ஏன் பெருங்கடல்களை பாதுகாக்க வேண்டும்? பூமியின் நீலப் புரட்சியின் கதை!

பூமியின் 71% பரப்பளவில் பரந்து விரிந்துள்ள 5 பெருங்கடல்களின் ஆச்சரியமான தகவல்கள், ஆழம் மற்றும் புவியியல் முக்கியத்துவத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
பெருங்கடல்கள் | Oceans
பெருங்கடல்கள் | OceansAI Image
Updated on

நம் உலகில் உயிர்கள் வாழ்வதற்கு பெருங்கடல்களே காரணம்.

இந்த உலகில் 2000 க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடலையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

பூமியின் மேற்பரப்பில் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. உலகின் 5 பெருங்கடல்கள் பூமியை ஆழ்கின்றன.

பெருங்கடல்கள் பூமியின் காலநிலை வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன. அவை வெப்பத்தை சமநிலைப்படுத்துவதோடு மழை பொழிவு உருவாவதற்கு இன்றியமையாததாக உள்ளன.

பூமியை முதன் முதலில் சுற்றி வந்த பயணத்தை ஏற்பாடு செய்த போர்த்துக்கீசிய ஆய்வாளர் ஆன ஃபெர்னாவோ டி மாகல் ஹேஸின் பெயரில் இருந்து பசிபிக் பெருங்கடல் அதன் பெயரைப் பெற்றது.

உலகின் மிகச் சிறிய பெருங்கடலான ஆர்டிக் பெருங்கடலில் பூமியின் கண்டறியப்படியாத பெட்ரோலிய வளங்களில் 25 சதவீதம் உள்ளது என அறியப்பட்டுள்ளது.

உலகின் உள்ள 5 பெருங்கடல்கள்:

1) பசிபிக் பெருங்கடல்:

பசிபிக் பெருங்கடல் உலகின் முதலாவது பெரிய பெருங்கடலாகும். உலகளாவிய கடல் பரப்பில் 45% கொண்டு உள்ளது.

மேலும், இதுவே மிகப்பெரிய நீர் நிலையாகவும், பூமிக் கோளில் உள்ள மிகப்பெரிய ஒற்றை நில அமைப்பாகவும் திகழ்கிறது.

பசிபிக் பெருங்கடல் உலகின் மிக ஆழமான பெருங்கடலாகும். சராசரி ஆழம் 4200 மீட்டர் ஆகும். இது மரியானா அகழியில் ஈடு இணையற்ற ஆழமான 10,920 மீட்டர் வரை செல்கிறது. இதன் பரப்பளவு 168, 723,000 சதுர கிலோ மீட்டர்கள்.

பொதுவாக பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் ஆண்டு முழுவதும் லேசான காற்று வீசுகிறது. வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் மேற்கு காற்றுகளில் இருந்து ஏற்படும் பெருங்கடல் அலை பரவலால் அலையின் உயரம் பராமரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆண்டு முழுவதும் மல்லிகை பூக்க வேண்டுமா? இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க!
பெருங்கடல்கள் | Oceans

2) அட்லாண்டிக் பெருங்கடல்:

அட்லாண்டி பெருங்கடல் உலகின் பெரிய இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது உலக அளவில் கடல் பரப்பில் 22 சதவீதத்தை கொண்டுள்ளது. அண்டைக் கடல்களையும் சேர்க்கும் போது இந்த அளவு 29% ஆக அதிகரிக்கிறது.

இதன் சராசரி ஆழம் 3660 மீட்டர் ஆகும். மேலும் இதன் மிக ஆழமான பகுதி புவேர்ட்டோ ரிக்கோ அகழியில் 8,648 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் மிகவும் காற்று வீசும் மற்ற கொந்தளிப்பான பெருங்கடல் ஆகும்.

