
மரணம் என்பது எல்லா உயிர்களின் இயற்கையான முடிவாகவே கருதப்படுகிறது. ஆனால், சில உயிரினங்கள் உயிரின் செல்கள் சிதைந்து முடியும் நிலையில் கூட, இவை புதிதாக உயிர் பெறும் வல்லமை கொண்டவையாக விளங்குகின்றன. இத்தகைய உயிரினங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மரணத்தை மீறும் ஜெல்லி ஃபிஷ்: இதன் அறிவியல் பெயர் Turritopsis dohrnii. இவை கடல் நீர் தீவுகளின் அருகே, குறிப்பாக மெடிடரேனியன் மற்றும் ஜப்பான் கடல்களில் வாழ்கின்றன. இந்த உயிரினம் முதிர்ந்த பிறகு, தனது வாழ்க்கை சுற்றுச் சுழற்சியை ‘மீண்டும் பிளவுப்படி நிலைக்கு (polyp stage)’ கொண்டு செல்லும் திறன் உடையது. இது உயிரின் ‘reverse aging’ என்று அழைக்கப்படும் பிரமிப்பூட்டும் உயிரியல் முறை. இவை தன்னுடைய செல்கள் அனைத்தையும் மீள வடிவமைக்கும் (transdifferentiation’ திறன் கொண்டிருப்பது முக்கிய அம்சம்.
2. மறுபிறப்பின் புழு - Planaria: இதன் அறிவியல் பெயர் Schmidtea mediterranea. இவை நன்னீர் ஓடைகளில் வாழ்கின்றன. இதன் உடலைப் பத்துப் பகுதிகளாக வெட்டினாலும், ஒவ்வொரு துண்டும் புதிய பிளானேரியாவாக உருவாகும். இதன் காரணமாக, இது எப்போதும் புதிதாகவே இருந்துகொண்டிருக்கிறது. இதன் 20 சதவிகித செல்கள் pluripotent stem cells (neoblasts) ஆக இருக்கின்றன. இந்த செல்கள் எந்த அங்கத்தையும் மீண்டும் உருவாக்கும் திறன் கொண்டவை. பிளானேரியா மூலம் அறுவைச் சிகிச்சை, காயங்களை ஆற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல புதிய மருத்துவ முயற்சிகள் உருவாகின்றன.
3. நித்திய புதுமையின் நீருயிர் - Hydra: இதன் அறிவியல் பெயர் Hydra vulgaris. இவை சிறிய நீர் நதிகள், குளங்களில் வாழ்கின்றன. Hydraவில் உள்ள உடல் செல்கள் சீராக பிரிந்து, பழைய செல்களை எப்போதும் புதியவற்றால் மாற்றிவிடுகின்றன. இதன் மூலம் இவற்றுக்கு முதுமை நிகழாமல் தடுத்து வைக்கப்படுகிறது. இவற்றின் செல்கள் எப்போதும் non-senescent நிலையில் இருக்கின்றன. மரணம் என்பது யாரோ புறவழியால் ஏற்படுத்தியதே. Hydra மூலம் anti-aging மருந்துகள் பற்றி ஆராய்ச்சிகள் நடைபெறுவது இவற்றின் முக்கிய அம்சம்.
4. முதுமையற்ற கடல் வழிகாட்டிகள் - Lobsters: இதன் அறிவியல் பெயர் Homarus americanus. இவை அடர்ந்த கடல் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றன. Lobstersல் telomerase எனும் ஒரு நுட்பம் செயலில் இருக்கும். இது செல்களின் பழைய தன்மையை சரி செய்து புதுப்பிக்கும். மனிதர்களில் இது பிறக்கும்போது அதிகமாக இருந்தாலும், வயதாக ஆக குறையத் தொடங்கும். இவற்றின் வளர்ச்சி, முதுமையால் இதற்கு மரணம் ஏற்படாது. ஆனால், பசித்தல், வேட்டைகள், நோய்கள்தான் இவற்றின் இறத்தலுக்கு முக்கியமான காரணிகள்.
5. அழிவுக்கே எதிரான பாக்டீரியா: இதன் அறிவியல் பெயர் Deinococcus radiodurans. இவை மிக வறண்ட நிலங்கள், அணுக்கதிர் உள்ள இடங்கள் போன்றவற்றில் வாழ்கின்றன. இது கடுமையான அணுக்கதிர் வீச்சு, காய்ச்சல், பனிக்கட்டி போன்றவற்றில் கூட உயிர் வாழும். இதன் DNA சிதைந்தாலும், அதனை முழுமையாக பழைய நிலையில் திரும்ப உருவாக்கும். 5,000 கிரே (Gy) அணுக்கதிரை தாங்கும் திறன், (மனிதனுக்கு 5 முதல் 10 Gy போதுமானது) பலகட்ட DNA மீள்நிரல் முறைமை இவற்றின் முக்கிய அம்சம். இதுபோல உயிரினங்கள் விண்வெளி பயணங்களின் சூழ்நிலைக்கேற்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை, மரணத்தை ஒரு கட்டாயமான முடிவாகவே வடிவமைத்திருக்கலாம். ஆனால், மேற்சொன்ன ஐந்து உயிரினங்கள், மரணத்தின் வரம்புகளை மீறி, பரிணாமத்தின் பெரும் புதிராக மாறுகின்றன. இவையெல்லாம் இன்னும் முழுமையாக மனித அறிவால் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆயினும், அவற்றின் நுட்பங்கள் மூலம் எதிர்காலத்தில் மருத்துவம், மனித ஆயுள், வாழ்நாள் தரம் ஆகியவற்றில் புரட்சி நிகழலாம்.