மழைக்காலம் தொடங்கியாச்சு மக்களே: உங்க வீட்டு செல்லப் பிராணிகள் பத்திரம்!

Pet care during the rainy season
Pet care
Published on

செல்லப்பிராணிகள் வளர்ப்பு மனதிற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. அவற்றின் அன்பும், நட்பும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நாய்களுடன் நடப்பது உடல் நலத்தை மேம்படுத்தி, நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த புரிதல் கிடைக்கிறது. செல்லப்பிராணிகளை பராமரிப்பதன் மூலம் கருணை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.

செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். தினமும் சுத்தப்படுத்தி பராமரித்து அவற்றிடம் அன்பாகவும், பொறுமையாகவும் பழக வேண்டும். ஒவ்வொரு செல்லப்பிராணிகளுக்கும் தனித்துவமான தேவைகள் உள்ளதை அறிந்து அவற்றை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எட்டு கண்களோடு நடனமாடும் மயில் சிலந்திகள்: சில ஆச்சரியமான உண்மைகள்!
Pet care during the rainy season

மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளை பராமரிக்கும் வழிமுறைகள்: மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு வறண்ட மற்றும் வசதியான இடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். குடில்கள் அல்லது வீட்டின் உலர்ந்த பகுதியை பயன்படுத்தலாம். குடிலின் அடிப்பகுதி நீர் வராமல் பார்த்து உறுதி செய்ய வேண்டும். சுத்தமான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை அவற்றுக்கு அளிக்கவும். தண்ணீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாக்டீரியா ஏற்படாமல் தண்ணீர் பாத்திரங்களை நாள்தோறும் கழுவி பாதுகாக்க வேண்டும். தண்ணீர் மிகவும் குளிராக இல்லை என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மழையில் நனைந்து விட்டால் பிராணிகளை உடனே துடைத்து உலர்த்தவும். நெருக்கமான முடி கொண்ட பிராணிகளை அவ்வப்போது முடியை துடைத்து உலர்ந்த நிலையில் வைக்க வேண்டும். தோல் நோய் அல்லது உன்னி போன்ற பிரச்னைகள் இருந்தால் அதைக் கண்டறிந்து தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். செல்லப்பிராணிகளின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகள் அல்லது கொசுக்களைத் தவிர்க்க இயற்கை முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் தடுப்பூசிகளை காலம் தவறாமல் போட வேண்டும். மருத்துவர் பரிந்துரைகளைப் பின்பற்றலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தின் ரகசியம்: சுற்றுப்புறத்தையும் உணவையும் பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!
Pet care during the rainy season

சிறிய செல்லப்பிராணிகளாகிய முயல்கள், கினிப் பன்றிகள் போன்றவற்றால் உண்மையில் குளிர் மற்றும் வானிலை மாற்றங்களை உணர முடியும் மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இவற்றை மழை மற்றும் பனியிலிருந்து பாதுகாக்க கொட்டகை அல்லது கார் இல்லாத கேரஜ் போன்ற வரைவுகள் இல்லாத பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கலாம்.

பலத்த காற்று, மழை மற்றும் பனி ஒட்டாமல் இருக்க செல்ல பிராணிகள் வசிக்கும் அறையில் ஒரு ஓரத்தில் தரையின் மீது ஒரு போர்வை அல்லது கம்பளத்தை விரிக்கலாம். புதிய காற்று உள்ளே செல்லும்படி வசதிகள் செய்யலாம். மழை காரணமாக வெளியில் செல்ல முடியாவிட்டால் வீட்டிற்குள் விளையாடக்கூடிய செயல்பாடுகளை அமைத்துக் கொடுக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

செல்லப்பிராணிகள் என்பது மனிதர்களுடன் அன்பும், பராமரிப்பும் கொண்ட வாழ்வு முறையை பகிர்ந்து கொள்வதற்காக வளர்க்கப்படும் மிருகங்கள் அல்லது பறவைகள் ஆகும். அவற்றை வளர்ப்பதால் மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com