பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும், அதை நூறு சதவிகிதம் தவிர்ப்பது என்பது இயலாத ஒன்றாகி விட்டது. நம்மால் செய்ய முடிந்தது படிப்படியாக அதன் உபயோகத்தை குறைத்து வரலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் கடைகளிலிருந்து பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றை வாங்கி வரும்போதும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போதும் அவை பொதுவாக பிளாஸ்டிக் டப்பாக்களில் பேக் பண்ணியே தரப்படுகின்றன. நாமும் அவற்றை பயன்படுத்திய பிறகு உடனே தூக்கி மறு சுழற்சிக்குப் போட்டுவிடாமல் வீட்டில் வைத்து மேலும் சில உபயோகமான பயன்பாட்டிற்கு அவற்றை வைத்துக் கொள்ளலாம்.
நான் தான் நம் பூமியை காக்க வேண்டும்! பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக சில்வர் பாத்திரங்களை உபயோகியுங்கள்! உடனே வாங்க...
1. அந்த டப்பாக்களை கழுவி சுத்தப்படுத்தி நன்கு காய்ந்த பிறகு முந்திரி, பாதாம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள் போன்ற உலர் பொருட்களை தனித்தனியாகப் போட்டு சமையல் அறையில் வைத்துக்கொள்ளலாம்.
2. வீட்டில் பணி புரியும் பெண்ணுக்கு குழம்பு, சோறு போன்றவற்றை போட்டுக் கொடுத்தனுப்பலாம். அக்கம் பக்கத்து நட்புறவுகளுக்கு விசேஷ தினங்களில் சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை வைத்துக் கொடுக்கலாம். மீந்துபோன குழம்பு மற்றும் காய்கறிகளை அடுத்த நாள் நாம் உபயோகப்படுத்தவும் இந்த மாதிரி டப்பாக்காளில் போட்டு ஃபிரிட்ஜ்ஜில் வைக்கலாம்.
3. பள்ளி செல்லும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் போட்டு கொடுத்தனுப்பலாம்.
4. விடுமுறையில் ஒரு நாள் பயணமாக பஸ்ஸிலோ காரிலோ செல்லும்போது, மெல்லிய பிளாஸ்டிக் கவர்களில் தரப்படும் சிப்ஸ், மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ்களை பிரித்து இந்த மாதிரியான டப்பாக்களில் அடைத்து எடுத்துச் சென்றால் சிரமப்படாமல் எடுத்து உண்ண முடியும். குழந்தைகள் கையிலும் தனித்தனியாக ஒரு சிறிய பாக்ஸில் போட்டுக் கொடுத்து சாப்பிடச் செய்யலாம். மருந்து, மாத்திரைகளையும் தனியாக ஒரு டப்பாவில் போட்டு எடுத்துச் செல்லலாம்.
5. வீட்டிலும், அலுவலக அறையிலும், குழந்தைகளின் கிரையான், கலர் பென்சில்கள், பேனா, பென்சில், க்ளிப் ஆகியவற்றைப் போட்டு வைக்க இதுபோன்ற பிளாஸ்டிக் +டப்பாக்களை பயன்படுத்தலாம்.
6. கொஞ்சம் பெரிய அளவிலான டப்பாவில் மண் நிரப்பி புதினா, கொத்தமல்லி போன்ற சிறிய வகை மூலிகை தாவரங்களை வளர்க்கலாம். வெண்டை, கத்திரி, அவரை போன்ற காய்கறி விதைகளை தனித்தனி பேப்பரில் மடித்து இவ்வகை டப்பாக்களில் போட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.
பிளாஸ்டிக் டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துதல் என்பது சுற்றுச்சூழலை காப்பதற்கான முதல் படி. ஒரு முறை மட்டும் அவற்றை உபயோகித்து விட்டு, குப்பையென தூக்கி எறிவது இயற்கை வளங்கள் கெடுவதற்கு வழி வகுக்கும். இதை உணர்ந்து ஒவ்வொருவரும் இயன்றவரை பிளாஸ்டிக் டப்பா மற்றும் பைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பயன்படுத்துவோம். பலனடைவோம்!
நான் தான் நம் பூமியை காக்க வேண்டும்! பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக சில்வர் பாத்திரங்களை உபயோகியுங்கள்! உடனே வாங்க...