பறவைகளுக்கும், கடல் ஆமைகளுக்கும் கூடு கட்டும் இடமாக செயல்படும் 'துப்பதஹா இயற்கைப் பூங்கா' - இது எங்குள்ளது?

Tubbataha Reef
Tubbataha Reef
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on: 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் 7,641 தீவுகளையும் 300 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பையும் கொண்டது. இந்தத் தென்கிழக்கு ஆசிய நாடு ஒரு சுற்றுச்சூழலின் புதையல் ஆகும். அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் கிட்டத்தட்ட பாதிக்குத் தாயகமாக உள்ளது. இதன் எல்லைக்குள், 228 முக்கிய பல்லுயிர்ப் பகுதிகள், உலகளவில் முக்கியமான 855 உயிரினங்களுக்கான சரணாலயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் ஒன்றாக அமைந்திருப்பதுதான் ‘துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா’ (Tubbataha Natural Park).

துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா, சுலு கடலின் நடுவில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது பிலிப்பைன்சின் பலவான் மாகாணத்தின் தலைநகரான புவேர்ட்டோ பிரின்செசா நகரத்திலிருந்து தென்கிழக்கில் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடல் மற்றும் பறவைகள் சரணாலயமான இது பவளத்தால் உருவான இரண்டு பெரியத் தீவுகளையும் கொண்டுள்ளது. இது மொத்தம் 97,030 எக்டேர் (239,800 ஏக்கர்; 374.6 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. மக்கள் வசிக்காத தீவுகளும், திட்டுகளும் பலவானின் ககாயன்சிலோ தீவு நகராட்சியின் ஒரு பகுதியாகும். இது பாறைகளின் வடகிழக்கில் சுமார் 130 கிலோமீட்டர் (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இந்தத் தேசிய பூங்காவும், பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் எஞ்சிய பகுதிகளும் பவள முக்கோணத்தின் ஒரு பகுதியாகும். இது கடல் பல்லுயிர் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவரிக்கப்பட்ட பவள இனங்களில் 75% மற்றும் உலகின் மீன்களில் 40% இந்தப் பூங்காவில் உள்ளன. அதிகப்படியான மீன்பிடித்தலாலும், அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகளாலும் இப்பகுதி கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளானது. 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து பாறைகளைப் பார்வையிட்ட அறிவியலாளர்களின் ஆராய்ச்சியில், இந்த இயற்கை பூங்காவில் 600 க்கும் குறைவான மீன் இனங்கள், 360 பவள இனங்கள், 11 சுறா இனங்கள், 13 ஓங்கில்கள், திமிங்கல இனங்கள் மற்றும் 100 பறவை இனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டுகள் அழுங்காமைகளுக்கும், தோணியாமைகளுக்கும் கூடு கட்டும் இடமாகவும் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வௌவால்களின் பங்கு!
Tubbataha Reef

பிலிப்பைன்ஸ் அரசு, இப்பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு டிசம்பரில், யுனெஸ்கோ இந்த இயற்கைப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இது கடல் உயிரினங்களின் அதிக அடர்த்தி கொண்ட ஒரு பாறைத் தீவுக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகும். பறவைகளுக்கும், கடல் ஆமைகளுக்கும் கூடு கட்டும் இடமாக வடக்குத் தீவு செயல்படுகிறது. 

கண்கவர் 100 மீ செங்குத்தாக சுவரும், விரிவான தடாகங்களும், இரண்டு பவளத் தீவுகளும் கொண்ட இது அழகிய பவளப்பாறைக்கு இந்த தளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

1999 ஆம் ஆண்டில், ராம்சார் சாசனம் இந்தப் பூங்காவை சர்வதேச முக்கியத்துவத்தின் ஈரநிலங்களில் ஒன்றாக பட்டியலிட்டது. 2008 ஆம் ஆண்டில், இயற்கையின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக இது பரிந்துரைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com