் (coleus) போன்ற புதர் அலங்காரச் செடிகள், மண்ணில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை தக்க வைத்து; கரையான், கொசுக்களை ஈர்க்கின்றன. இந்தச் செடிகள் மொட்டை மாடிகளில் வளர்க்கப்பட்டபோது, தோட்டக்காரர்கள் சுகாதாரப் பிரசனைகளைக் சந்தித்ததாகவும். அவற்றின் கவரும் வண்ணங்கள், பூச்சித் தொல்லை போன்ற அபாயங்களை அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.

என்னதான் அவை அழகு சேர்த்தாலும், ஒட்டு மொத்த கட்டிட பாதுகாப்பை இவை குறைத்துவிடுகின்றன.

பப்பாளி, வாழை:

இவை பெரிய மரங்கள் இல்லாவிட்டாலும், பப்பாளி மற்றும் வாழை செடிகள் மொட்டை மாடிக் கட்டிடங்களுக்கு பெரிய அழுத்தத்தை அளிக்கின்றன. பப்பாளியின் வேர்கள் டைல்ஸ்களில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. அதே சமயம்

வாழைகள் அவற்றின் தண்டுகளில் நீரைத் தேக்கி வைக்கின்றன. இந்த செடி இனங்களை வளர்த்த பிறகு, நீர் கசிவு மற்றும் பலவீனமான கான்கிரீட் தளங்கள் உணரப்பட்டதாக சில குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர். அவற்றின் காய்க்கும் எடை, நீர் தேக்கும் தன்மை காரணமாக, அவை மொட்டை மாடித் தோட்டங்களுக்கு பொருந்தாது.

மாடித்தோட்டம் | Plan
மாடித்தோட்டம் | PlanImage credit: Gemini AI

வேகமாகப் பரவும் கொடிகள்: மணி பிளான்ட் (Money Plant), மார்னிங் குளோரி (Morning Glory)

மணி பிளான்ட் மற்றும் மார்னிங் குளோரி போன்ற செடி கொடிகள் ஆக்ரோஷமாகப் பரவி வளரக்கூடியவை. அவற்றின் ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ள வேர்கள், சுவற்றின் பூச்சு, அதன் இணைப்புகளுக்குள் ஊடுருவி, சிறு விரிசல்களை ஏற்படுத்துகின்றன.

மொட்டை மாடிச் சுவர்களில் ஒரு முறை இவை ஒட்டிக்கொண்டால், அவற்றை அகற்றுவதுபோது மேற்பரப்பு சேதமாக கூடும்.

சிந்தனையாளர்களின் கருத்துகள்:

மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்: ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வளங்களை பூமி வழங்குகிறது; ஆனால், ஒவ்வொரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய அது போதுமானதல்ல. இந்த சொற்கள், மொட்டை மாடித் தோட்டக்கலைக்கும் பொருந்தும். புதுமைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பொருத்தமற்ற தாவர வகைகள் வீடு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மொட்டை மாடித் தோட்டத்திற்கான தாவரத் தேர்வை நாம் கவனித்து செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா.. பாம்பு கொட்டாவி விட இதுதான் காரணமா. இத கட்டாயம் படிங்க!
மாடித்தோட்டம் | Plan

பாக்கு மரம் (Areca Palm), பீஸ் அல்லி , பப்பாளி, வாழை, மணி பிளான்ட் மற்றும் கருப்பு பருத்தி போன்ற சிறிய தாவரங்கள் கூட மொட்டை மாடிகளில் வளர்க்கப்படும்போது, ​​கட்டிடத்தின் கட்டமைப்புக்கு சேதம், ஈரப்பதம் தொடர்பான சிக்கல்கள் அல்லது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மொட்டை மாடிச் சூழலுக்கு ஏற்ற, குறைந்த எடையுள்ள மற்றும் ஆழம் குறைவான வேர்களைக் கொண்ட தாவர வகைகளைத் தேர்ந்தெடுப்பதே இதற்கு பாதுகாப்பான வழியாகும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மரங்களின் இயற்கையான வளர்ச்சி மற்றும் கட்டிடக் கட்டமைப்புக்கு இடையேயான சமநிலையைப் புரிந்து கொண்டு, இயற்கை அழகும், ஈர்ப்பும் நிறைந்த பாதுகாப்பான பசுமைச் சூழலை உங்கள் இல்லத்தில் உருவாக்கலாம்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com