நிலத்தடியில் மாயமாய் மறையும் நதி: எத்தியோப்பியாவின் சாஃப் ஒமர் குகை அதிசயம்!

பாறைக்குள் பாயும் விசித்திர நதியும், இயற்கையின் வியக்க வைக்கும் ரகசியங்களும்.
வெய்ப் நதி | Weyib River
வெய்ப் நதி | Weyib RiverImage credit: gemini ai
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

எத்தியோப்பியாவின் பேலா மலைப்பகுதியில் உள்ள சாஃப் ஒமர் குகை, நிலத்தடியில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்றும் வெய்ப் நதியால் உருவான இயற்கை அதிசயமாக விளங்குகிறது. சுமார் பதினாறு கி.மீ நீளமுள்ள இந்த குகையில் ஏழு இடங்களில் நதி பாறைகளுக்குள் மறைந்து, பெரிய அறைகள், தூண்கள், சுண்ணாம்புக் கற்கள், குறுகிய பாதைகள் என வித்தியாசமான அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆப்ரிக்காவில் சாஃப் ஒமர் என்ற குகைப்பகுதியில் நீங்கள் சென்றால் ஒரு நதி பல இடங்களில் மறைந்து மலைகளையும் தாண்டி திரும்பவும் அந்த நிதியைக் காணலாம்‌. நீங்கள் ஒரு குகைக்குள் நடந்து செல்லும்போது ஒரு நதியைக் காண்கிறீர்கள். சிலமைல் தூரம் சென்றதும் அந்த நதி பாறைக்குள் மறைந்து விடுகிறது‌. இன்னொரு மலைப்பகுதிக்குச் செல்லும் போது அதே நதியை திரும்பவும் காண்கிறீர்கள். இது ஏதோ மாஜிக் போல் இருக்கிறதல்லவா?. இது ஏதோ ஒரு திரைப்படக் காட்சி அல்ல. உண்மையில் நடக்கும் இயற்கை அதிசயமாகும்.

ஆப்ரிக்காவின் எத்தியோப்பியா பகுதியில் மிகவும் குளிர்ச்சியான சாஃப் ஒமர் என்ற குகை காணப்படுகிறது‌.

இந்த குகைக்குள் நீங்கள் செல்லும் போது காணப்படும் நதி பல இடங்களில் மறைந்து திரும்பவும் காணப்படும் அதிசயம் நிகழ்கிறது. இந்த நதியை சுமார் ஏழு இடங்களில் பெரிய பெரிய அறைகள், குறுகிய பாதைகள் தாண்டி மீண்டும் இந்த நதியைக் காணமுடியும்‌.

எத்தியோப்பியாவின் மேல் மலைப்பகுதியில் உள்ள சாஃப் ஒமர் என்ற குகை இந்த வெய்ப் நதி ஏழுமுறை தன் திசைகளை மாற்றுகிறது‌. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இந்த இயற்கை அதிசயம் நடந்து வருகிறது.

வெய்ப் நதி | Weyib River
வெய்ப் நதி | Weyib RiverImage credit: Gemini AI

முதலில் நீங்கள் குகைக்குள் செல்லும்போது அது மறைவதை பல இடங்களில் காண்பீர்கள். குகையில் பதினாறு கி. மீட்டர் பயணத்திற்குப் பிறகு நீங்கள் நதி மறையும் இடங்களைக் காணமுடியும். ஈதியோபியாவின் மிகப் பெரிய குகையான இங்கு இது ஒரு இயற்கை அதிசயமாக நதி மறைவது கருதப்படுகிறது.

நீங்கள் குகைக்குள் செல்லும் போது நதியின் ஓட்டத்தோடு செல்லமுடியும். சில மைல் தூரம் சென்றபிறகு நதி மறைந்துவிடும் அது பாறைக்கு அடியில் ஓடுவதால் உங்களுக்கு அதன் மறைவு கண்ணுக்குத் தெரியாது. ஒரு உதவியாளர் (guide) கொண்டு நீங்கள் செல்லலாம்‌. நீங்கள் குகைக்குள் நடக்கும்போது பூமிக்கடியில் பெரிய அறைகளைக் காணமுடியும்‌.

இதையும் படியுங்கள்:
உலகின் அரிய பூக்கும் மரங்களின் ராணி: ஊர்வசி மரம் பற்றி தெரியாத உண்மைகள்!
வெய்ப் நதி | Weyib River

நதியின் மூலம் ஏற்படுத்தப்படும் பாதைகளையும் காணமுடியும்‌. நீங்கள் நதியின் ஓட்டத்தோடு செல்கிறீர்கள்.

ஆங்காங்கே சுண்ணாம்புக் கற்களையும், இயற்கையான பாறைகளையும் உங்கள் பயணத்தில் காணலாம்‌. குகையில் சில இடங்களில் குறைவான சூரிய வெளிச்சம் இருக்கும். நீங்கள் இந்தக் குகையில் செல்லும் போது ஏழு இடங்களில் வெய்ப் நதி மறைந்திருப்பதைக் காண்பீர்கள்‌. நீங்கள் நதியின் நீரளவு பொறுத்து நீந்தியும் நடந்தும் நீங்கள் செல்லமுடியும். மழை நாட்களில் நதியில் நீர் அதிகமாக இருந்தால் நீங்கள் கடந்து செல்வது சிரமமாக இருக்கும்.

சாஃப் ஒமர் குகை தனிச்சிறப்பு:

இந்த குகையில் வெய்ப் நதியால் பல பெரிய அறைகள், பெரிய தூண்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மனிதனைப் போலவே யோசிக்கும் 3000 வருட பழமையான மரம் - உடனே பாருங்க!
வெய்ப் நதி | Weyib River

பெரிய விஸ்தாரமான அறைகள் மேலும் இங்குள்ள பாறைகளின் அமைப்பு இது ஒரு கிறிஸ்துவ தலம் போன்று காட்சி அளிக்கிறது‌. இந்த இடத்தில் அல்லா ஃப்ரிட்ஜ் என்ற பெயரில் ஒரு பெரிய பாறை உள்ளது. இது வணங்குவதற்கு இடமாகக் திகழ்கிறது‌. இந்த குகைக்கு சாஃப் ஒமர் என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் பல காலங்களுக்கு முன் இந்த குகையில் ஷேக்சாப் ஒமர் அஹ்மத் என்பர் பாதுகாப்பிற்காக இக்குகையில் ஒளிந்திருந்தார் என்று தெரியவருகிறது.

இங்கு மசூதியும் உள்ளது. அது மக்கள் தொழுகை செய்யும் இடமாக உள்ளது.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி இந்த குகை ஒரு மத அடையாளமாக விளங்குகிறது‌. இந்தகுகை எத்தியோப்பியாவில் இருந்து 100மீ தொலைவில் பேலா மலைப்பகுதியில் இது அமைந்துள்ளது. தனியாக இங்கு செல்லமுடியாது. ஒரு கைடு உதவியுடன் செல்லலாம். வித்தியாசமான இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாகும்‌. ஒரு நதியின் மூலமாக உருவாக்கப்பட்ட இடங்களை நீங்கள் இங்கு கண்டு ரசிக்கமுடியும்‌..

இயற்கையின் அதிசயமாக நதியின் மூலம் உருவாக்கப்பட்ட இடங்களைக் காண இந்த இடத்திற்குச் செல்லலாம்‌..

logo
Kalki Online
kalkionline.com