Forest
Forest

உலகில் அதிக மரங்கள் நிறைந்த நாடுகள்!

Published on

மரங்கள் இருந்தால் மட்டுமே உலகில் உயிர்கள் வாழ முடியும். உலகில் அதிக மரங்களைக் கொண்ட நாடு உள்ளவர்களுக்கு கண் பாதிப்பு வருவது இல்லையாம். உலகில் மரங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

நமக்கு ஐம்புலன்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மரங்களும் முக்கியம் பெறுகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரங்கள் தேவை. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகின் சில பகுதிகள் இன்று வெப்பத்தால் கொதிக்கின்றன. மேலும் சில இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

உலகில் மொத்தம் வாழக்கூடிய பரப்பில் சுமார் 38% காடுகள்கொண்டது. இது மொத்த நிலப்பரப்பில் 26% வாழும் பகுதி.

பூமியில் சுமார் 3.04 லட்சம் கோடி மரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டு உள்ளனர்.

தென் அமெரிக்கா:

அந்த வகையில் அதிக மரங்களை கொண்ட நாடு தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடு. இது 9.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மலைக்காடு.

உலகின் மொத்த மலை காடுகளில் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. இது கொலம்பியா பெரு, பிரேசில் உட்பட ஒன்பது தென் அமெரிக்க நாடுகளுக்கு சமமாக பரவி உள்ளது.

விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் உட்பட உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 10% அமேசான் மழைக்காடுகளில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ரஷ்யா:

உலக வரைபடத்தின் படி அதிக மரங்களைக் கொண்ட நாடு ரஷ்யா. உலக வன வரைபடம் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த காடுகளின் வரைபடம் ஆகும்.

ரஷ்யாவில் பல காடுகள் உள்ளன. நிறைய மரங்கள் உள்ளன. ரஷ்யாவில் சுமார் 815 மில்லியன் ஹெக்டேர் காடுகள் உள்ளன. உலகிலேயே மிகவும் அடர்ந்த காடுகளை கொண்ட நாடாக ரஷ்யா உள்ளது.

மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டு தாவரம் என வரைவிலக்கணம் கூறுகிறது. இது நிலத்தில் தோன்றி இடம் விட்டு தானே நகராது நிலைத்து வளரக்கூடிய ஒரு திணை வகை ஆகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் - இந்த 7ல் உங்கள் சாய்ஸ்?
Forest

பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் 15 அடி உயரம் மரத்தின் தாக்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும்.

ஏனைய வகைகளைச் சேர்ந்த செடி கொடி போன்ற நிலத்திணை வகைகளை விட மரங்கள் நீண்ட காலம் வாழக்கூடியவை. சில வகை மரங்கள் 300 அடி உயரம் வரை வளரக்கூடியவை. சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளரக்க்கூடியவை.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டவை.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்விக மாகக் கொண்ட 'பவோபாப்' மரம் இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அதனால் மரங்களை வளர்ப்போம்!

மழை பெறுவோம்.

சுற்றுச் சூழலை பாதுகாப்போம்!

இதையும் படியுங்கள்:
மரம், செடி கொடிகள் நன்றாக காய்ப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
Forest
logo
Kalki Online
kalkionline.com