
நமக்கெல்லாம் கண்களை மூடினால்தான் தூக்கம் வரும். ஆனால், இரவில் இரை தேடும் உயிரினங்கள் தூங்காது. அப்படி கண்களைத் திறந்து கொண்டே உறங்கக்கூடிய ஏழு உயிரினங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒட்டகச் சிவிங்கி: இவை வெகு குறைவாகவே உறங்கக் கூடியது. எப்போதும் கண்களைத் திறந்து கொண்டேயிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள சூழல் குறித்து எப்போதும் விழிப்புணர்வுடனேயே இருக்கும் இனம். இது இரவில் கூட கண்களைத் திறந்துகொண்டே உறங்காது இருக்கும்.
திமிங்கலம்: இவை தூங்கும்போது கூட கண்கள் திறந்தே இருக்கும். தூக்கத்தில் கூட இவற்றின் மூளை சிறப்பாகச் செயல்படும். இதனால் சுற்றுச்சூழலில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும். எதிரிகளை எப்போதும் சந்திக்கத் தயாராக இருக்கும்.
டால்ஃபின்: தூங்கும்போது டால்ஃபின்களின் மூளையின் ஒரு பாதி விழிப்புணர்வுடன் இருக்கும். ஒரு பாதி மூளை மட்டும் துக்கத்தில் இருக்கும். இதன் கண்கள் எப்போதும் திறந்தபடி சுற்றுச்சூழல் பற்றிய முழு விழிப்புணர்வுடன் இருக்கும்.
முதலை: தூங்கும்போதும் ஒரு கண்ணை எப்போதும் முதலைகள் திறந்தே வைத்திருக்கும். இதன் மூளை பகுதி பாதி தூக்கத்திலும், பாதி விழிப்புணர்வுடனும் இருக்கும். இதனால் தனக்கு நேரவிருக்கும் ஆபத்துகளிடமிருந்து இவை தம்மை காத்துக் கொள்கிறது.
மரத் தவளை: இவை தமது கண்களை பாதி மூடிய நிலையிலேயே உறங்கும். இதன் கண்களின் மேல் உறை போன்ற அமைப்பு உள்ளதால் கண்கள் பார்வை தெரியும்.. இதனால் ஆபத்துக்களிலிருந்து தம்னைக் காத்துக் கொள்கிறது.
குதிரை: குதிரைகள் எப்போதும் கண்களைத் திறந்துகொண்டே உறங்கும் இனம். இதனால் அவை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஓய்வெடுக்கும்போது கூட இவை கண்களைத் திறந்து கொண்டேதான் ஓய்வெடுக்கும்.
பெங்குயின்: நின்று கொண்டே தூங்கும் இயல்புடையவை பெங்குயின்கள். இதன் கண்கள் தூங்கும் போது பாதி மூடிய நிலையில் இருக்கும். இவை தூக்க நிலையிலும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கக் கூடிய விலங்காகும். எதிரிகளிடமிருந்து தூங்கும் நிலையிலும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவை இவை.