
பூமியில் வாழும் பழைமையான பதுங்கியிருந்து வேட்டையாடும் இயல்புடைய உயிரினங்கள் முதலைகள். உலகெங்கிலும் உள்ள ஆறுகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள் மற்றும் கடலோர நீர் நிலைகளில் இவை காணப்படுகின்றன. பெரும்பாலான முதலை இனங்கள் கூச்ச சுபாவமுள்ளவை, மனிதர்களை தவிர்க்க முயற்சிப்பவை. ஆனால், சில முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய இயல்புடையவையாக இருக்கின்றன. ஆபத்தான ஆறு முதலை இனங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நைல் முதலை: இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முதலைகளில் முதலிடத்தில் இருக்கிறது. இவை ஆப்பிரிக்காவின் சகாரா மற்றும் மடகாஸ்கரின் பெரும் பகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மக்களை இலை தாக்கிக் கொல்கின்றன. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய அன்றாட தண்ணீர் தேவைகளுக்காக வரும்போது அவர்களை மறைந்திருந்து இலை தாக்குகின்றன. இவை கிட்டத்தட்ட 20 அடி நீளம் உள்ளவை.
2. உப்பு நீர்: இவை 20 அடிக்கு மேல் நீளமும் 1,100 பவுண்டுகள் வரை எடையும் கொண்டவை. தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் அருகில் உள்ள தீவுகளில் வாழ்கின்றன. ஊர்வனவற்றில் இவை ராட்சத சைசில் இருக்கும் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும். மக்களை மறைந்திருந்து விரைவாக தாக்கிக் கொல்கின்றன. ஆக்ரோஷமான இயல்பு கொண்ட இவை நைல் முதலைகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களைக் குறைவாகவே கொல்கின்றன.
3. கரியல் முதலை: கூர்மையான பற்களையும் நீண்ட மெல்லிய மூக்கையும் கொண்டவை இந்த முதலைகள். பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோன்றினாலும் மனிதர்களுக்கு அத்தனை ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. வட இந்தியா மற்றும் நேபாளத்தின் ஆறுகளில் காணப்படும் இந்த முதலை இனங்கள், மீன்களை முதன்மையாக உண்கின்றன. பிரிட்டானிகாவின் கூற்றுப்படி இந்த முதலை இனங்கள் மக்களைத் தாக்குவதில்லை என்றாலும் இறுதிச் சடங்குகளின் போது ஆறுகளில் விடப்படும் மனித சடலங்களை உண்கின்றன. 12லிருந்து 15 அடி நீளம் கொண்டவை.
4. அமெரிக்க முதலை: வளைகுடா கடற்கரை மற்றும் தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் காணப்படும் அமெரிக்க முதலை தன்னை யாராவது தாக்க வரும்போது தற்காத்துக் கொள்ளும். ஆண் முதலைகள் 15 அடி நீளம் வரை வளரும். மக்கள் அவற்றுக்கு உணவளிக்க முயற்சிக்கும்போதும், சிறைபிடிக்க முயலும்போதும் அவர்களைத் தாக்குகின்றன. நைல் அல்லது உப்பு நீர் முதலைகளைப் போல ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. தெற்கு புளோரிடா, மத்திய அமெரிக்கா மற்றும் வடக்கு, தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இவை உப்பு நீர் வாழ்விடங்களை விரும்புகின்றன. 16 அடி நீளம் வரை வளரும். மனிதர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி அவர்களது மரணத்திற்குக் காரணமாக இருக்கின்றன.
5. மக்கர் முதலை: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த முதலைகள் ஆக்ரோஷமானவை. மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் வசிப்பவை. அதிகமாக மனிதர்களைத் தாக்கி அவர்களின் இறப்புக்குக் காரணமாகின்றன.
6. கியூபா முதலை: கியூபாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர அளவிலான முதலை இனம் இவை. மற்ற ராட்சத முதலை இனங்களுடன் ஒப்பிடும்போது இது அளவில் சிறியதாக இருந்தாலும் ஆக்ரோஷமான இயல்புடையது. இதை சிறைபிடிக்க முயலும்போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இதை பாதுகாப்பாக நிர்வகிப்பது கடினமாக இருக்கும். நீண்ட வலுவான கால்களைக் கொண்டது. பாய்ந்து சென்று விரைவாக தாக்கும் திறனுடையது. தண்ணீரிலிருந்து குதித்து பறவைகள் மற்றும் மரக்கிளைகளில் வாழும் பாலூட்டிகளை தாக்கிக் கொல்கின்றன. கியூபாவில் உள்ள ஜபாடா சதுப்பு நிலத்தில் மனிதர்களைத் தாக்குவது குறைவாகவே உள்ளது.