
உலகில் பலஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் இருந்தாலும் அவற்றில் சுமார் 100 வகைகள் மட்டுமே அதிக விஷம் கொண்டவையாக உள்ளது.இவற்றில் மிக அதிக விஷம் கொண்டது என விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பாக கண்ணாடி விரியன் உள்ளது. இதனை ரசல் வைப்பர் (Russel Viper) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
தோற்றத்தில் பார்க்கும்போது மலைப்பாம்பு போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், உருவத்தில் அதைவிட சிறியதாக இருக்கும். இந்த கண்ணாடி விரியனின் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிரிழக்க செய்யும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற பாம்புகள் கடிக்கப்பட்டால் சில மணி நேரங்கள் வரை மனிதர்களால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் கண்ணாடி விரியன் கடித்தால் சில நிமிடங்களில் உயிரிழக்க நேரிடும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
வானவில் வர்ண பாம்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாண காட்டுப்பகுதியில் அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் . இந்த வானவில் வர்ணப்பாம்பு .அரிய வகையைச்சேர்ந்த இந்த பாம்பு 4அடி நீளம் கொண்டது. கருப்பும், நீல நிறமாக மேற்புறத்தில் காணப்படும் இவை சிகப்பு, மஞ்சள் நிற வரிகளையும் கொண்டது.
இவ்வகைப்பாம்புகள் தங்களது வாழ்க்கையின் பெரும் பகுதியை நீர் வாழ் தாவரங்களிடையே மறைந்து வாழ்கிறது .யாருக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகை பாம்புகள் நிலப்பரப்பிற்கு வருவது அரிது. இதற்கு முன் இவ்வகை பாம்பு ஒன்று 1969- ம் ஆண்டு வெளியே வந்தது. அதற்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியே தலை காட்டி உள்ளது.
அசுரவேகத்தில் மணலுக்குள் தன்னைதானே புதைத்துக்கொள்ளும் பாம்பு.
சைட்விண்டர் எனும் வகைப்பாம்புகள் பாலைவன பகுதிகளில் வாழ்வதற்கு ஏதுவாக உடலமைப்பு கொண்டது . சைட்விண்டர் ராட்டில்ஸ்னேக் என்பது அதிக வேகத்தில் இரையைத் தேடும் பாம்பு இனமாகும். இது சுமார் 29 கிமீ வேகத்தில் இரையை நோக்கி விரைகிறது.
அது நகரும் விதம் தனித்துவமானது, எனவே அதன் வேகமும் மிகவும் அதிகமாக இருக்கும். சைட்விண்டர்கள் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்கின் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த வகை பாம்புகள் அதன் மூக்கின் அருகே அமைந்துள்ள வெப்ப உணர்திறன் குழிகளைப் பயன்படுத்தி, கொறித்துண்ணிகள் மற்றும் சிறிய பறவைகள் போன்ற சூடான இரத்தம் கொண்ட இரையைக் கண்டறிகிறது. பிறகு விஷத்தை கக்குகிறது. அதன் வீரியமான விஷம் தாக்கப்பட்ட இரையை வினாடிகளிலேயே செயழிழக்கச்செய்கின்றது.
இது பெரும்பாலும் மணலில் தன்னைப் புதைத்துக் கொள்கிறது, அதன் தலை மற்றும் கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படி சந்தேகத்திற்கு இடமின்றி இரையை தாக்க பதுங்கியிருக்கும் இந்த பாம்பு.