வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா!

வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா
jane goodall with Ape
Published on

‘மிருகங்களது வாழ்வுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது. காடுகள், வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என உலகம் முழுவதும் பிரயாணம் செய்து, மிருகங்களை சங்கிலியால் கட்டி வைப்பதும், கூட்டுக்குள் அடைத்து வைப்பதும் கொடுமையானது. மிருகங்கள் எந்தக் குற்றமும் செய்வதில்லை. மனிதக் குரங்குகளுடன் பழகினால் அவற்றைப் விட்டு பிரிய மனம் வராது என்று கூறுகிறார் ஜேன்குடோல். 23 வயதில் ஆப்பிரிக்காவின் கோம்பை நகரில் உள்ள காட்டுக்குச் சென்ற இவர், ‘காடுகள்தான் தனது ஆலயம்’ என்கிறார். கொரில்லாவோடு தனது வாழ்நாளை செலவழித்த இவர், வனவிலங்குகள் பாதுகாப்புப் பற்றி, குழந்தைகளின் விருப்பம் பற்றி, பெற்றோர்கள் செய்ய வேண்டியது பற்றி என்ன கூறுகிறார் என்பதை இப்பதிவில் காண்போம்.

இவர் விலங்கினங்களின் பழக்க வழக்கங்கள், குணம், வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து ‘கலாநிதி’ பட்டம் பெற்றவர். உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. பல நாடுகள் இவரை கவனித்து அரசு விருதுகளும் வழங்கியுள்ளன. பிரிட்டானியாவில் லிவர்பூல் நகரில் வசித்தவர் இவர்.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் வாலில் உள்ள சக்தி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா

ஜேன்குடோலின் இரண்டாவது பிறந்த நாளுக்கு அவரது தந்தை மனித குரங்கு பொம்மை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதற்கு, ‘ஜூபிலி’ என்று பெயரிட்டார். அக்காலத்தில்தான் லண்டன் மிருகக்காட்சி சாலையில் மனிதக் குரங்கு குட்டி ஈன்றதும் அதன் பெயர் ‘ஜூப்ளி’ என்றும்  உலகம் பூராவும் சூடான செய்தி பரவிக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மனித குரங்கு பொம்மைகள் கடைகளில், தெருவோரங்களில் முக்கிய விற்பனை பொருளாகியது. பிறந்த தினத்திற்கு மனிதக் குரங்கு பொம்மை கொடுத்ததை உற்றார் உறவினர், நண்பர்கள் விரும்பவில்லை.

பிறந்த தினத்திற்குச் சென்றவர்கள் ஜேன்குடோல் மனிதக் குரங்குடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து மூக்கை சுழித்துக் கொண்டனர். ஏளனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதனை அணைத்தபடியே உறங்குவார் ஜேன்குடோல். அதற்கு உணவு ஊட்டுவார். அவரது படுக்கை அறையில் அந்த ஆறடி பொம்மை ஆக்கிரமித்துக் கொண்டது. இதிலிருந்து மிருகங்கள் மீது தனக்கு கருணை, பரிவு, காருண்யம், அக்கறை பிறந்து விட்டது என்கிறார்.

மேலும், சிறு பிராயத்தில் தான் வாசித்த Tarzon book, The jungle book, Dr. Door Little புத்தகங்கள் குடோன் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் அவர் வளர வளர விலங்கினங்கள் மீது காருண்யம் உள்ளவர் ஆனார். தனது பத்து வயதளவில் ஆப்பிரிக்கா காடுகளுக்குச் சென்று மிருகங்களுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு துளிர் விட, தனது பதினெட்டாவது வயதில் கென்யா, கொங்கோ நாட்டு காடுகளில் போய் தங்கியிருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்தார்.

இதையும் படியுங்கள்:
பேருதான் சாக்கடல்; ஆனா யாரும் இதுல மூழ்கி சாக மாட்டாங்க: ஏன் தெரியுமா?
வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா

அவை பேசும் மொழியை கிரகித்தார். வாழ்க்கை முறைகளை அவதானித்தார். ‘விலங்கினங்களின் அன்னை தெரசா’ ஆனார். இவர் ஒரு நேச்சுரலிஸ்ட் Naturaist, Animal science expert, paleontologist, chimpanzee பற்றி ஒரு authorityயாக இருந்தவர். டிவியில் நேஷனல் ஜியோகிராபி சேனலில் அவரது காட்டு வாழ்வு அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருந்தது.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி சரணாலயத்தில் மனித குரங்குகள் பாதுகாக்கப்பட்டுள்ள இருப்பிடத்திற்குள் மூன்று வயது பையன் ஒருவன் உள்ளே நுழைந்து விட்டான். அவனைக் கண்டதும் கொரில்லா ஒன்று தனது கரத்தினால் இழுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தது. அந்த கொரில்லாவிடமிருந்து குழந்தையை மீட்பதற்காக அதை சுட்டுக் கொன்றனர். அப்பொழுது இவர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
மற்ற உயிரினங்களிடமும் பாசத்தோடு பழகும் 10 வகை விலங்குகள்!
வனவிலங்குகளுக்கும் ஓர் அன்னை தெரசா

இவர் தனது சிறுபிள்ளைப் பருவத்தை நினைவுகூறும் பொழுது, ‘எதை நீ விரும்புகிறாயோ? எது உன் இலக்கோ, அதை நோக்கிய சந்தர்ப்பங்களை உருவாக்கு. ஏற்படும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. முயற்சியை என்றும் கைவிடக் கூடாது. லட்சியம் நிறைவேற உனது அம்மாவும், அப்பாவும் என்றும் உனக்கு ஆதரவாக இருப்போம்’ என்கிறார். எனது பெற்றோர்களே என் பலம். என் தனித்துவத்தை எனது உணர்வை எனது பெற்றோர் மதித்தனர். இதனால் என்னை தனித்துவம் ஆனவராக மாற்றியதும் அல்லாமல் எந்தவிதமான முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கவில்லை. யார் என்ன சொன்னாலும், பெருங்கூட்டமே வந்தாலும் நீதான் எங்களுக்கு முக்கியம் என்று அம்மா, அப்பா அன்று கூறியது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது என்கிறார்.

மேலும், தங்கள் பிள்ளைகள் தனித்துவமானவர்கள், வித்தியாசமானவர்கள், விசேஷமானவர்கள் என்று தங்களைத் தாங்களே உணர்ந்து ஏற்றுக்கொள்ளத் தூண்டுங்கள். வெளித் தோற்றத்துக்கும், பிரபல்யத்துக்கும் முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்காதீர்கள். பிள்ளைகள் தங்களைத் தாங்களே நம்புவதற்கு வழி காட்டுங்கள் என்று பெற்றோர்களுக்கு கவனப்படுத்துகிறார் ஜேன்குடோல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com