
மஞ்சணத்தி மரம் நுணாமரம் என்றும் அழைக்கப் படுகிறது. இது சிறு மரமாகும். மேலும் இது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலைகள், வேர், மற்றும் பட்டை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
காடுகளில், மலைகளில் வளரக்கூடிய மரம். சர்வசாதாரணமாக, வீட்டுத் தோட்டங்களிலும், வேலி ஓரங்களிலும் செழித்து வளரும் ஒரு மரம். தரிசு நிலங்களிலும் வளரும். இது இயற்கையின் பெரும் கொடை என்றே சொல்லலாம்.
பயன்கள்
இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இயற்கையாகவே இருக்கின்றன. நுணா மரம் வெப்பம் தணிக்கும். வீக்கம் கரைக்கும். மந்தத்தை போக்கும், கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை தீர்க்கும். பசியை தூண்டும் தோல் நோயை போக்கும்.
இதன் முக்கிய அம்சங்கள்
இதன் வேறு பெயர்கள் குணா மஞ்சள் நாளி தணக்கு மஞ்சள் பாவட்டை. இதன் உயரம் சுமார் 15 அடி வரை வளரும் தடிப்பான பட்டை இது இதரடுக்கையில் அமைந்த இலைகள், நாற்கோண சிறு கிளைகள், சிறிய வெண்ணிற மலர்கள், முடிச்சு முடிச்சாக காய்கள் கருப்பு நிற பழங்கள். மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
நுணா இலை மைய அரைத்து புண், சிரங்குகளில் வைத்துக் கட்டினால் குணமாகும்.
இலையை இடித்து பிழிந்து சாறு எடுத்து இடுப்பு வலி உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும்.
இலையை அரைத்து சாறு எடுத்துத் தொண்டையில் பூசி வந்தால் தொண்டை நோய்கள் நீங்கும்.
நுணாமர வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்தால் பேதி நிற்கும்.
குழந்தைகளுக்கு வரும் கரப்பான் புண்கள் | கழலை போன்றவற்றை குணமாக்கும்.
நுணா மரத்தின் காய்களை உப்பு நீரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து சுட்டு கரியாக்கி சலித்து தினமும் பல் துலக்கினால் சொத்தைப்பல் வராது.
இதன் சிறப்புக்கள்
வேர் முதல் இலை வரை அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது மலச்சிக்கல், கோளாறுகள் மற்றும் உடல் தளர்ச்சியை நீக்க உதவுகிறது. மேலும் இது கோழிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது.
இதர பயன்கள்
இதன் மரங்கள் கட்டில்கள் செய்ய, நீர் இறைக்கும் கமலைகள் செய்ய குங்குமச்சிமிழ், விவசாயக் கருவிகள் செய்யவும், மரச்சாமான்கள், பொம்மைகள், வண்டிகளுக்கு கணையை போன்றவை செய்ய பயன்படுகிறது.
இலக்கியத்தில் நுணா மரத்தின் பூவை தணக்கம் பூ என்று குறிப்பிடுகிறார்கள். நுனாமரம், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது.
மரங்களை காப்போம்!
மழை வளம் பெறுவோம்!