உலகின் மிக விலை உயர்ந்த 10 வகை பூக்கள்!

The 10 most expensive flowers in the world
The 10 most expensive flowers in the world
Published on

பொதுவாக, பூக்கள் தலையில் சூடப்படும் பூக்கள் மற்றும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன. திருமணம், பண்டிகைக் காலங்களில் மட்டும் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். ஆனால், உலகில் சில வகையான பூக்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை விலை கொடுத்து வாங்கவே முடியாத அளவில் உள்ளன. அதுபோன்ற சில வகைப் பூக்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. கடுப்புல் மலர் (The Kadupul Flower): இலங்கையை தாயகமாகக் கொண்ட கடுப்புல் பூ ஒரு கற்றாழை வகையைச் சேர்ந்தது. இரவில் மட்டுமே பூத்து விடியற்காலையில் வாடிவிடும். அதனால் இதை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதன் குறுகிய ஆயுட்காலம் காரணமாக சந்தை விலை இல்லாவிட்டாலும், அதன் தற்காலிக அழகு மற்றும் போதை தரும் நறுமணம் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த பூ என்ற அந்தஸ்துக்கு பங்களிக்கிறது.

2. ஷென்சென் நோங்கே ஆர்க்கிட் (Shenzhen Nongke Orchid): மனிதனால் உருவாக்கப்பட்ட ஆர்க்கிட் ஆராய்ச்சியாளர்களால் வளர்க்க எட்டு ஆண்டுகள் ஆனது. அதன் அரிதான, தனித்துவமான தங்க இதழ்கள் அதன் கவர்ச்சியைக் கூட்டுகின்றன். இந்திய மதிப்பில் இதனுடைய விலை ஒரு கோடியே 66 லட்ச ரூபாய் ஆகும். எனவே, இது ஒரு உயர்ந்த பூக்களில் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
ரயிலில் இனி AI தொழில்நுட்பம் மூலம் எளிதில் டிக்கெட் புக் செய்யலாம்!
The 10 most expensive flowers in the world

3. ஜூலியட் ரோஸ் (Juliet Rose): இதுவும் உலகின் மிக விலை உயர்ந்த பூக்களில் ஒன்றாகும். 2006ம் ஆண்டு செல்சியா மலர் கண்காட்சியில் டேவிட் ஆஸ்டின் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் விலை சுமார் 15.8 மில்லியன் டாலர்.

4. கினாபாலு ஆர்க்கிட்டின் தங்கம் (Gold of Kinabalu Orchid): மலேசிய வம்சாவளியைச் சேர்ந்த இந்த ஆர்க்கிட் மலர் கினாபாலு தேசிய பூங்காவில் மட்டுமே வளரக்கூடியது. இதனுடைய ஒரு துண்டு பகுதி மட்டும் 6000 டாலர் விலை. இதை ஏலத்தில் எடுக்க ஒருவர் 4,98,000 செலவழிக்க வேண்டும்.

5. குரோக்கர்ஸ் குங்குமப்பூக்கள் (Saffron Crocus): உலகம் முழுவதும் மிகவும் விரும்பக்கூடிய மலர்களாகும். வண்ணமயமான மசாலாக்கள் தயாரிக்க இது பயன்படுகிறது. இதன் விலை ஒரு பவுண்டுக்கு சுமார் $1,500. ஒரு பவுண்டு குங்குமப்பூவை விளைவிக்க சுமார் 70,000 பூக்கள் தேவைப்படுகின்றன.

6. துலிப் பல்ப் (Bulb of Tulip): இது ஒரு கண்ணுக்கு இனிமையான வண்ணமயமான மலராகும். ஹாலந்தின் தேசிய மலரான இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு பூவின் விலை 5,325.20 யூரோக்களாக உள்ளது.

7. குளோரியோசா (Gloriosa): தீப்பிழம்புகளை ஒத்த துடிப்பான சிவப்பு மற்றும் மஞ்சள் இதழ்களுக்கு பெயர் பெற்ற இந்த லில்லி அதன் அற்புதமான தோற்றம் மற்றும் குறைந்த சாகுபடி பகுதிகளுக்காகப் பாராட்டப்படுகிறது.

8. ஹைடிரேஞ்சா (Hydrangea): இந்த மலர் நீலம், ஊதா, வெள்ளை போன்ற பல நிறங்களில் பார்க்கப் பிரகாசமான அழகான மலர் ஆகும். கொண்டாட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கொத்துப் பூ 50 ரூபாய். 12 கொத்துக்கள் வாங்கினால் மட்டுமே இவற்றை அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் மைட் பூச்சிகள்!
The 10 most expensive flowers in the world

9. பள்ளத்தாக்கின் லில்லி (Lily of the Valley): வெள்ளை நிறமான இந்தப் பூக்கள் இனிமையான நறுமணம் கொண்டவை. வசந்த காலத்தில் சிக்கிம் பள்ளத்தாக்குகளில் ஏராளமான லில்லி பூக்கள் பூக்கின்றன. இவை குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும்.

10. லிசியன்தஸ் (Lisianthus): காகித மலர் என்று அழைக்கப்படும் இவை ஐந்து சென்டி மீட்டர் விட்டம் வரை வளரும். இவை பிரகாசமான நிறங்களில் கிடைக்கின்றன. ஒரு மூட்டை 3000 ரூபாய். இதனுடைய வளைந்த இதழ்கள் அதன் கவர்ச்சியை அதிகரிக்கின்றன. குறுகிய காலம் மட்டுமே இந்தப் பூக்கள் ஃபிரஷ்ஷாக இருக்கும். எனவே, இது உலகின் மிக விலை உயர்ந்த பூக்களில் ஒன்றாக அறியப்படுகிறது. பொதுவாக, இவை வெள்ளை நிறத்தில் இருக்கும். ஓரங்களில் நீல நிறத்தில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com