கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் ஒளிரும் தன்மையுள்ள காளான்கள் இருப்பது முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான் கோவா மற்றும் கேரள மாநில காடுகளில் இந்த வகை காளான்கள் இருக்கின்றன. மூங்கில் மரங்கள் உள்ள பகுதிகளில் இந்த வகை காளான்கள் வளரும். பகல் பொழுதுகளில் சாதாரணமாக காளான்கள் போல் இருக்கும் இவை இரவில் மட்டும் இளம் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றன.
அடர்ந்த வனப் பகுதிகளில் மழைக் காலத்தில் மட்டுமே இவற்றை காண முடியும். உயிரொளி பூஞ்சை எனப்படும் இந்த காளான்களில் சுமார் 120 ரகங்கள் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அடர் வனங்கள் நிறைந்த மரங்கள் உள்ள பகுதிகளில் இந்த வகை ஒளிரும் தன்மையுள்ள காளான்களைக் காண முடியும்.
தனது விதைகளைப் பரப்ப வேண்டுமென்றே ஒளிர்கிறது. இந்த ஒளியில் ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் மீது பூசாணத்தின் விதைகள் பட்டு மற்ற இடங்களுக்கு பரவுகின்றன. இந்த வகை காளான்களில் ஒருவித வேதிப்பொருள் இருக்கிறது. இது கந்தகம், பாஸ்பரஸ், உள்ளிட்டவை சேர்ந்த ஒரு கலவை போன்றது.
காற்றில் உள்ள ஆக்ஸிஜன் இதில் பட்டவுடன் ஒரு நொதி செயல்பட்டு இந்த காளான் ஒளிரும். பைன் மரக் காடுகளில் காணப்படும் காளான் இது. இளம் பச்சை அல்லது நீல நிறத்தில் ஒளிரும். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் இந்த வகை காளான்களிலிருந்து கிடைத்த ஒளியை வைத்து கடிதங்கள் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரொளி காளான்கள் மேற்கு தொடர்ச்சி பைன் மரக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. உண்ணுவதற்கு ஏற்றதல்ல இந்த வகைக் காளான்கள். பயிர் பாதுகாப்புக்கு இதன் மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வனத்தில் அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இது நிறைய காணப்படும். 4 அல்லது 5 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் அடுத்து வரும் நாட்களில் இந்த வகை காளான்களைப் பார்க்கலாம்.