costly birds
costly birds

உலகிலேயே அதிக விலை மதிப்பு மிக்க 5 வளர்ப்புப் பறவைகள்!

Published on

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகள் நமது மன அழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியைத் தருகின்றன. அப்படி வளர்க்கப்படும் செல்லப் பறவைகளில் உலகிலேயே அதிக விலை மதிப்பு மிக்க 5 பறவைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

Hyacinth macaw - 37 lakhs: இது உருவத்தில் பெரியதாகவும்  மற்றும் மென்மையான பண்புகள் கொண்ட கிளி இனம். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இதன் பளிச்சென்ற நீல நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். தென் அமெரிக்காவில் காணப்படும் இதன் இனம் குறைவாகவே உள்ளது. இவையே அதிக விலையாக உள்ளது. இவற்றுக்கு நிறைய இடமும், நல்ல சத்தான உணவும் மற்றும் நல்ல கவனிப்பும் தேவைப்படுகிறது‌. அதிக விலையாக இருந்தாலும் பெரும் பணக்காரர்களின் வளர்ப்புப் பறவையாக இது உள்ளது.

இதையும் படியுங்கள்:
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வளர்க்க உகந்த செடிகளும்; வளர்க்கக் கூடாத செடிகளும்!
costly birds

Palm cockatoo - 17lakhs: கருப்பு இறக்கைகளுடனும், சிவப்பு வண்ணக் கன்னம் மற்றும் வித்தியாசமான கொண்டையையும் உள்ள இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். இவை ந்யூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. இவை ஓசை எழுப்பும் பண்பு உடையது.‌ இவை குச்சிகளை மரத்தின் மீது தட்டி தங்களுக்குள் பேசிக்கொள்ளும். இவற்றைப் பராமரிப்பது மிகவும் சிரமமாகும்.

Toucan - 8லிருந்து 13 லட்சம்: இவற்றின் வண்ணமயமான  நீண்ட அலகு கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். இவை பெரும்பாலும் பழங்களையே உண்ணும். இவை  குதிப்பதற்கும் பறப்பதற்கும் விஸ்தாரமான இடம் தேவை. இவை மிக புத்திசாலியான பறவை இனம். எப்போதும் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும். இந்த இனங்கள் உலகில் குறைவாகவே உள்ளன.

இதையும் படியுங்கள்:
மழை ஈசல்கள் ஒளியை சுற்றி வட்டமிடுவதற்கு காரணம் என்ன?
costly birds

Africangray parrot - 10 lakhs: இந்தப் பறவைகள் மிகவும் புத்திசாலியானவை. இவை பேசும் வகையில் தனிச்சிறப்பு வாய்ந்த இனமாகும். மனிதர்களிடம் மிகத் தோழமை உணர்வுடன் இருக்கும். க்ரே நிறத்தில் பார்க்க அவ்வளவு அழகாக இல்லை என்றாலும், சில ஆப்ரிகன் க்ரே பறவையினங்கள் 1000 வார்த்தைகளுக்கு மேல் பேசக் கூடியவை. இவை 40லிருந்து 60 வருடங்கள் வாழக் கூடியவை.

Major mitchells cockatoo - 10lakhs; இவை பிங்க் காக்கடூ என்றும் அழைக்கப்படுகின்றன. ரோஸ் நிறமும் வெள்ளையும் கலந்த இறகுகளை உடைய இதன் தலை மிகவும் வித்தியாசமாக இருக்கும். இவை ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகின்றன. மனிதர்களுடன் மிகவும் பாசமாகப் பழகக்கூடியது. அப்படி நெருக்கம் இல்லையென்றால் மன வருத்தம் கொள்ளக்கூடியவை. இவற்றை வளர்க்க நல்ல பராமரிப்பு தேவை.

logo
Kalki Online
kalkionline.com