
பனை மரங்கள் அரேகேசியே அல்லது பால்மே என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகைகளாகும். பனை மரங்களின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தனித்துவமான வளர்ச்சி அமைப்பு;
மற்ற மரங்களை ஒப்பிடும்போது பனை மரங்கள் தனித்துவமான வளர்ச்சி முறையை கொண்டுள்ளன. இந்த மரங்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி எனப்படும் வாஸ்குலர் கேம்பியம் இல்லாததால் அவற்றின் தண்டுகள் தடிமனாக இல்லாமல் செங்குத்தாக வளரும். பனை இலைகள் இறகு போன்றதும் மற்றும் உள்ளங்கை வடிவ விசிறி வடிவத்திலும் இருக்கும்.பனை வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவுகின்றன. சில இனங்களில் வேர்கள் மரத்தை நிலை நிறுத்தும் முதுகெலும்புகளாகவோ அல்லது தடித்த மாறக்கூடும்
நீண்ட ஆயுள்;
பனை மரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிராக செயல்பட்டு நீண்ட காலம் வாழும் தன்மை உடையவை. அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் அந்த மரத்தை மிகவும் வலிமையாக மாற்றுகின்றன. பலத்த காற்றை தாங்கும் திறன் பெற்றவை. சில இன பனை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியவை. வனவிலங்குகளுக்கு வாழ்விடங்களையும் உணவு மற்றும் மருந்து போன்ற வளங்களையும் வழங்குவதன் மூலம் வெப்பமண்டல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
வாழ்விட தகவமைப்பு;
பனை மரங்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கால நிலைகளில் செழித்து வளரும். பெரும்பாலானவை ஈரமான மண்ணை விரும்பினாலும் சில இனங்கள் வறண்ட பாலைவன நிலைகளுக்கு நன்கு பொருந்துகின்றன.
சுற்றுச்சூழல் நன்மைகள்;
பனை மரங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன. அவை மதிப்பு மிக்க சுற்றுச்சூழல் சொத்துக்களாக விளங்குகின்றன. இயற்கைப் பேரழிவுத் தணிப்புகளாக செயல்படுகின்றன. குறிப்பாக சூறாவளி மற்றும் பெரிய புயல்களின்போது பல பனை மரங்கள் காற்றின் தாக்குதல்கள் இருந்து தப்பிக்கின்றன.
இயற்கைப் பேரழிவு தடுப்பான்கள்;
மின்னல் பாதுகாப்பிலும் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அதிக ஈரப்பதம் மின்னல் தாக்கங்களிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி சிதறடிக்க உதவுகிறது. மேலும் மின்சாரத்தை தரையில் பாதுகாப்பாக செலுத்தும் இயற்கை கடத்திகளாக செயல்படுகின்றன. ஒடிசா அரசாங்கம் பனை மரங்களின் நன்மையை உத்தேசித்து மின்னல் தொடர்பான இறப்புகளை குறைக்க 9.1 மில்லியன் பனை மரங்களை நடத்தொடங்கின. இது கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 இறப்புகளை தணிக்க உதவின.
பல்லுயிரியல் ஆதரவு;
பேரழிவு தடுப்புக்கு அப்பால், பனை மரங்கள் பல்லுயிரியல் ஆதரவை வழங்குகின்றன. இவை கழுகுகள், கிளிகள், மயில்கள், கருப்பு அரிவாள் மூக்கன், தூக்கணாங்குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு வாழ்விடமாக செயல்படுகின்றன. சூரிய பறவைகள், இந்திய ரோலர்கள், பனை சுவிஃப்ட்கள், வெள்ளி-மூக்கு பறவைகள், வெள்ளை-மார்பு மீன்கொத்திகள் மற்றும் ஷிக்ராக்கள் குறிப்பாக பனை மரங்களை விரும்புகின்றன. இவை பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்ற ஊர்வனங்களுக்கும் தங்குமிடமாக உள்ளன.
காலநிலை ஒழுங்குமுறை;
இவை காலநிலை ஒழுங்குமுறை நன்மைகளையும் வழங்குகின்றன. காற்று வெப்பநிலையை குறைக்கவும் தொழில்துறை நடவடிக்கைகளில் இருந்து மாசுபாட்டை குறைக்கவும் உதவுகின்றன. கார்பன் டை ஆக்சைட்டை உறிஞ்சும் திறனுக்காகவும் கார்பன் தடம் குறைப்புக்கு பங்களிப்பதற்கும் பெயர் பெற்றவை. எனவே லாஹூரில் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் முக்கிய சாலைகளில் 650 க்கு மேற்பட்ட பணிகளை நட்டுள்ளனர்.
இந்தியப் பனைமரங்கள்;
இந்தியப் பனை மரங்கள் பிற நாட்டுப் பனை மரங்களிலிருந்து வேறுபட்டவை. இந்தியாவில் சுமார் 106 வகையான பனை மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் நுங்கு நீர் சத்து நிறைந்தது. கொழுப்பு குறைவாக உள்ளது. பனம்பழத்தில் சுமார் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது.
வெப்பமான காலநிலையில் நீரேற்றம் தருகிறது. புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இதில் பூஜ்ஜிய கொழுப்பு மற்றும் மிக குறைந்த புரத உள்ளடக்கம் உள்ளது. இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த செல்லுலார் செயல்பாட்டுக்கு முக்கியமானவை.