
பிரேசிலின் அட்லாண்டாக் காடுகளில் 111 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இயற்கையின் அதிசயமாகும். தென் அமெரிக்க உயிரினமான இது கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே எல்லோரும் நினைத்திருக்க, இது திரும்பவும் வந்திருப்பதை விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டு வியந்துள்ளார்கள்.
‘South American Tapir’ என்று அழைக்கப்படும் இந்த உயிரினம், ஆச்சர்யமாக கருதப்படுகிறது. ஆராய்ச்சிகளின்படி இது 1914ம் வருடம் கடைசியில் பார்க்கப்பட்டது. தற்போது 111 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காணப்படுகிறது. இதை, ‘காடுளின் தோட்டக்காரன்’ என்று கூறுவார்கள். இதன் முலமாக காடுகளில் அதிக மரங்கள் வளர்கின்றன.
இது பல வருடங்களாகக் காணாமல் போனதற்குக் காரணம் காடுகளை அழித்தல் மற்றும் மற்றும் காட்டுப்பகுதியை அழித்து மக்கள் அதிக இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டதுதான் என நம்பப்படுகிறது.
சுமார் 100 வருடங்களுக்குப் பிறகு இவை தோன்றியதற்குக் காரணம் ஈகோ சிஸ்டம் மற்றும் இந்த உயிரினத்தின் தனி பலம்தான். மேலும், இவை இருப்பதை மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாததே என்றும் நம்பப்படுகிறது. மேலும், இவை இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் (migration) செல்வதாலும் பல வருடங்கள் கண்ணில் படாமல் இருந்திருக்கலாம்.
இது தென் அமெரிக்க சுற்றுச்சூழலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது காடுகளில் நிறைய பழங்களை உண்பதால் கொட்டைகள் காடு முழுவதும் பரவி அதிக மரங்களை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த உயிரினம் மண்ணின் வளத்தையும் செழிப்பாக வைக்கிறது.
இதன் சாணம் மிகவும் சத்து நிறைந்ததாக இருப்பதால் மரம், செடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் காடுகளின் வளம் காக்கப்படுகின்றன. தற்போது இந்த உயிரினம் 4,600 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளன. காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலமாக மாறுவது மற்றும் விவசாயம் இதன் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. எனவே, இந்த உயிரினத்தைப் பாதுகாக்க நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.