இதில் வெப்ப மண்டலப்புயல் செயல்பாடு முற்றிலும் இல்லாதததால் இது ஒரு அசாதாரணமான பெருங்கடலாக கருதப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் வர்த்தக காற்றுகளே மற்ற எல்லா பெருங்கடல்களையும் விட மிகவும் பலவீனமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜெபல் உம் அத் தாமி: பாலைவனத்தின் நடுவே ஒரு சொர்க்கம்!
பெருங்கடல்கள் | Oceans

3) இந்திய பெருங்கடல்:

இந்திய பெருங்கடல் உலக கடல் பரப்பில் 20% சதவீதத்தை ஆக்கிரமித்து உள்ளது. இது மூன்றாவது இடத்தில் உள்ளது.

70, 560, 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது.

இது பூமத்திய ரேகையில் 6,400 கிலோமீட்டர் அகலம் கொண்டது. சராசரி ஆழம் 3,897 மீட்டர் ஆகவும் ஜாவா அகழியின் அடிமட்டம் 7,725 மீட்டர் ஆகவும் உள்ளது.

இங்கு காற்றுகள் புவியிலேயே மிக நீண்ட தூரமாய் வீசுவதால், இவை 'கர்ஜிக்கும் நாற்பதுகள்' என அழைக்கப்படுகிறன.

மிகப்பெரிய கடல் அலைகளை உருவாக்கி அதன் விளைவாகத் தொடர்ந்து 'முழுமையாகப் பொங்கி எழும் கடல்கள்' ஏற்படுகின்றன.

இது கோடை காலம் முழுவதும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் ஆசிய, ஆஸ்திரேலியா பருவக்காற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

4) தென் பெருங்கடல்:

தென் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் பரப்பளவு 21, 960, 000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது நான்காவது இடத்தில் உள்ளது. இது அண்டார்டிகாவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பாகும்.

தென் பெருங்கடல் தனித்துவமானது. ஏனெனில், அது அண்டார்டிகாவை சூழ்ந்துள்ளது.

இங்கு கண்டத்தை சுற்றி வீசும் பலத்த காற்றுகள் வலம் சுழியாகப் பாயும் நீரோட்டங்கைளை உருவாக்குகின்றன. அண்டார்டிக் சுற்று துருவ நீரோட்டம் உலகின் மிக வலிமையான நீரோட்டமாகும்.

புவியின் கால நிலையில் தனித்துவமான பன்முகத் தன்மை வாய்ந்த கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆதரவளிப்பதிலும், தென் பெருங்கடல் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
3 நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே நடனமாடும் செடி பற்றி தெரியுமா?
பெருங்கடல்கள் | Oceans

5) ஆர்க்டிக் பெருங்கடல்:

ஆர்க்டிக் பெருங்கடல் உலகின் ஐந்து பெருங்கடல்களில் மிகச்சிறியதும் ஆழம் குறைந்ததும் ஆகும். இதன் பரப்பளவு 15, 558, 000 சதுர கிலோமீட்டர்கள்.

குளிர்காலத்தில் அதிக அளவில் கடற்கரை உருவாகி கோடையில் உருகுவதால் பூமியின் காலநிலையை ஒழுங்கு படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது.

எனவே இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது குளிர்காலத்தில் பெரும்பாலும் உறைந்திருக்கும்.

ஆர்க்டிக் பெருங்கடலில் மீன்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிலங்கள் உட்பட பல வகையான கடல் வாழ் உயிரினங்களின் தாயகமாக திகழ்கிறது.

ஆர்க்டிக் பெருங்கடலுக்கு சைபீரியாவின் பெரிய ஆறுகளில் இருந்து ஏராளமான நன்னீரும், அட்லாண்டிப் பெருங்கடலில் இருந்து வெது வெதுப்பான உப்பு நீரும் கிடைக்கிறது.

எனவே, ஆர்க்டிக் பெருங்கடலில் வாழும் கடல் உயிரினங்களுக்காக மட்டுமல்ல; ஒட்டு மொத்த பூமியின் கால நிலைக்காகவும் கடல்களை தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com