கோடை வெயிலும், தென்மேற்கு பருவமழையும்

கோடை வெயில், தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டும் பருவ கால நிகழ்வுகள் ஆகும்.
summer and rain
summer and rain
Published on

கோடை வெயில், தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டும் வெயிலையும் மழையையும் பற்றிய பருவ கால நிகழ்வுகள் ஆகும். கோடை வெயில் என்பது கோடையில் ஏற்படும் அதிக வெப்பம், மேலும் தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலம்.

கோடை வெயில் என்பது ஒரு பகுதியில் அதிக வெப்பம் நிலவுவதைக் குறிக்கும். இந்த வெயில் காலத்தில், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை கூட உயரலாம். பருவநிலைமாற்றம் காரணமாக கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் கோடை காலத்தில் வெளியில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம், மேலும் கால்நடைகளும் பாதிப்படலாம். தென்மேற்கு பருவமழை என்பது ஆசியப் பகுதியில் ஏற்படும் ஒரு பருவப்பெயர்ச்சி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதையும் படியுங்கள்:
சுட்டெரிக்கும் வெயிலில் நம்மைக் குஷிப்படுத்தும் கோடை மழை! ஆனால்...
summer and rain

ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப்பொழிவு ஏற்படும் இந்த காலகட்டம் வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. இது கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஒரு வகையான காற்று ஆகும். தென்மேற்கு பருவமழை காரணமாக, சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தை இந்த பருவமழை குறைக்கும். தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும் வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேரள தென்தமிழக பகுதிகளில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை!
summer and rain

ஆனால், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப்பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.

அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.

மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத்தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எப்படி இருந்தாலும், தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தள்ளிப் போகும் தென்மேற்கு பருவமழை - என்னதான் காரணம்?
summer and rain

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com