மழைக்காலம் வந்துடுச்சு: நத்தைகள் உங்கள் வீட்டில் நுழையாமல் தடுக்க சில யோசனைகள்!

Some ideas to prevent snails from entering the house!
Snails
Published on

ழைக்காலம் வந்துவிட்டாலே நத்தைகளின் வருகையும் அதிகரித்து விடுகின்றன. நத்தைகளில் மூன்று வகைகள் உண்டு. கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை ஆகியவையாகும். இதில் தரை நத்தையானது மழைக்காலத்தில் உப்பு தண்ணீர் கலந்துவிடுவதால் அச்சமின்றி தோட்டங்களை ஆக்கிரமிக்கின்றன. இவை வீடுகளில் மதில் சுவர்கள் மீது கூட்டங்கூட்டமாக ஊர்ந்து வருவதைப் பார்க்கவே மக்களிடம் ஒருவித பய உணர்வு தோன்றுகிறது. 'பல்மோனேட்டா' வகையைச் சேர்ந்த நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. 'பப்பாபில்லி' வகை நத்தைகள் செவுள்களினால் சுவாசிக்கின்றன.

நத்தைகள் வீட்டுத் தோட்டங்களில் புகுந்துவிட்டால் பயிர்களுக்கும் காய்கறிகளுக்கும் பெருமளவில் அழிவை ஏற்படுத்துகின்றன. ஒரு நத்தை தோட்டத்தில் புகுந்துவிட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட நத்தைகள் பெருகிவிடும். இவை பயிர்களைக் கடித்தும், இலைகளை சப்பியும் அழித்துவிடக்கூடிய நச்சுத் தன்மை பெற்றவை. இவை வாழை, முட்டைகோஸ், பப்பாளி, கீரை வகைகள், பயறு வகைகள், நிலக்கடலை, வெண்டை, கத்தரி, வெள்ளரி ஆகியவை மட்டுமல்லாமல், அழகுக்காக வளர்க்கப்படும் பூச்செடிகளையும் விட்டு வைக்காமல் அழித்து விடுகின்றன.

இதையும் படியுங்கள்:
கண் மூடித் திறப்பதற்குள் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும்: பிரானா மீன்களின் வேட்டை ரகசியம்!
Some ideas to prevent snails from entering the house!

நத்தைகள் தாவரங்களை மட்டுமின்றி, பல்லி, பாம்பு, பறவைகள் மற்றும் எலி போன்ற விலங்குகளையும் வேட்டையாடுகின்றன. மேலும், பூஞ்சைகள், லைக்கன், பச்சை இலைகள், புழுக்கள், சென்டிபீடு பூச்சிகள், விலங்குகளின் மலம், ஓடில்லா நத்தைகள் இவற்றையும் சாப்பிட்டு விடுகின்றன. நத்தைகளை அழிக்கவில்லை என்றால் பெரும் சேதத்தை விளைவிக்கும். ஆப்பிரிக்க பெரிய நத்தை இனம் மிகவும் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. நத்தைகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவை.

நத்தைகளை அழிக்கும் விதம்:

1. உப்பு, புகையிலை: முடிந்த அளவு கண்களுக்குப் புலப்படும் நத்தைகளைக் கைகளால் பொறுக்கி அழிக்க வேண்டும். அழுகிய முட்டைகோஸ் அல்லது பப்பாளி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம். சாதாரண உணவு உப்புகளை தூவுவதால் நத்தைகளின் செயல்பாடு குறைக்கப்படும். நத்தைகள் கூடி இருக்கும் இடத்தில் புகை இலை சாறும், ஒரு சதமயில் துத்தமும் கலந்த கலவையைத் தெளிப்பதால் நத்தைகள் உடனே இறந்து விடும்.

இதையும் படியுங்கள்:
அதிசயிக்கத்தக்க குணங்கள் கொண்ட 6 வகை பறவைகள்!
Some ideas to prevent snails from entering the house!

2. சுண்ணாம்பு, அரிசி தவிடு: மெட்டால்டிஹைடு 5 சதவிகித மருந்தினை அரிசி தவிடுடன் கலந்து நில இடுக்குகளில் இடுவதால் நத்தைகள் ஈர்க்கப்பட்டு நஞ்சுணவை உண்டு இறந்துவிடும். சுண்ணாம்பு தூளை செடிகளைச் சுற்றித் தூவி நத்தைகளை விரட்ட வேண்டும். மருந்து தெளித்து இறந்துபோன நத்தைகளை சேகரித்து உடனே புதைத்துவிட வேண்டும்.

பண்ணைக் கழிவுகள் அதிகம் உள்ள இடங்கள், வடிகால் வசதி இன்றி நீர் தேங்கிய பகுதிகள் நத்தைகளின் உற்பத்திக்கு சாதகமான சூழல்கள் ஆகும். நத்தைகளின் மறைவிடங்களைக் கண்டறிந்து உறக்க நிலையில் இருக்கும் நத்தைகளை சேகரித்து கொன்று விடலாம். பயிர் செடிகளை நெருக்கமாக நடாமல் நல்ல இடைவெளி விட்டு நடுவதால் நத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக. ஆப்பிரிக்க நத்தைகளை கையால் தொடக் கூடாது.

இவ்வாறு நத்தைகளை அழித்து நமக்குப் பயன் தரக்கூடிய தாவரங்களையும், தோட்டங்களையும் பாதுகாத்து நல்ல முறையில் சுற்றுச்சூழலைத் திறம்பட நத்தைகளிடம் இருந்து பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com