சைபீரிய நாரை: ரஷ்யாவில் இருந்து ராஜஸ்தான் வரும் 6 கோடி ஆண்டுகள் பழமையான பறவை!

சைபீரிய நாரை (Siberian Crane) பற்றிய முழுமையான தகவல்கள், சிறப்பம்சங்கள், வாழ்விடம் மற்றும் வலசை பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சைபீரிய நாரை | Siberian crane
சைபீரிய நாரை | Siberian crane
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

6 கோடி ஆண்டுகளுக்கு மேல் பூமியில் வாழ்ந்து வரும் அபூர்வ பறவை இனம் சைபீரிய நாரை! ரஷ்யாவின் கடுமையான குளிரைத் தாங்க முடியாமல், ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து ராஜஸ்தான் வரை வலசை வரும் இந்த அற்புதப் பறவைகளின் வியக்க வைக்கும் தகவல்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

உலகில் மொத்தம் 19 வகையான நாரை இனங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று 'சைபீரிய நாரை (Siberian Crane)'. இது ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் நீண்ட தூரம் வலசை போகும் ஓர் அரிதான நீர்ப்பறவை ஆகும். மிகவும் அருகிவரும் பறவைகள் இனமாக பட்டியலிடப்பட்டுள்ள இந்தப் பறவைகள் தற்போது 4000 மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதிர்ந்த சைபீரிய நாரைகள் கிட்டத்தட்ட பறக்கும்போது தெரியும் கரு நிற சிறகுகளைத் தவிர, இதன் உடல் முழுமையும் வெண்மையாக இருக்கும். 'கக்ரூஸ் லியூகோஜெரானஸ் (Grus leucogeranus)' என்பது இதன் விலங்கியல் பெயர்.

சைபீரிய நாரைகள் (Grus leucogeranus) அழகான, பனி போன்ற வெண்மை நிறப் பறவைகளாகும்.

இவை 1.25 மீட்டர் (நான்கு அடி) உயரம் வரை வளரக்கூடியவை மற்றும் இரண்டு மீட்டர் (6.7 அடி) இறக்கை விரிவைக் கொண்டவை. பெரும்பாலும் 'பனி மலர்வளையங்கள்' என்று அழைக்கப்படும் இவை, பிரகாசமான சிவப்பு நிற முகத்தையும் அலகையும், இறக்கைகளில் கருப்பு நிற முதன்மை இறகுகளையும் கொண்டுள்ளன.

மற்றபடி, இவை முற்றிலும் வெண்மையாகவே இருக்கும். நாரைகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், மிகவும் அருகிவரும் இனமாகவும் கருதப்படும் சைபீரிய நாரைகள், சதுப்பு நிலங்கள், சேற்று நிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் மட்டுமே வசிக்கின்றன. கூடு கட்டுகின்றன மற்றும் ஓய்வெடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மழையை முன்கூட்டியே கணிக்கும் தவளைகளின் வியக்க வைக்கும் ரகசியம்!
சைபீரிய நாரை | Siberian crane

ஏறக்குறைய 6 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சைபீரிய நாரை கடந்த ஒரு கோடி ஆண்டுகளாக எந்த ஒரு மாற்றத்தையும் அடையாது ஒரே மாதிரியாக வாழும் 15 வகை உயிரினங்களில் ஒன்றாகும். நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்களில் சைபீரிய நாரையும் ஒன்று. இது சுமார் 60 வருடங்கள் வரை உயிர் வாழும்.

சைபீரியாவில் குளிர்காலத்தில் கடுங்குளிர் நிலவும், பகல் நேரம் குறைவாக இருக்கும், உணவும் பற்றாக்குறையாக இருக்கும். எனவே, அவை தங்கள் குஞ்சுகளை வளர்ப்பதற்கும், சிறந்த வாழ்க்கைச் சூழலைப் பெறுவதற்கும் வேறு இடங்களைத் தேடிச் செல்கின்றன.

குளிர் காலத்தில் சைபீரிய நாரைகள் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் வழியாக சுமார் 3700 மைல்கள் தூரத்தை கடந்து வந்து ராஜஸ்தான் மாநிலத்தில் அடைக்கலமாகிறது. இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இதனை அதிகம் காணமுடியாது.

