குறைந்த செலவில் உங்கள் தோட்டத்தைப் பராமரிக்க எளிய குறிப்புகள்!

Simple tips for maintaining a garden
To maintain the garden
Published on

யன்படுத்தப்பட்ட மரப்பெட்டிகள் (டெலிவரி பாக்ஸ்கள்) வீணாக எறியவோ அல்லது தூக்கிப்போடவோ செய்யாமல், அவற்றை மரக் காப்பாளராக (Plant Protector) மாற்றலாம்.

1.சுற்று வேலி (Protective Guard)

சிறிய செடிகளின் சுற்றிலும் பெட்டிகளை வெட்டி வைக்கலாம். மண் மற்றும் வேர்களை விலங்குகள் (பசு, ஆடு, நாய்) மிதிக்காமல் காக்கும். நேரடி சூரிய கதிர் தாக்கத்தை குறைத்து, மண்ணில் ஈரப்பதம் நீடிக்க உதவும்.

சுற்று வேலி (Protective Guard) செய்வதற்கு

தேவையான பொருட்கள்:

பயன்படுத்தப்பட்ட மரப்பெட்டி (டெலிவரி பாக்ஸ்)

கத்தரி அல்லது கத்தி

சிறிது கயிறு (தேவைப்பட்டால்)

செய்முறை:

பெட்டியை நன்றாகத் திறந்து, தட்டுபோல ஆக்குங்கள். அதை 1 முதல் 1.5 அடி உயரம் உள்ள துண்டுகளாக வெட்டுங்கள். செடியின் சுற்றிலும் அரை வட்டமாக அல்லது முழு வட்டமாக அந்த துண்டுகளை நிறுத்தி வையுங்கள். பலகைகளை ஒன்றோடொன்று கயிறால் கட்டி வைக்கலாம்.

பயன்:  விலங்குகள் செடிகளை மிதிக்காமல் காக்கப்படும். சிறிய குழந்தைகள் தவறுதலாக மிதிக்காமல் தடுக்கப்படும். நேரடி வெப்பத்தை குறைத்து, மண்ணின் ஈரப்பதம் நீடிக்கும்.

2.மல்ச் (Mulching) செய்யப் பயன்பாடு

மரப் பெட்டிகளை துண்டுகளாக நறுக்கி, தாவர வேர்களின் அருகில் பரப்பலாம். மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். களை (weed) வளர்வது குறையும். மெதுவாக சிதைவடைந்து இயற்கை உரமாகும்.

மல்ச் (Mulching) செய்வதற்கு

தேவையான பொருட்கள்:

மரப் பெட்டிகள்

கத்தரி / கத்தி / கைகத்தி

செய்முறை:  மரப் பெட்டிகளை சின்ன சின்ன துண்டுகளாக (2–3 அங்குலம்) வெட்டுங்கள். தாவரத்தின் வேர்களின் சுற்று பகுதியை சுத்தப்படுத்துங்கள். அந்த வேர்களின் மேல் 2–3 செ.மீ. தடிமனாக இந்த துண்டுகளை பரப்புங்கள். மேலே சிறிது தண்ணீர் தெளியுங்கள், அவை மண்ணில் ஒட்டிக் கொள்ளும்.

பயன்: மண் ஈரப்பதம் காக்கப்படும் (அதிக தண்ணீர் ஊற்றத் தேவையில்லை). களை (weeds) வளர்வது தடுக்கப்படும். பெட்டிகள் மெதுவாக சிதைந்து ஆர்கானிக் உரமாக மாறும்.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் வாலில் உள்ள சக்தி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Simple tips for maintaining a garden

3.பூச்சி தடுப்பு மூடி

பெட்டியின் ஓரம் கிழித்து, தாவரத்தின் அடிப்பகுதி அல்லது சிறிய கன்றுகளுக்கு மேல் பாதுகாப்பான மூடியாக வைக்கலாம். புழுக்கள் மற்றும் பறவைகள் இலைகளைத் தின்னுவதை குறைக்கும். மழை அடித்தாலும் தாவரம் நேரடியாக சேதமடையாமல் காக்கும்.

பூச்சி தடுப்பு மூடி (Insect Shield Cover) செய்வதற்கு

தேவையான பொருட்கள்:

டெலிவரி பாக்ஸ்

கத்தரி

கம்பி / குச்சி

செய்முறை: பெட்டியைத் திறந்து, தட்டையான பலகை போல ஆக்குங்கள். தாவரத்தின் மேல் வைக்கக்கூடிய அளவுக்கு வட்டமாக அல்லது சதுரமாக வெட்டுங்கள். நடுவில் சிறிய துளை செய்து, தாவரத்தண்டை ஊடுருவ வையுங்கள். பக்கங்களில் சிறிய குச்சிகளை நுழைத்து நிலத்தில் நன்றாக நிலைநிறுத்துங்கள்.

பயன்: பூச்சிகள் மற்றும் பறவைகள் நேரடியாக செடிகளைத் தாக்குவதை குறைக்கும். மழை அதிகமாகப் பெய்தாலும் செடி பாதுகாக்கப்படும். காற்றால் தாவரம் முறிவது தடுக்கும்.

இவ்வாறு மரப்பெட்டிகளை மறுசுழற்சி செய்து (Recycle) பயன்படுத்தினால், இயற்கை வளங்களை வீணாக்காமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செடிகளை பாதுகாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா!
Simple tips for maintaining a garden

இவ்வாறு மரப்பெட்டிகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், இயற்கை வளங்களை வீணாக்காமல்  சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் காக்கலாம், தாவர வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com