ஊருக்குப் போறீங்களா? கவலை வேண்டாம்! உங்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற இதோ சூப்பர் ஐடியா!

self-watering-planter
self-watering-planter
Updated on

கோடை காலத்தில் மாடித்தோட்ட செடிகளை பராமரிப்பது சற்று சவாலான விஷயம்தான். அதிலும் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல நேரிட்டால் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் கருகிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த கவலையை போக்கும் வகையில் செடிகள் வாடாமல் செடிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கும் 5 செல்ஃப் வாட்டரிங் பிளான்டர் டிசைன்கள் உள்ளன. கிச்சன் கார்டன் பால்கனி தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற கவலையை அகற்றும் செல்ப் வாட்டரிங் பிளான்டர் குறித்து இப்பதிவில் காண்போம்.

துணிப்பை பெஸ்ட் டிசைன்

துணிப் பைக்குள் தண்ணீர் தேக்கி வைக்கும் எடை குறைவான டிசைன் அதிக இடம் இல்லாதவர்களின் தேர்வாக உள்ளது. குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்கப் பயன்படும் இந்த வகை டிசைன் எடை குறைவாக இருப்பதால் எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. பால்கனி மற்றும் மொட்டை மாடியில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகச்சிறந்ததாக இது உள்ளது.

தண்ணீர் தேக்க தொட்டி டிசைன்

தண்ணீர் தேக்க தொட்டிக்கும் மண்ணிற்கும் இடையில் ஒரு துணி அல்லது கயிறு (விக்) இணைக்கப்பட்டிருக்கும். விக் மெதுவாக தண்ணீரை உறிஞ்சி மண்ணிற்கு கொண்டு சேர்க்கும் இந்த டிசைன் மிகவும் எளிதானதாக இருப்பதோடு செலவும் குறைவானதாக இருக்கிறது. மூலிகைச் செடிகளுக்கும், சிறிய செடிகளுக்கும் ஏற்ற இந்த டிசைனை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

தண்ணீர் தேங்கும் அபாயத்தை குறைக்கும் டிசைன்

தொட்டியின் மேலே மண்ணும் தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் டேங்க் இருக்கும். செடியின் வேர்கள் தேவைப்படும்போது தண்ணீர் டேங்கில் இருந்து உறிஞ்சிக்கொண்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு செடியின் வளர்ச்சிக்கு உதவும். தக்காளி, மிளகாய், கொத்தமல்லி போன்ற செடிகளுக்கு ஏற்ற இந்த டிசைனில் செடியில் அதிகமாக தண்ணீர் தேங்கும் அபாயம் குறைவாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
மடகாஸ்கர்: மாயாஜாலத் தீவும்... அழியக் கூடாத அதிசய மரங்களும்!
self-watering-planter

ஆட்டோமேட்டிக் வாட்டர் கண்ட்ரோல் சிஸ்டம்

செடிகளுக்கு சரியான அளவில் தண்ணீர் வழங்க இந்த ஆட்டோமேட்டிக் வாட்டர் கண்ட்ரோல் சிஸ்டம் உதவுகிறது. ஏனெனில் இந்த நவீன மாடலில் தண்ணீர் அளவைக்காட்ட இன்டிகேட்டர் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் தண்ணீரை எப்போது நிரப்ப வேண்டும் என தெரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதால் பிசியாக இருப்பவர்களுக்கு இந்த மாடல் வரப்பிரசாதமாக உள்ளது.

சென்ட்ரல் வாட்டரிங் டிசைன்

வெர்டிகள் பிளான்டர் மூலம் குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்கலாம். இதில் சென்ட்ரல் வாட்டரின் சிஸ்டம் இருப்பதால் மேலிருந்து கீழாக சமமாக அனைத்து செடிகளுக்கும் தண்ணீர் வீநியோகிக்கிறது. கோடை காலத்தில் இந்த டிசைன் வீட்டு சுவர்களை அழகாக வைத்திருப்பது செடிகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.

மேற்கூறிய ஐந்து டிசைன்களும் கோடை காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் கவலையிலிருந்து விடுதலை அளிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com