உலகிலேயே அதிக நீளமான இறக்கையுடைய பறவைகள்!

The birds with the longest wingspan in the world!
albatross bird
Published on

விங்ஸ்பான் (Wingspan) என்பது பறவை தனது இறக்கைகளை முழுவதுமாக நீட்டி விரிக்கும்போது அதன் ஒரு பக்கத்து இறக்கையின் நுனியிலிருந்து அடுத்த பக்கத்து இறக்கையின் நுனி வரையுள்ள நீளத்தைக் குறிக்கும். அதிக நீளமான இறக்கையுடயை பறவைகள் அழகான தோற்றமும், சுதந்திர உணர்வும் கொண்டு உயர உயரப் பறந்து செல்வத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வாழ்வாதாரம் மற்றும் உணவு தேடி மிகுந்த பலத்துடன் இவை நீண்ட தூரம் பறந்து செல்லவும், காற்றின் வேகத்தோடு கலந்து சறுக்கிக் கொண்டே செல்லவும் இவற்றின் நீண்ட இறக்கைகள் பயன்படுகின்றன.

உலகிலேயே மிக நீளமான விங்ஸ்பான் கொண்டது, விருப்பம்போல் சுற்றித் திரியும் ஆல்பட்ராஸ் (wandering Albatross) எனப்படும் கடற்பறவையாகும். இது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கடற்பரப்பிலேயே கழிக்கிறது. இதன் விங்ஸ்பான் நீளம் சுமார் 3.6 மீட்டர் ஆகும்.

இதையும் படியுங்கள்:
மனிதனின் தவறா? 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் 'நெருப்பு பள்ளம்'!
The birds with the longest wingspan in the world!

மணிக்கணக்கில், இது தனது இறக்கைகளைப்  பயன்படுத்தாமல் காற்றின் வேகத்தோடு சறுக்கிக்கொண்டே செல்லக்கூடிய திறமை பெற்றது. இந்தத் திறமையானது, இது தனது உடலின் சக்தியை குறைந்த அளவே செலவழித்து ஆயிரக்கணக்கான மைல் தூரத்தை கடந்து செல்ல உதவுகிறது.

ஆல்பட்ராஸ் குடும்பத்தின் மற்றொரு வகையான கிரேட் ஆல்பட்ராஸ் (Great Albatross) என்னும் பறவை 3.2 மீட்டர் விங்ஸ்பான் கொண்டு, உயரமாகப் பறக்கும் திறன் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து வருவது, 3.2 மீட்டர் இறக்கை அளவு கொண்ட ஆன்டீன் கான்டோர் (Andean Condor) ஆகும். இது தென் அமெரிக்காவில் காணப்படும் பறவை. ஆன்டெஸ் (Andes) மலைகள் மீது அதிக உயரத்தில் பறக்கக்கூடிய பெரிய அளவு கொண்ட பறவை.

கலிபோர்னியா கான்டோர் (California Candor) என்ற பறவை 3 மீட்டர் விங்ஸ்பான் கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருந்த இப்பறவைகளின் எண்ணிக்கை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பளிக்கும் அமைப்பினரின் தீவிர முயற்சியால், சமீப காலத்தில் சற்றே கூடி வருகிறது என்ற செய்தி ஆறுதல் தருகிறது.

ஆல்பட்ராஸ் மற்றும் ஆன்டீன் போன்ற பறவைகள் முறையே கடல் சார்ந்த மற்றும் மலைப்பாங்கான என வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றன. இவற்றிற்கு முறையான பாதுகாப்பளிக்க, அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய தகவல்களை சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதையும் படியுங்கள்:
கொசு கடித்தால் இனி நோய் வராதா? பாக்டீரியா மூலம் கொசுக்களை மாற்றியமைத்த விஞ்ஞானிகள்!
The birds with the longest wingspan in the world!

நீண்ட விங்ஸ்பான் கொண்ட பறவைகள் பல, அவற்றின் வாழ்வாதாரம் சீர் கெடுவதாலும், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படுவதாலும், மனிதர்களின் தொடர் இடையூறுகளாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. உருவத்தில் பெரிதாகவும், நீண்ட விங்ஸ்பான் கொண்டதாகவும் உள்ள பறவைகள், சுற்றுச்சூழல் சமநிலைத்தன்மை (Ecosystems) பெற பல வழிகளில் உதவிபுரிகின்றன. அவை:

1. வல்ச்சர் (Vulture) போன்றவை சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் கொன்று இழுத்து வந்து, தின்று விட்டுச் செல்லும் பிற மிருகங்களின் மீந்த சதைகளை முழுவதுமாக உட்கொண்டு நோய் பரவலைத் தடுக்க உதவுகின்றன.

2. பருந்து போன்ற பறவைகள் எலிகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு, எலிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகுவதை தடுத்து நிறுத்துகின்றன.

3. சில பெரிய சைஸ் பறவைகள், பல வகையான தாவர விதை பரவலுக்கு காரணமாகின்றன. நீண்ட விங்ஸ்பான் கொண்ட பறவைகள் கவர்ச்சிகரமானதாகவும், அதேநேரம் அவற்றின் வாழ்வியல் முறை சிக்கலானதாகவும் உள்ளது. அவற்றின் வாழ்வாதாரத்தை பெருக்கி, அவற்றின் வளர்ச்சியைப் பெருக்குவது நம் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com