
உலகம் முழுவதும் பல்வேறு வகையான உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் சில உயிரினங்கள் சில நாடுகளில் மட்டும் அல்லது தட்ப வெப்ப நிலைகளில் மட்டுமே வசிக்கும் தன்மை உடையனவாக விளங்குகின்றன. அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கென்யா நாட்டில் மட்டுமே வசிக்கும் 10 வித்தியாசமான உயிரினங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆஃப்ரிகன் சிவெட்: பூனை குடும்பத்தைச் சேர்ந்த இது, இரவில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும். வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் இதன் வாசனை தனித்தன்மையோடு இருக்கும். பல பூச்சிகளைத் தின்று சுற்றுச்சூழலை இது காக்கிறது.
டொபி ஆன்டிலோப்: இதன் உடல் ப்ரௌன் நிறத்துடனும் சில இடங்களில் நீல இணைப்புடன் காணப்படும். சிவப்பு கலந்த ப்ரௌன் உடல் பளிச்சென்று இருக்கும். மிக விரைவாக ஓடக்கூடிய உயிரினம் இது.
செர்வல் பூனை (serval cat): இதற்கு நீண்ட வால் மற்றும் பெரிய காதுகள் உண்டு. இது உயரத்தில் எம்பிக் குதித்து பூச்சிகளையும் உயிரினங்களையும் பிடித்து உண்ணும். பெரும்பாலும் தனிமையிலேயே இது காணப்படும்.
பாட் காதுகள் நரி (bat eared fox): இது சிறிய உருவமாக இருந்தாலும் பூச்சிகளை உண்ணும். இதன் காதுகள் மிகப்பெரிதாக இருக்கும். எப்போதும் கூட்டமாகவே காணப்படும். பெரும்பாலும் புல்வெளிகளிலேயே அதிகமாகக் காணப்படும். இது பாம்புகள் மற்றும் பல உயிரினங்களை உணவாகக் கொள்ளும்.
செக்ரடரி பறவை: இது சுமார் ஒன்றரை மீட்டர் உயரமானதாக இருக்கும். இதற்கு மிக நீண்ட கால்களும், தலையில் இறக்கைகளும் காணப்படும். இது தனது வலுவான கால்களால் பாம்பை வேட்டையாடும் பலம் கொண்டது.
கராகல் (caracal): இவை ஆப்பிரிக்காவின் தனித்தன்மையோடு விளக்கக்கூடிய பூனைகளாகும். கருப்பான முடிகளை உடைய காதுகளைக் கொண்டது இது, பறக்கும் பறவைகளை காற்றில் குதித்து பிடிக்கக்கூடிய வல்லமை படைத்தது. இது அதிர்ஷ்டம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிக அரிதாகவே காணப்படும் உயிரினம் இது.
ராக் ஹைராக்ஜ் (Rock hyrox): கொறித்துண்ணி வகையைச் சேர்ந்த உயிரினமாக இது இருந்தாலும், ஒருவகையில் யானை இனத்திற்கு சொந்தக்காரன் ஆகும். பாறைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இது, எப்போதும் கூட்டமாக வாழும். நீண்ட ஒலியை எழுப்பக் கூடியதாகும்.
இலண்ட் ஆன்டிலோப் (Eland antelope): ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய உருவம் கொண்ட மான் வகையைச் சேர்ந்த இந்த உயிரினம், தான் இருக்கும் இடத்திலிருந்து 2 மீட்டர் அளவு குதிக்கக்கூடிய வல்லமை பெற்றது. பெரும்பாலான சமயங்களில் இவை அமைதியாகவே காணப்படும்.
வெள்ளை வால் கீரி: கீரி இனங்களிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் இதற்கு அடர்த்தியான புசுபுசுவென்ற வெள்ளை வால் காணப்படும். பெரும்பாலும் இரவிலேயே இது மற்ற உயிரினங்களை வேட்டையாடும்.
லிலாக் ப்ரெஸ்டெட் ரோலர் (Lilac breasted roller): கென்யாவின் தேசியப் பறவையான இது, கண்களுக்கு விருந்தளிக்கும் நிறங்களைக் கொண்டது. மஞ்சள், நீலம் மற்றும் ஊதா நிறங்களில் காணப்படும். தனது கவர்ச்சியால் எல்லோரையும் ஈர்க்கக்கூடியது.