வீட்டைச் சுற்றும் 4 கொடிய பாம்புகள்! கடித்தால் செய்ய வேண்டியது என்ன?

கண்ணாடி விரியன் முதல் கட்டு விரியன் வரை... ஆபத்தான ஊர்வனவற்றின் அடையாளங்கள் இதோ!
விரியன் பாம்பு Snake bite treatment
விரியன் பாம்பு Snake bite treatmentChatGPT Image
Updated on

மழைக்காலம் வந்துவிட்டாலே நம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை புதர் மண்டிய இடங்கள், வீட்டின் கொல்லைப்புறம், பழைய குப்பை மேடுகள் என எங்கு பார்த்தாலும் ஊர்வனவற்றின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். சாதாரணமாக இருட்டில் வீட்டை விட்டு வெளியே வரும்போது காலடியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றால், நம் உயிர் ஒரு நொடி உறைந்துவிடும். 

அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டில் சுற்றித் திரியும் சில ஆபத்தான பாம்பு வகைகளை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்தத் தகவல் நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

சீறும் நாகம்! 

Indian Cobra
Indian Cobra

இதில் முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நல்ல பாம்பு (Indian Cobra) எனப்படும் வகையாகும். வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் இந்த வகையை அடிக்கடி பாரக்க நேரிடும். இவை பொதுவாக மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் காணப்படும். தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருவதை உணர்ந்தால், சட்டென்று உடலின் முன்பகுதியை உயர்த்தி பிரம்மாண்டமாகப் படத்தை விரிக்கும்.

அந்தப் படத்தின் பின்புறம் ஒரு முட்டை வடிவ குறி இருப்பதை நீங்கள் தெளிவாகக் கவனிக்கலாம். இது நியூரோடாக்ஸிக் எனப்படும் நரம்பு மண்டலத்தை முடக்கும் அபாயகரமான தன்மை கொண்டது.

முக்கோண தலையுடைய கண்ணாடி விரியன்! 

Russell's Viper
Russell's Viper

அடுத்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது கண்ணாடி விரியன் (Russell's Viper). இதன் உடல் முழுவதும் சங்கிலி போன்ற தொடர்ச்சியான வட்ட வடிவப் புள்ளிகள் அழகாக அமைந்திருக்கும். இதன் தலைப்பகுதி முக்கோண வடிவில் சற்று அகலமாக இருக்கும்.

தற்காப்புக்காக குக்கர் விசில் அடிப்பது போல மிக வேகமாகப் புஸ் புஸ் எனச் சீறும் சத்தம் எழுப்பும். ஹீமோடாக்ஸிக் எனப்படும் இரத்த ஓட்டத்தை நேரடியாக முடக்கும் கொடிய விஷத்தன்மை இதற்கு உண்டு.

இருளில் நடமாடும் கட்டுவிரியன்! 

Common Krait
Common Krait

பகல் நேரங்களில் மிகவும் சாதுவாக எங்காவது ஒரு மூலையில் சுருண்டு கிடக்கும் கட்டு விரியன் (Common Krait) இரவில் மிகத் தீவிரமாக நடமாடும் இயல்புடையது. பளபளப்பான கருப்பு நிற உடலில் வெள்ளை நிற வளையங்கள் இரட்டை இரட்டையாக குறுக்கே ஓடும்.

இந்த வகையான விஷப் பாம்புகள் மனிதனைத் தாக்கினால் நரம்பு மண்டலம் பெரிய அளவில் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இவை வீடுகளுக்குள் எளிதாக நுழையும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
காசு கொடுத்து வெற்றிலை வாங்காதீங்க... உங்க வீட்டு மொட்டை மாடியே போதும்!
விரியன் பாம்பு Snake bite treatment

சிறிய உருவம் கொண்ட சுருட்டை விரியன்! 

Saw-Scaled Viper
Saw-Scaled Viper

அந்த நான்கு வகைகளில் மிகவும் சிறிய உருவம் கொண்டது சுருட்டை விரியன் (Saw-Scaled Viper). இவை சுமார் 1 முதல் 2 அடி நீளம் மட்டுமே வளரக்கூடியவை. இதன் தலையில் பிளஸ் போன்ற ஒரு அடையாளம் காணப்படும். தன்னை யாராவது தாக்க வந்தால் உடலைச் சுருட்டி செதில்களை ஒன்றோடொன்று உரசி மரத்தை ரம்பத்தால் அறுப்பது போல ஒரு ஒலியை ஏற்படுத்தும். இவை சிறியதாக இருந்தாலும் இரத்த உறைதலை ஏற்படுத்தி மனித உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

மேலே பார்த்தவை அனைத்துமே நமது உயிரைப் பறிக்கக்கூடிய கொடிய விஷப் பாம்புகள். எதிர்பாராத விதமாக இவற்றில் ஏதாவது ஒன்று கடித்துவிட்டால், கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். கடித்த இடத்தை அதிகம் அசைக்காமல் வைத்துக்கொண்டு, உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று விஷமுறிவு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ராத்திரியை விட பகல்லதான் பாம்புகள் அதிகம் கடிக்குமாம்... உஷார் மக்களே!
விரியன் பாம்பு Snake bite treatment

வீணாக எந்த ஒரு நாட்டு வைத்தியமும் செய்து நேரத்தை விரயமாக்கக் கூடாது. சரியான நேரத்தில் முறையான மருத்துவ உதவியை நாடுவதே நமது விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஒரே சிறந்த வழி.

logo
Kalki Online
kalkionline.com