வாழ்வாதாரம் தேடி வருடம்தோறும் கண்டம் விட்டு கண்டம் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளின் வியத்தகு பயணம்!

The amazing journey of birds that travel from continent to continent
Migratory birds that move every year
Published on

வ்வொரு ஆண்டும் பல வகை பறவைகள் வசதியான வாழ்வாதாரம், உணவு, இனப்பெருக்கம் போன்ற காரணங்களுக்காக தாமிருக்கும் இடத்தை விட்டு வானில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வேறிடம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உச்சபட்ச உஷ்ணம் மற்றும் குளிரான சீதோஷ்ண நிலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தினாலேயே இவை இடப்பெயர்ச்சியை (migration) மேற்கொள்கின்றன.

பூமியின் வடபகுதியில் (Northern Hemisphere) இனப்பெருக்க செயல்பாடுகளை முடிக்க விரும்பும் பறவைகள் வசந்த காலத்தில் வடக்கு நோக்கி பறக்கின்றன. காரணம், கூடு கட்டி குஞ்சு பொரிப்பதற்கான வசதி, அங்கு வாழ்ந்துவரும் அதிகளவிலான பூச்சி புழுக்கள் மற்றும் பூத்துக் குலுங்கும் செடிகள் போன்ற சாதகமான சூழ்நிலையே ஆகும். அந்தப் பகுதிகளில் குளிர் காலம் ஆரம்பிக்கையில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது அவை சூடான தென் பகுதியை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும். சீசனுக்காக இடம்பெயரும் சில வகை பறவைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
இறக்கைகள் இல்லாமல் காற்றில் பறக்கும் வியக்க வைக்கும் பாம்புகள்!
The amazing journey of birds that travel from continent to continent

1. ஆர்ட்டிக் டெர்ன் (Artic Tern): இந்த கடல் பறவையின் நீண்ட இறக்கைகள் அதிக தூரம் பறப்பதற்கு உதவி புரிபவை. ஒவ்வொரு ஆண்டும் ஆர்ட்டிக் சர்க்கிளில் இருந்து அண்டார்க்டிக் கடற்கரையை அடைய 25,000 மைல்கள் வரை பறக்கின்றன. அட்லாண்டிக் பெருங்கடலைச் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால் வட அரைக்கோளப் பகுதியில் புறப்பட்டு தென் அரைக்கோளப் பகுதியை அடையும் முன் இது இரண்டு கோடை காலத்தை வானத்தில் பறந்தே கழிக்கிறது.

2. கனடா கூஸ்: நார்த் அமெரிக்காவை சேர்ந்த இப்பறவை, வலுவான இறக்கைகள் உடையவை. சீசனுக்காக இடம் பெயரும்போது குழுவாகச் செல்கின்றன. ஸ்பிரிங் மற்றும் சம்மர் சீசனில் நார்த் அமெரிக்க பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு உண்டாவதால் தென் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நோக்கி இடம் பெயர்கின்றன.

3. பார்-டைல்ட் காட்விட் (Bar-tailed Godwit): பரந்து விரிந்த கடற்பரப்பின் மீது தொடர்ந்து இடை நிறுத்தமின்றி 7000 மைல்கள் பறந்து ஏழு நாட்களில் நியூஸிலாந்திலிருந்து அலாஸ்கா சென்றடையக் கூடியது இந்த தரை வாழ் பறவை. சம்மரில் இடம் பெயரும்போது ஒரே ஒரு முறை மட்டும் எல்லோ ஸீயில் (yellow sea) இடை நின்று மீண்டும் அலாஸ்கா நோக்கி பயணிக்கும். அங்கு இனப்பெருக்கம் செய்த பின் யூரோப் மற்றும் ஆசியா சென்று கோடை காலத்தை கழிக்கும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை முள்ளங்கியை விட பல மடங்கு லாபம் தரும் சிவப்பு முள்ளங்கி சாகுபடி செய்வது எப்படி?
The amazing journey of birds that travel from continent to continent

மீண்டும் நீண்ட பயணம் மேற்கொள்ள தயாராவதற்கு அதிகளவில் உணவை உட்கொண்டு உடலில் கொழுப்பை சேமித்து வைத்துக்கொள்ளும். புவியின் ஈர்ப்பு விசை, சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இப்பறவை தனது வாழ்க்கைப் பயணத்தை செலுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அபரிமிதமான திறமையும் சகிப்புத்தன்மையும் கொண்டு, இது காலநிலை மாற்றத்திற்கேற்ப இடம் பெயர்ந்து செல்வது அதிசயம் என்றே கூறலாம்.

4. ரூபி நிற கழுத்துடைய ஹம்மிங் பர்ட் (Ruby- throated Humming Bird): இந்த சிறிய வகைப் பறவை ஒவ்வொரு வருடமும் இடப்பெயர்ச்சி செய்யத் தவறுவதில்லை. இது  வட அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ வளைகுடாவைக் கடந்து மத்திய அமெரிக்காவுக்கு இடம் பெயரும். இதன் வலுவான தசைகளும், சுறுசுறுப்பான இறக்கைகளும் இதற்கு சிறந்த முறையில் பறந்து செல்ல  உதவுகின்றன. நடுவில் எங்கும் நிற்காமல் 500 மைல் தூரம் பறக்கின்றன. இடையில் எங்கும் தங்கும் வசதியோ உணவோ கிடைக்க வாய்ப்பில்லாததால் இடப்பெயர்ச்சியை ஆரம்பிக்கும் முன் அதிகளவு தேன் மற்றும் பூச்சிகளை உட்கொண்டு உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்துகொள்ளும். இதன் உறுதியான தன்னம்பிக்கையும் சகிப்புத்தன்மையும் இதற்கு கூடுதல் பலம் எனலாம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலை விஷமாக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களின் மறுபயன்பாட்டுக்கான சில ஆலோசனைகள்!
The amazing journey of birds that travel from continent to continent

5. ஒய்ட் ஸ்டார்க் (White Stork): நீண்ட கால்களும் அகலமான இறக்கைகளும் உடைய பறவையிது. ஒவ்வொரு வருடமும் இது யூரோப்பிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு குளிர் காலத்தில் இடம் பெயர்வதுண்டு. அதன் பயணம் மலைச் சரிவுகள், பாலைவனம், சதுப்பு நிலக் காடுகள் என பல நிலைகளைக் கடந்து செல்லும். இது இடப்பெயர்ச்சிக்கு பாரம்பரிய வழிகளையே பின்பற்றும். அதில் ஓய்வெடுக்கவும் விருப்பமான உணவுகளைப் பெறவும் வாய்ப்புண்டு.

இவ்வாறு நீண்ட பயணத்திற்கு இடையே இரை கிடைப்பது பெரும் பாக்கியம் எனலாம். அந்த இரை மூலம் கிடைக்கும் சக்தியை சேமித்து தென் பகுதிக்கு செல்லவும் பின் அங்கிருந்து மீண்டும் வடக்கே பயணிக்கவும் உபயோகிக்கும் திறமைசாலி. மேலும், வெதுவெதுப்பான காற்றின் இழுப்பில் சறுக்கிக்கொண்டு சக்தியை செலவழிக்காமல் பயணிக்கவும் இதற்குத் தெரியும்.

உயிர் வாழ்வதற்கு உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று திரும்பத் தயாராயிருக்கும் பறவையினம் உண்மையிலேயே உயர்ந்தவைதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com