
Maine coon - 1000லிருந்து 2000 டாலர்கள்.
இதன் தோற்றம் இதன் பெரிய உருவம் இவற்றால் புகழ் பெற்றது. 15 விருந்து 25 பவுண்ட் எடை இருக்கும். வால் முகம் மற்றும் உடல் முழுவதும் புசு புசு வென்று முடி இருக்கும். நன்கு வேட்டையாடக் கூடியது.
Toyger - 1500லிருந்து 5000 டாலர்.
இது பார்க்க புலி போன்று இருக்கும் குட்டி புலி என்று கூறலாம். புலியைப் போன்று உடலில் கோடுகள் இருக்கும்தோழமையாக பழகும். ஆரஞ்சு மற்றும் கருப்பு கோடுகள் உடையது. குழந்தைகளிடம் விளையாடக் கூடியது. புலியை போன்ற தோற்றத்தால் விலை அதிகமானது.
Russian biue - 1500லிருந்து 3000 டாலர்கள்.
இதன் பளபளப்பான நீலநிறம் மற்றும் பச்சை நிறக்கண்கள் அழகாக இருக்கக் கூடியது. நீலம் மற்றும் க்ரே உடலில் வெள்ளி கோடுகள் இருக்கும் வெல்வெட் போன்ற உடல் உள்ளது. புத்திசாலியானது.
Scottish Fold - 1500லிருந்து 3000 டாலர்கள்.
இதன் காதுகள் மூடிய நிலையில் இருக்கும். வட்ட வடிவ முகத்துடன் காணப்படும். இது மனிதர்களோடு மிக இணக்கமாக இருக்கும்.
Sphynx - 2000லிருந்து 5000டாலர்கள்.
உடலில் முடி இல்லாத இனம். மிகவும் பாசமாக இருக்கக் கூடியது. உடலில் சுருக்கமான தோல் உடையது. நன்கு விளையாடிக் கூடியது. இதை பராமரிப்பதற்கு செலவு அதிகம்.
Peterbald - 2000லிருந்து 5000 டாலர்கள்.
ரஷ்ய இனமாகிய இது சயாமீஸ் போன்ற தோற்றம் உடையது. பாதாம் கொட்டை போன்ற கண்கள் உள்ள இது புத்திசாலியானது. மிகவும் தோழமையோடு பழகக் கூடியது. இதன் பராமரிப்பு செலவும் அதிகம்.
Persian - 3000லிருந்து 5500 டாலர்கள்.
இதன்அழகான தோற்றத்திற்காகவே விலை அதிகமாகிறது. கொழுத்த முகம் சில்க் போன்ற கோட், மிகவும் சன்னமான ஒலி உணர்ச்சிகரமான கண்கள் கொண்ட தாக விளங்குகிறது.
Bengal - Cat. 3000லிருந்து 25,000 டாலர்கள்.
சாதாரண பூனை மற்றும் சிறுத்தை பூனைகளின் கலப்பு ஆகும். கண்ணைப் பறிக்கும் கோட் கொண்டது. பளபளப்பான உடல் கொண்ட. இதற்கு தண்ணீர் உள்ள இடங்கள் பிடித்தமானது. இதன் உடல் தோற்றத்திற்காகவே விலை அதிகமானது.
Savannah - 15000லிருந்து 50,000டாலர்கள்.
இதன் தோற்றம் கம்பீரமானது. நாயைப்போன்று விச்வாசமாக இருக்கும். இதன் எடை சுமார் 25 பவுண்ட் இருக்கும்.
Ashera - 75,000முதவ் 1,25,000 டாலர்கள்.
உலகிலேயே மிக விலையுயர்ந்த பூனையாகும். இது மிக. குறைவாகவே உள்ளது. சிறுத்தை போன்ற தோற்றம் உடையது. 4 அடி உயரமும் 30 பவுண்ட் எடையும் கொண்டது. நாயைப் போன்று விச்வாசமாக இருக்கக் கூடியது.