இந்தியா, குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள கியோலாடியோ தேசியப் பூங்கா போன்ற வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் ஈரநிலங்கள், குளிர்கால மாதங்களில் இதமான காலநிலை, ஏராளமான உணவு வளங்கள் (நீர்வாழ் தாவரங்கள் மற்றும் சிறிய விலங்குகள் போன்றவை) மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களை வழங்குகின்றன.

சைபீரிய நாரை | Siberian crane
சைபீரிய நாரை | Siberian crane

எனவே சைபீரிய நாரைகள் குளிர்காலத் தங்குமிடமாக இந்தியா வருகின்றன. பொதுவாக இதன் வலசைப் பயணம் செப்டம்பர் இறுதியில் புறப்பட்டு நவம்பர் அல்லது டிசம்பரில் குளிர்கால வாழிடங்களை அடையும். மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் சைபீரியாவுக்குத் திரும்பும்.

ஆழமற்ற நன்னீர் ஏரிகள், சதுப்பு நிலங்களை விரும்பி வாசம் செய்யும். தாவர வேர்கள், விதைகள், மீன்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உணவாக உண்ணும். மனித நடமாட்டம் மற்றும் வாழிட அழிவு காரணமாக இவை 'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம்' (Critically Endangered) எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு ஆசியப் பகுதியில் குறிப்பாக சீனாவின் போயாங் ஏரி பகுதியில் மட்டுமே பெருமளவில் காணப்படுகின்றன.

சைபீரிய ஆண் நாரைகள் பெண் நாரையை நடனமாடியே கவர்ந்து இணை சேர்ந்து வாழும். இவை ஒரு தார மணமுடைய வலுவான பிணைப்பை ஏற்படுத்தி வாழ்கின்றன. சுமார் 30 வருடங்கள் இணைந்து வாழும்.

நாரைகள் ஒரு சமயத்தில் இரண்டே இரண்டு முட்டைகளை இடும். பச்சை கலந்த சாம்பல் நிற முட்டை ஓட்டின் மீது அரக்கு வண்ணப் புள்ளிகளும் உண்டு. இடப்படும் இரண்டு முட்டைகளை ஆண் பெண் ஜோடிகள் இணைந்து அடைகாத்து 29 நாட்களில் குஞ்சை பொறிக்கின்றன. இரண்டு குஞ்சுகள் பொரித்தாலும் கடைசியில் ஒன்று மட்டுமே வளர்ந்து பெரியதாக மாறும். இரண்டு பார்வைகளும் குஞ்சுகளுக்கு உணவளித்தாலும், ஆண் நாரைகளே அதிக நேரம் குஞ்சுகளுக்கு உணவளிக்கும்.

முட்டையிலிருந்து நாரை வெளியே வந்தவுடனேயே நாரை வேகமாக ஓடுமாம். குஞ்சு பருவத்தில் சிறிதாக உள்ள கழுத்து நாளாக நாளாக முடிச்சு போட்டுக் கொள்ளும் அளவிற்கு நீண்டு விடுகிறது என்கிறார்கள். சுமார் 70-75 நாட்களில் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்து தனியாக வாழச் செல்கிறது.

இதையும் படியுங்கள்:
சமையல் குப்பையைத் தூக்கி எறியறீங்களா? இந்தத் தவறை இனி செய்யாதீங்க!
சைபீரிய நாரை | Siberian crane

கிழக்கிந்திய கலைகளில் சைபீரிய நாரைகள் விசுவாசம் மற்றும் நேர்மையின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கருப்பு கால்களை உடைய நாரைகளை முன்னெச்சரிக்கையின் குறியீடாக கொண்டதோடு, தற்காப்பு கலை வீரர்களின் சீரூடையில் நாரையின் உருவத்தை வரைந்தார்களாம். தமிழ் இலக்கியங்களிலும் நாரை இடம் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் அழிவின் விளிம்பிற்கு சென்ற சைபீரிய நாரைகளை காப்பாற்றிய பெருமை முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சாரும். அவர் அழியவிருந்த நாரைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி காப்பாற்றினார் என்கிறார்கள் . தற்போது தென் அமெரிக்கா தவிர வேறு எல்லா இடங்களிலும் சைபீரிய நாரைகளை காணலாம். இதற்கு நன்றியாக சில வகை சைபீரிய நாரைகளுக்கு காந்தி பெயரை அந்நாளில் வைத்தார்கள் என்பது சுவாரஸ்யமான உண்மை.

logo
Kalki Online
kalkionline.com