தோட்டக்கலையில் ஒரு ராயல் லுக் வேண்டுமா? இதோ அந்த சீனத்து மேப்பிள் மரம்!

paperbark-maple-tree
paperbark-maple-tree
Updated on

யற்கையின் படைப்பில் ஒவ்வொரு தாவரமும் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையில், சீனாவைத் தாயகமாகக் கொண்ட ஏசர் கிரிசியம் (Acer griseum) கன்னா அழகு மரம் அல்லது காகிதப்பட்டை மேப்பிள் (Paperbark Maple) மரம், அதன் வியக்கத்தக்க தண்டுப் பகுதிக்காகவும், கண்ணைக்கவரும் இலைகளுக்காகவும் உலகெங்கிலும் உள்ள தாவரவியலாளர்களை ஈர்த்து வருகிறது. பூங்காக்களிலும் தோட்டங்களிலும் ஒரு முக்கிய அலங்கார மரமாகத் திகழும் இதன் தாவரவியல் நுணுக்கங்களைப் பற்றி காண்போம்.

தாவரவியல் வகைப்பாடு மற்றும் பின்னணி: தாவரவியல் ரீதியாக இது சபிண்டேசி (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. மத்திய சீனாவின் மலைப்பகுதிகளில் இயற்கையாக வளரக்கூடிய இந்த மரம், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மெதுவாக வளரக்கூடிய, நடுத்தர அளவிலான (20 – 30 அடி) இலையுதிர் மரமாகும்.

தனித்துவமான புற அமைப்பியல் (Morphology): இந்த மரத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் பட்டை (Bark) ஆகும். மற்ற மரங்களைப் போலன்றி, இதன் பட்டை காகிதம் போன்ற மெல்லிய அடுக்குகளாகத் தானாகவே உரியும் (Exfoliation). வெளி அடுக்கு கரும்பழுப்பு நிறத்தில் இருந்தாலும், அது உதிர்ந்த பின் உட்புறம் செம்பு அல்லது ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் பளபளப்பாகக் காட்சியளிக்கும். இது மரத்தின் உட்புறத் திசுக்களைப் பாதுகாப்பதோடு, குளிர்காலத்தில் ஒளிச்சேர்க்கைக்குச் சிறிதளவு உதவுவதாகவும் கருதப்படுகிறது. மேலும் குளிர்காலத்தில் இலைகள் இல்லாத போது மரத்திற்கு ஒரு கலைநயத்தைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
இனி மணி பிளான்ட் தேவையில்லை! பணத்தை காந்தம் போல ஈர்க்கும் 'இந்த' ஒரு செடி போதும்!
paperbark-maple-tree

இலைகளின் கட்டமைப்பு: மேப்பிள் குடும்பத்தில் பெரும்பாலானவை ஒற்றை இலைகளைக் கொண்டிருந்தாலும், ஏசர் கிரிசியம் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட (Trifoliate) கூட்டு இலைகளைக் கொண்டுள்ளது. கோடையில் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் இலைகள், இலையுதிர் காலத்தில் (Autumn) பிரகாசமான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திற்கு மாறி நிலப்பரப்பையே அழகாக்குகின்றன. இதன் இலைகளின் அடிப்பகுதி சாம்பல்-பச்சை நிறத்தில் இருப்பதால், இதற்கு ‘கிரிசியம்’ (Griseum – சாம்பல் நிறம்) என்ற பெயர்க் காரணம் உருவானது.

பூக்கள்: இவை சிறியவை, மஞ்சள்-பச்சை நிறத்தில் தொங்கும் கொத்துகளாக (Cymes) வசந்த காலத்தில் பூக்கும். இது பொதுவாக ‘Androdioecious’ வகை, அதாவது ஆண் பூக்களையும் இருபால் பூக்களையும் ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இதன் விதைகள் ‘சமாரா’ என்று அழைக்கப்படும் இறக்கை போன்ற அமைப்பைக் கொண்டவை. இவை காற்றில் சுழன்று பரவக்கூடியவை.

இனப்பெருக்கச் சவால்கள் மற்றும் குறைந்த முளைப்புத் திறன்: இந்த மரம் அழிந்து வரும் நிலையில் இருப்பதற்குக் காரணம் அதன் சிக்கலான இனப்பெருக்க முறை ஆகும். இந்த மரத்தில் உருவாகும் விதைகளில் பெரும் பாலானவை கருவற்றவை (Parthenocarpy). இதனால் இதன் முளைப்புத் திறன் வெறும் 1% முதல் 5% வரை மட்டுமே உள்ளது. ஒருவேளை கருவுற்ற விதையாக இருந்தாலும், அதன் மேலுறை மிகவும் கடினமாக இருப்பதால் முளைப்பதற்கு நீண்ட காலம் (இரட்டை உறக்கநிலை) எடுத்துக்கொள்கிறது.

வளர்ப்பு மற்றும் பராமரிப்பு: இதை வளர்ப்பதற்குப் பொறுமை அவசியம். இது ஈரப்பதமான, நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணை விரும்புகிறது. விதைகள் மூலம் வளர்ப்பது கடினம் என்பதால், தாவரவியலாளர்கள் ஒட்டுக்கட்டுதல் (Grafting) அல்லது மென்கட்டை வெட்டுதல் முறைகளைப் பயன்படுத்திப் புதிய கன்றுகளை உருவாக்குகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூத்துக் குலுங்க... இதோ ஒரு மேஜிக் இயற்கை உரம்!
paperbark-maple-tree

ஏசர் கிரிசியம் என்பது வெறும் அலங்கார மரம் மட்டுமல்ல; அது இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு அரிய பொக்கிஷம். அதன் குறைந்த இனப்பெருக்கத் திறனால் இன்று இது அரிதாகிக்கொண்டே வருகிறது. எனவே, தாவரவியல் பூங்காக்களிலும் தனிநபர் தோட்டங்களிலும் இம்மரத்தைப் பாதுகாத்து வளர்ப்பது, வரும் தலைமுறைக்கு இந்தச் சீன அதிசயத்தைக் கொண்டுசெல்ல உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com