பூனைப் பிரதாபம்: கருப்பு பூனைகளுக்கு கப்பலில் ராஜ மரியாதை! ஏன் தெரியுமா?

Black Cat
Black Cat
Published on

பூனைகள் கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித வாழ்வில் இடம் பெற்று வருகின்றன. உலகில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி பூனை தான். இதன் சராசரி ஆயுள் காலம் 12 முதல் 15 ஆண்டுகள்.

சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன. அப்படி 13 முதல் 14 மணி நேரம் தூங்கி தன் ஆற்றலை சேமித்து கொள்ளும். பூனைகளால் 100 விதமான சப்தங்களை எழுப்ப முடியும். ஆனால், நாய்களால் 10 வகையான சப்தங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும். பூனைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். ஆனாலும் பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.

பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனைகள் இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும். பூனைக்கு தண்ணீரைக் கண்டால் ஆகாது. பூனை மீது தண்ணீரை தெளித்தால் போதும் அது தலை தெறிக்க ஓடி விடும்.

பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது. பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

பூனைகளால் எந்த நீரையும் குடிக்க முடியும். கடல் நீரை கூட குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை. அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
கனவில் மயில் வந்தால் நல்லதா, கெட்டதா? இந்து மத நம்பிக்கைகளும், கனவு சாஸ்திரமும்!
Black Cat

பூனைகள் புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு இயற்பியல் விதியோடு ஒன்றி புத்திசாலித்தனமாக பால் குடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நாயும் பூனை போல தான் நாக்கை பின்னோக்கி மடக்கி குடிக்கிறது. ஆனால், நாய் பாத்திரத்தின்அடிப்பகுதி வரை நாக்கை கொண்டு செல்கிறது. இதனால் நேரம் அதிகமாகிறது. ஆனால் பூனை பாத்திரத்தின் மேல் பகுதியை மட்டும் நாக்கை வைத்து நக்குகிறது. வினாடிக்கு 4 முறை இப்படி செய்கிறது. நாக்கை எப்படி நீட்டியதோ அதே மாதிரி மறுபடியும் வாய்க்குள் இழுக்கிறது. இதனாலே புவியீர்ப்பு விசை சம அளவில் இருக்கும். இதனால் பூனைகளால் நிமிடத்திற்கு 24 மில்லி பாலை வேகமாக குடிக்க முடிகிறது என்கிறார்கள்.

பூனையின் கண்கள் இரவில் பிரகாசமாக தெரிவதற்கு என்ன காரணம் தெரியுமா? பூனையின் கண்களின் உட்புறம் பாளம் பாளமாக ஒளியை பிரதிபலிக்கும் செல்கள் உள்ளன. இப்படி உட்புறத்தில் உள்ள செல்கள் ஒளியைப் பிரதிபலிப்பதால் தான் வெளிப்பகுதியில் அதன் கண்கள் பிரகாசமாக தெரிகின்றன. பூனைகளுக்கு துல்லியமான பார்வை திறன் உண்டு. குறிப்பாக இரவு நேரங்களில் மனிதன் ஒரு பொருளைப் பார்ப்பதற்குத் தேவைப்படும் ஒளியை விட, 6 மடங்கு குறைவான ஒளியில் கூட பூனைகளுக்கு பொருட்கள் தெரியும்.

மனிதனால் 20 ஹெர்ட்ஸ் ஒலியைத்தான் கேட்க முடியும். ஆனால் பூனைகளால் 65 ஹெர்ட்ஸ் ஒலியைக் கூட கேட்க முடியும். பூனை தனது தலையை சொறிந்து கொள்வதற்கு தனது பின்னங்கால்களை மட்டுமே பயன்படுத்தும்.

பூனைகள் காரணமில்லாமல் "மியாவ் மியாவ்"என்று கத்துவது இல்லை. தன் குட்டிகளைப் பாலூட்ட அழைக்கவோ , எதிரியிடமிருந்து பாதுகாக்கவோ, அல்லது தான் இருக்கும் இடத்தை தன்னை வளர்க்கும் மனிதர்களிடம் தெரிவிக்கவோ தான் அப்படி கத்தும். பூனையின் குட்டி பிறந்ததும் அதற்கு கண் தெரியாது, காது கேளாது, நுகரும் தன்மை இராது. எனவே தாய் பூனையிடமிருந்து வரும் ஒலி அதிர்வுகளைக் கொண்டே குட்டிப் பூனை தாயிடம் பால் குடிக்கச் செல்லும்.

இதையும் படியுங்கள்:
டிரெண்டாகி வரும் 'Fake wedding'! அப்படி என்ன தான் இருக்கு இந்த கல்யாணத்தில்?
Black Cat

பூனையின் நாக்கின் மேல் பாகம் உப்புக்காகிதத்தை போல சொரசொரப்பாக இருப்பதால் அது எலும்புகளில் ஒட்டி இருக்கும் இறைச்சி துணுக்குகளைக்கூட நன்றாக துடைத்தெடுத்து உண்ண முடிகிறது.

பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன் கால்களை வைத்த இடத்தில் தான் பின்னங்கால்களையும் வைக்கும். இதனால் தான் அவைகளால் சத்தமே இல்லாமல் வேட்டையாட முடிகிறது.

நிலத்தில் தான் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம். ஆனால், கப்பலிலோ கருப்புப்பூனைகளுக்கு ராஜமரியாதை. கருப்பு பூனைகளுடன் பயணம் சுகமான பயணம் என்பது நம்பிக்கை. இதற்காகவே கருப்புப்பூனைகளைக் கப்பலில் ஏற்றுவது உண்டு.

இதையும் படியுங்கள்:
ஒரு ஸ்பூன் போதும்... உங்கள் உடம்பை இரும்பாக்கும் இந்த உலர் பழங்கள் பொடி!
Black Cat

இசை மேதை எல்விஸ் பிரஸ்லி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், விக்டோரியா மகாராணி, இரவு தேவதை பிளாரன்ஸ் நைட்டிங்கேல், ஆங்கில எழுத்தாளர்கள் மோன்டி சகோதரிகள், நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வைன் இந்த பிரபலங்களுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு. அது என்ன தெரியுமா? இவர்கள் அனைவரும் பூனைப்பிரியர்கள். எப்போதும் பூனையுடன் இருக்க ஆசைப்பட்டவர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com