1. தலபோயின் குரங்கு (Talapoin Monkey): இது ஆப்பிரிக்காவின் மிகச்சிறிய குரங்குகளில் ஒன்றாகும். 1.76 முதல் 4.19 பவுண்டுகள் வரை எடையுள்ள, இதன் நீளம் 10 முதல் 16 அங்குலங்கள் வரையே இருக்கும். இதனுடைய வால் உடலை விட நீளமாக இருக்கிறது. இவை மணல்மேடுகள் மற்றும் மரங்களுக்கு உள்ளே வாழ்கின்றன. பழங்கள், இலைகள், விதைகள், முட்டைகள் மற்றும் நீர் தாவரங்களையே இவை உண்கின்றன. இதனுடைய ரோமம் இளம் பச்சை நிறத்திலும், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
2. டஸ்கி டிட்டி (Dusky titi): இது மத்திய பிரேசில் மற்றும் அமேசான் ஆற்றின் பகுதிகளிலும் காணப்படுகிறது. உடலின் எடை 28.33 அவுன்சிலும், தலை மற்றும் உடலில் நீளம் 10 முதல் 16 அங்குலங்கள் வரையும் உள்ளது. இவை தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் வாலை சுற்றி அமரும். இவை முட்டைகள், இலைகள் போன்றவற்றை உண்ணும்.
3. அணில் குரங்கு: மத்திய மற்றும் தென் அமெரிக்கக் காடுகளில் வசிக்கும் அணில் குரங்குகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றின் உடல் 10 அல்லது 14 அங்குலம் நீளம் இருக்கும். இவற்றின் தோல், கருப்பு நிறத்திலும் பின்புறத்தில் ஆரஞ்சு, மஞ்சள் நிறத்திலும் அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. கண்களுக்கு மேலே வெள்ளை திட்டுக்கள் உள்ளதால், எப்போதும் இளமையாக தோற்றமளிக்கின்றன. காடுகளில் சுமார் 15 ஆண்டுகள் வரை கூட்டமாக இவை வாழ்கின்றன.
4. இரவுக் குரங்கு: இவை பிற குரங்குகளில் இருந்து வேறுபட்டவை. ஏனென்றால் பனாமாவில் இருந்து அர்ஜென்டினா வரை கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரமுள்ள சவாணக்கள், ஈரமான மற்றும் வறண்ட காடுகளில் காணப்படுகின்றன. சர்வ உண்ணிகள். பழங்கள், இலைகள், சிலந்திகள், பறவையின் முட்டை, சிறிய பாலூட்டிகளையும் சிறிய பறவைகளையும் சாப்பிடுகிறது. இரவு நேர விலங்கானதால், பெரிய கண்களும் நல்ல பார்வையும் கொண்டுள்ளன. இதனுடைய எடை ஒரு பவுண்டு முதல் 2.8 பவுண்டுகள் வரையும், 9.5 முதல் 18 அங்குல நீளமும் கொண்டது.
5. காட்டன் டாப் டமரின் (cotton top Tamarin): 8 முதல் 10.2 அங்குல நீளம் வரையுள்ள இந்தக் குரங்குகளின் எடை ஒரு பவுண்டுக்கும் குறைவாக உள்ளது. இது கொலம்பியாவின் காடுகளில் காணப்படுகிறது. அந்தக் காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் இந்தக் குட்டிக் குரங்குகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. சுமார் 6000 குரங்குகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளன. இந்த வகைக் குரங்குகளில் பெண்ணினங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆண் குரங்குகள் குட்டிகளை நன்றாக கவனித்துக் கொள்கின்றன.
6. காமன் மர்மோசெட்: ஆண் குரங்குகள் 7.4 அங்குள்ள நீளமும், பெண் குரங்குகள் 7.2 அங்குலமும் இருக்கும். எடை சுமார் 9 அவுன்ஸ் இருக்கும். பார்ப்பதற்கு கண் கவரும் வகையில் இருக்கும். வெள்ளைக் காதும் அடர்த்தியான புஷ்டியான வாலும், அதில் வண்ணமயமான புள்ளிகளையும் கொண்டிருக்கும். பூச்சிகள், பழங்கள், காளான்கள், பூக்கள், விதைகள் மற்றும் சிறிய விலங்குகளை இவை சாப்பிடுகின்றன. இவற்றுக்கு உண்ணுவதற்கு பழங்கள் மற்றும் பூக்கள் கிடைக்காதபோது உணவு ஆதாரமாக மரத்தில் உள்ள துளைகளை மெல்லுகிறது.
7. பிக்மி மர்மோசெட்: இது உலகின் மிகச் சிறிய குரங்காகும். ஏனென்றால் இதனுடைய நீளம் 5.1 அங்குல அளவு மற்றும் 3.5 அவுன்ஸ் எடையில் உள்ளது. உடலை விட நீளமான வால் இருக்கும். அமேசான் படுகையில் காணப்படும் இந்த குட்டிக் குரங்கு குடும்பத்துடன் வாழ்கிறது. இவற்றில் இரண்டு இனங்கள் உள்ளன. அவை மேற்கு மற்றும் கிழக்கு பிக்னி மர்மோசெட் ஆகும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். அடர்த்தியான ரோமங்கள் பழுப்பு, தங்கம், சாம்பல், ஆரஞ்சு மஞ்சள் நிறக் கலவையுடன் இருக்கும்.